சிறந்த CLOUD சேவை எது?

கடந்த காலங்களில் நாம் கணினி வேலைகளுக்கு நினைவகங்களாக 2 MB இடம்கூட இல்லாத FLOPPY DISK களை பயன்படுத்தினோம் என்று நினைக்கும்போது நமக்கே ஆச்சரியமாக உள்ளது. இதன் வளர்ச்சி காரணமாக CD வந்தது. அதன்பின் MEMORY CARD, PEN  DRIVE, DVD, BLURAY DISK, EXTERNAL HARD DISK போன்ற பல நினைவகங்கள் வந்தன. இப்போதைய காலத்தில் TERABYTE அளவுக்கு HARD DISK களைக்கூட மிகவும் சாதாரணமாக காண முடிகின்றது. அது மட்டுமின்றி அதிகமானோர் 4 TB HARD DISK களைக்கூட பாவிக்கின்றனர். ஆனால் இன்றளவில் அதிகமானோர் பாவிக்கக்கூடிய ஒன்றுதான் இந்த CLOUD நினைவகம். இதற்கு இணைய சேவை மட்டுமே தேவை.

தற்போது அதிகமான CLOUD நினைவகங்கள் உள்ளதென்பதால் நமக்கு CLOUD சேவைக்கு கஷ்டப்படத் தேவையில்லை. நமக்கு உகந்த நல்ல நினைவக சேவையை இங்கு இருப்பவற்றிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும்.

1. GOOGLE DRIVE

உலகில் அதிகமானோர் இன்று கூகிள் டிரைவ் பயன்படுத்துகின்றனர். GOOGLE ACCOUNT ஒன்றை உபயோகிக்கும் ஒருவருக்கு GOOGLE இனால் இலவசமாக GOOGLE ACCOUNT இல் 15GB நினைவகம் வழங்கப்படும். இந்த GOOGLE ACCOUNT இனை அதிக காலமாக பாவிக்கும் ஒருவருக்கு இது நிச்சயமாக போதாமல் போகும். ஆனால் இந்த GOOGLE DRIVE மிகவும் இலகுவானதும் பாதுகாப்பானதும் நமது முக்கியமான தரவுகளை மேம்படுத்தியும் வைக்கக்கூடியதாகும். இதனால் GOOGLE DRIVE ஐ அதிகமானோர் உபயோகிக்கின்றனர்.

2.  DROP BOX

இது விசேடமாக அலுவலகங்களில் உபயோகிக்கும் பிரபலமான ஒரு நினைவகமாகும். இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால்  இதனுள் உள்ள விடயங்களை இலகுவாக BACKUP மற்றும் SYNC செய்து கொள்ள முடியும். இதுவும் ஒரு சிறந்த CLOUD SERVICE நினைவகமாகும். ஆனால் இதில் வெறும் 2GB நினைவகம் மாத்திரமே இலவசமாக வழங்கப்படும்.

3. ONEDRIVE

GOOGLE பயன்படுத்துவோருக்கு GOOGLE DRIVE இருப்பது போலவே MICROSOFT பயன்படுத்துவோருக்கு MICROSOFT ONEDRIVE உள்ளது. MICROSOFT ACCOUNT ஒன்றை திறக்கும் ஒருவருக்கு 5GB நினைவகம் இலவசமாக கிடைக்கும். அலுவலகங்களில் பணிபுரிவோர் மற்றும் OUTLET EMAIL சேவையை பயன்படுத்துவோர் மத்தியில் இதனை அதிகமாக காணக்கூடியதாக உள்ளது.

4. ICLOUD

மற்ற எல்லா CLOUD சேவைகளைப் போலவும் APPLE பயனர்களுக்கும் ICLOUD எனும் பெயரில் ஒரு CLOUD சேவை தரப்பட்டுள்ளது. இதில் தமது சொந்த கோப்புக்கள், படங்கள், போஃல்டெர்கள் போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம். இதன் நினைவக கொள்ளளவு 5GB யாக இருந்தாலும் இதனை மேலும் அதிகரித்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு பணம் செலுத்த வேண்டும்

5. AMAZON CLOUD DRIVE

AMAZON CLOUD சேவை என்பது AMAZON பயனர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு நினைவாக சேவையாகும். இதன் கொள்ளளவு 5GB ஆகும். AMAZON சேவையின் கூற்றின்படி, இங்கு 24 மணித்தியால பயனர் சேவை உள்ளதால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அழைப்பினை ஏற்படுத்தி பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம். இந்த சேவை AMAZON KINDLE பாவனையாளர்களுக்கும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

6. MEDIA FIRE

இந்த சேவை சிறிது காலத்திற்கு முன்னர் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இன்று இதன் பயன்பாடு சற்று குறைந்துள்ளது. முன்னர் இதனை ஒன்லைன் கோப்புகள் மற்றும் படங்களை பகிர்ந்துகொள்ள பயன்படுத்தினாலும் இன்று தரவுகளை சேமிக்கும் ஒரு நினைவக சேவையாகத்தான் இதனை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் இதில் 10GB வரை கொள்ளளவு இலவசமாக வழங்கப்பட்டாலும் இதனை 50GB வரை அதிகரித்துக்கொள்ள முடியும். ஒரே தடவையில் அதிகமான FILES களை பதிவேற்றவும் முடியும்.

7. MEGA

இது DROPBOX இற்கு சம்பந்தப்பட்ட ஒரு சேவை போல தோன்றும். ஆனால் இதில் 50GB வரையான நினைவக கொள்ளளவு வழங்கப்படுகின்றது. இதன் மூலம் எந்த நேரம் வேண்டுமானாலும் உங்களது தரவுகளை பதிவேற்றம் செய்ய முடியும். இதன் தரவுகளை உங்களுக்கு மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டுமாயின் அதனை ZIP FORMAT இல் செய்து கொள்ளமுடியும். தரவுகளை சிறந்த முறையில் பாதுகாக்கும் ஆற்றலும் இதற்குண்டு.