பெண்களுக்கு பொருத்தமான 7 கார்கள்

மன்னர் ஆட்சி காலம் போன்றதல்ல தற்போதைய காலம். வளர்ந்து வரும் நாகரீகங்களுடன் பெண்களும் இப்போது முன்னேற்றமடைந்து வருகின்றனர். விகிதாசார அடிப்படையில் முன்னரைவிட தற்போது அதிகமான பெண்கள் வாகனங்களை தாமே செலுத்துகின்றனர். எனினும் இலங்கை போன்ற நாட்டில் பெண்ணொருவர் வாகனம் செலுத்துவது என்பது விளையாட்டான விடயம் அல்ல. எப்படியாயினும், ஒரு 5 நிமிடங்கள் வீதியை பார்த்தால் அரைவாசி வாகன ஓட்டுனர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். இப்புரட்சி மோட்டார் கார்களில் மட்டுமல்ல என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும். இதன் காரணமாகவே, இலங்கை போன்ற நாட்டின் பெண்களுக்கு ஏற்ற 7 வாகனங்கள் தொடர்பாக பேச முடிவெடுத்துள்ளோம். அவற்றை தற்போது தெளிவாக பார்ப்போம்.

1. TOYOTA AQUA (PRIUS C)

இலங்கையின் வாகன பட்டியலில் முதலிடத்தில் உள்ளது எதுவென கேட்டால் அதிகமான பதில்கள் TOYOTA என்பதாகவே இருக்கும். அந்தளவிற்கு TOYOTA வாகனங்கள் இலங்கையில் பிரபல்யமாகியுள்ளன. TOYOTA வாகனங்களில் மிகவும் பரீட்சயமான MODEL தான் AQUA. அதன் HATCHBACK MODEL காரணமாகவே அதிகமான பெண்கள் இதனை விரும்பிப் பயன்படுத்துகின்றனர். அது மாத்திரமின்றி, இதன் அளவு மற்றும் வடிவமைப்பு மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதாலும் பலரும் இதை விரும்புகின்றனர். இது ஒரு AUTO வாகனம் என்பதால் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். இவ்வாகனத்தில் 1490 இன் என்ஜின் திறன் கொண்ட நான்கு சிலிண்டர்களுடன் IN -LINE WATER -COOLED DOHC என்ஜின் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனத்தை ஓட்டும்போது SMOOTH ஆக இருப்பதால் ஓட்டுவதற்கு மிகவும் சௌகரியமாக இருக்கும்.

 2. TOYOTA  VITZ  

இதுவும் ஒரு HATCHBACK MODEL என்பதால் பெண்களுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான காராக உள்ளது. அதேபோல், TOYOTA வாகனம் என்பதால் மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் அதிகமான MODEL இருந்தாலும் வரி பிரச்சினை காரணமாக 990 என்ஜின் கொள்ளளவு கொண்ட MODEL மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. இதுவும் ஒரு AUTO வாகனம்தான். என்ஜின் 1000 ஆகும். இதனை அதிகமான பெண்கள் வீதியில் ஓட்டுவதை கண்டிருப்பீர்கள். அடுத்து இதுவும் AQUA போல மிகவும் இலகுவானது. ஓட்டுவதற்கு மிகவும் எளிது. வடிவமைப்பும் மிகவும் அழகாக இருக்கும். இது ஒரு HYBRID வாகனம் அல்ல. அதேபோல், 2018 மற்றும் 2019 MODELகளில் FACELIFT மற்றும் NON FACELIFT என MODELகள் உள்ளன. இவற்றில் NON FACELIFT MODEL பெண்களுக்கு அதிகம் பொருத்தமாக இருக்கும்.

 3. HONDA  FIT        

இலங்கையில் HONDA எனும் BRAND சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற BRANDகள் சற்று விலை அதிகரித்தாலும் அதிகமான மக்கள் விரும்பி வாங்குகின்றனர். HONDA FIT இல் அதிகமான MODEL கள் பெண்களுக்கு ஏதுவாக இருக்கும். GP1 MODELஇல் இருந்து GP6 MODEL வரை இன்றளவும் மக்களிடத்தில் புழக்கத்தில் உள்ளது. அடிப்படையில் தோற்றமானது HATCHBACK இலும் AUTO GEAR SYSTEMஐயும் கொண்ட வாகனம். HYBRID தொழிநுட்பத்துடன் இணைந்து HONDA FIT நல்லதொரு எரிபொருளை சிக்கனமாக பாவிக்கக்கூடிய வாகனம். வெளிப்புற தோற்றம் மாத்திரமின்றி உள்ளேயும் சௌகரியமான அழகான தோற்றத்தை கொண்டிருப்பதோடு பெண்களுக்கு ஏற்றதாக அமைகின்றது.

 4. PERODUA  AXIA

AXIAவை பற்றி எமது முன்னைய REVIEW உள்ளது. அதன் மூலம் இதைப் பற்றிய விரிவான தகவல்களை அறியலாம். முன்பு கூறியதைப் போல இதுவும் ஒரு AUTO GEAR SYSTEM கொண்ட HATCHBACK MODEL ஆகும். அதேபோல 1000CC கொள்ளளவைக் கொண்ட சிலிண்டர் மூன்றிற்கு DOHC,12V,EFI என்ஜின் ஒன்றை VVTI  தொழிநுட்பத்துடன் இணைத்து இதற்கு பாவித்துள்ளார்கள். இவ்வாகனத்தை BUDGET வாகனப்பட்டியலில் சேர்ப்பது உகந்தது. அத்தோடு பெண்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்துள்ளார்கள்.

5. SUZUKI WAGON R / MAZDA FLAIR

இரண்டு MODELகளாக இருப்பினும் ஒரே என்ஜின்களாகத்தான் உள்ளது. பார்ப்பதற்கு பெரிய வாகனமாக தோற்றமளித்தாலும் பெண்களுக்கு உகந்ததாக காணப்படும். இதில் நிறைய MODELகள் உள்ளன. பெரிய என்ஜின் இல்லாமல் 660CC என்ஜினை பொருத்தியுள்ளார்கள். அலுவலகத்திற்குச் செல்வோர் மத்தியில் இந்த வாகனம் பிரபலமடைந்துள்ளது. அதிகமான பெண்களை கவர்ந்ததாலும் BUDGET வாகனமாக இருப்பதுவுமே இதற்குக் காரணம்.

6. TOYOTA IST 

TOYOTA IST  என்பது தற்போது பாவனையில் இல்லாத வாகனமாகும். 2016ஆம் ஆண்டளவிலேயே இவ்வாகனம் இறுதியாக தயாரிக்கப்பட்டது. இதுவும் AQUA , VITZ போன்ற HATCHBACK வாகனமாகும். இது 1.5 என்ஜினை கொண்டது. இவ்வாகனத்தை வாங்க ஆசைப்படுபவர்கள், பாவித்த வாகனம் ஒன்றைத்தான் பெற வேண்டும். HYBRID அல்லாத வாகனங்களில் அதிகமாக பெண்கள் விரும்பும் வாகனங்களில் இதுவும் அடங்கும். சாதாரண TOYOTA வாகனங்களில் காணப்படும் அனைத்து வசதிகளையும் இதில் காணலாம்.

7. KIA PICANTO

2004ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த வாகனம் இன்றளவிலும் பாவனையில் உள்ளது. இப்படி உள்ள போதிலும் இதன் 3ஆம் பதிப்பும் வெளியாகியுள்ளது. சாதாரண BUDGET பட்டியலிலும் இதனை உள்ளடக்க முடியும். இந்த வாகனத்தின் HATCHBACK தோற்றமும் வளைந்த தோற்றமும் பெண்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இதன் MODELகளில் MANUAL மற்றும் AUTO என்று வந்தாலும் பொதுவாக பெண்கள் AUTOவைத்தான் விரும்புகிறார்கள். பாதுகாப்பு அடிப்படையில் பார்க்கும் போது ASEAN NCAP பாதுகாப்பு தர அடிப்படையில் 5 இற்கு 4 புள்ளிகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.