உலகின் சக்திவாய்ந்த புலனாய்வு அமைப்புகள்

ஒரு நாட்டின் உளவுத்துறை என்பது பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு சேவையாகும். புலனாய்வு பிரிவு என்பது ஒரு நாட்டினுள் அல்லது வெளியே ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அறிந்த, அறிந்துகொள்ளும் முதல் பிரிவாகும். இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த  உலகின் உயர்மட்ட புலனாய்வு அமைப்புகளின் 2019 தரவரிசையில் இருந்து சமீபத்திய உளவுத்துறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

1. MOSSAD

மொசாட் – இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பாகும். உலகின் மிக சக்திவாய்ந்த 10 அணு ஆயுத நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும். இஸ்ரேலின் உளவுத்துறை சமூகத்தின் மூன்று கிளைகளில் மொசாட் ஒன்றாகும். மொசாட் வெளிநாட்டு உளவுத்துறையை ஆராயும்போது, ​​ஏனைய இரண்டு கிளைகளும் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் இராணுவ உளவுத்துறையை கையாள்கின்றன. ஏனைய  நாடுகளிலிருந்து இஸ்ரேலை பாதிக்கக்கூடிய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களும் இந்த நிறுவனத்தில் உள்ளன.

2. CENTRAL INTELLIGENCE AGENCY (CIA)

சி.ஐ.ஏ. அமெரிக்க வெளிநாட்டு புலனாய்வு அமைப்பாகும். உலகின் மிகவும் பிரபலமான அறிவுசார் நிறுவனங்களில் சி.ஐ.ஏ. ஒன்றாகும். இதற்குக் காரணம், ஹொலிவுட் படங்களில் பெரும்பாலானவை சி.ஐ.ஏ. தொடர்பான கதைகளைக் கொண்டுள்ளன. சி.ஐ.ஏ. 1947இல் நிறுவப்பட்டது. அந்தவகையில் உலகின் பழைமையான புலனாய்வு அமைப்புகளில் சி.ஐ.ஏ. ஒன்றாகும். அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிற நாடுகளின் வளர்ச்சி, பயங்கரவாதம் மற்றும் பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அணு அல்லது பொது போர் உபகரணங்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதே இந்நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒரு பகுதியாகும்.

3. MINISTRY OF STATE SECURITY (MSS)

எம்.எஸ்.எஸ் என்பது சீனாவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பாகும். இந்நிறுவனம் 1983ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பெய்ஜிங்கை தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம் நாடு முழுவதும் 17 துணைக் கிளைகளைக் கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சீனாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு வழங்குநரான HUAWEIஉடன் இணைந்து உலகம் முழுவதிலுமிருந்து உளவுத்துறையை எம்.எஸ்.எஸ் சேகரிக்கிறது. சீனாவின் இணைய இணைப்புகளை ஆய்வு செய்தல், நாட்டிற்கு வெளியிலிருந்து குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்துதல், சீன குடிமக்களைப் பாதிக்கும் விஷயங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உதவுதல் போன்ற சேவைகளையும் இது வழங்குகின்றது.

4. AUSTRALIAN SECRET INTELLIGENCE SERVICE (ASIS)

அவுஸ்ரேலியாவின் கான்பெர்ராவை தலைமையகமாகக் கொண்ட அவுஸ்ரேலிய புலனாய்வு சேவை உலகின் மிக சக்திவாய்ந்த புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வைப் போலவே சக்திவாய்ந்ததாகக் கூறப்படுகிறது. நாட்டிற்கு வெளியிலுள்ள அறிவுசார் தகவல்களுடன் இந்நிறுவனம் செயற்படுகிறது. ASIS 1952இல் நிறுவப்பட்டது. ஆனால் 1972 அவுஸ்ரேலிய செய்தித்தாள் தி டெய்லி டெலிகிராப் அதை வெளியிட்டதிலிருந்து ASIS பொதுமக்களுக்கு இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

5. CANADIAN SECURITY INTELLIGENCE SERVICE (CSIS)

உலகின் பாதுகாப்பான நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். நாட்டின் பாதுகாப்பை இவ்வாறு சிறந்த முறையில் பேணியதற்கு சி.எஸ்.ஐ.எஸ்-க்கு நன்றி சொல்ல வேண்டும். இது கனடாவின் முதன்மையான புலனாய்வு அமைப்பு. அந்தவகையில் கனடாவின் அனைத்து மாநில பாதுகாப்பு பணிகளையும் செய்கிறது. இதற்கு மேலதிகமாக, இது அமெரிக்கா, பிரித்தானியா , கனடா, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ‘FIVE EYES’ அறிவுசார் ஒப்பந்தத்தின் கனேடிய பிரதிநிதி ஆகும். FIVE EYES என்பது வரலாற்றில் மிகப்பெரிய புலனாய்வு ஒப்பந்தமாக கருதப்படுகிறது.

6. DIRECTORATE – GENERAL FOR EXTERNAL SECURITY (DGSE)

டி.ஜி.எஸ்.இ என்பது ருவாண்டாவில் 1990களின் உள்நாட்டுப் போரில் முக்கிய பங்கு வகித்த ஒரு அமைப்பாகும். டி.ஜி.எஸ்.இ. பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகிறது. இந்நிறுவனம் வெளிப்புற உளவுத்துறையுடன் செயற்படுகிறது. அத்தோடு உள் விவகாரங்களுக்கு தனிப் பிரிவுள்ளது. பொதுப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விடயங்களும் இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை பொதுமக்களிடமிருந்து மறைப்பதில் கவனமாக இருக்கிறது. இதனால்தான் நிறுவனத்தின் கடந்த கால அல்லது தற்போதைய நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்வது மிகவும் கடினமாகவுள்ளது.

7. RESEARCH AND ANALYSIS WING (RAW)

உளவுத்துறையின் மிகவும் பிரபலமான பெயர்களில் RAWவும் ஒன்றாகும். எமது அண்டை நாடான இந்தியாவின் உளவுப்பிரிவே RAW. இது உலகின் புலனாய்வு அமைப்புகளிடையே பரவலாக அறியப்படாத ஒரு அமைப்பு மற்றும் பலரால் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகத்தான்  கருதப்படுகிறது. ஆனால் இது உலகின் சிறந்த புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாகும். 1968ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அமைப்பானது இந்தியாவின் பாதுகாப்பு, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் இந்தியாவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிற நாடுகளின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மிகவும் இரகசியமாக இருக்கும் இந்த நிறுவனத்தின் விவகாரங்கள் குறித்த தகவல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும்.

8. FEDERAL INTELLIGENCE SERVICE (BND)

இது ஜேர்மனியின் பி.என்.டி. புலனாய்வு அமைப்பாகும். 1956இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் நேரடியாக ஜேர்மன் தூதரகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும். நாட்டின் ஒரே வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு இதுவாகும். இராணுவ மற்றும் சிவில் உளவுத்துறையை அணிதிரட்டுவதே இதன் முக்கிய பொறுப்பாகும். இந்த நிறுவனம் பயங்கரவாதம், அணுசக்தி தாக்குதல்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது. இரகசிய தொலைபேசி உரையாடல்களுக்கும் மின்னணு சாதனங்களில் உளவு பார்ப்பதற்கும் பி.என்.டி மிகவும் பிரபலமானது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் மது நாட்டு புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் கையாளப்பட்டதால் எம்மவர்களும் முக்கிய இடத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.