இன்று சிறு பிள்ளைகளின் கைகளில்கூட செல்போன்கள் வந்துவிட்டன. முன்னர் அப்படியில்லை. யாராவது எமது உறவினர்களின் கைகளில் செல்போனை கண்டால் போராடியே பெறவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் நாங்கள் எமக்கென தனித்துவமான விளையாட்டுக்களை கொண்டிருந்தோம். அதன்மூலம் நட்பு வளர்ந்தது. உறவுகள் வலுப்பெற்றன. நாங்கள் அயல்வீட்டு நண்பர்களுடன் அவ்வாறு விளையாடிய விளையாட்டுக்களை என்றும் மறக்க முடியாது.
1. ஐஸ் பைஸ் (THARAADE / ICE PAICE)
தராட என்ற இந்த விளையாட்டை ஐஸ் பைஸ் என்றும் அழைப்பதுண்டு. இந்த விளையாட்டை விளையாட டின் ஒன்றை எடுத்து அதனை கற்களால் நிரப்ப வேண்டும். அந்த கற்கள் கொட்டாதவாறு நன்கு மூடிவிட வேண்டும். பின்னர் அந்த டின்னை தூக்கி மேலே எறிந்துவிடும் சந்தர்ப்பத்தில் எல்லோரும் சென்று ஒழிந்துகொள்ள வேண்டும். ஒருவரை காணும் போது, அவர் தனது விளையாட்டுப் பெயரான தராட என்று கூறவேண்டும். பின் அவர் சென்று அந்த டின்னை தொடமுன் யாராவது வந்து அந்த டின்னை உதைத்துவிட்டால் மீண்டும் அவரே தராட ஆகிவிடுவார்.
2. ஜில் போல் அடித்தல் (JIL BALL)
தரையில் ஒரு பெட்டி உருவை கீறிக்கொள்ள வேண்டும். அந்த கோட்டினுள் ஒரு வலைக்கூடு ஒன்றும் இருக்கும். விளையாடுபவர்களுக்கு ஜில் போல்கள் இருக்கும். அவர்கள் கையில் ஒரு ஜில்போலை வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் அக்கோட்டினுள் போட்டு விடுவார்கள். நீங்கள் ஒரு ஜில்லின் மூலம் உள்ளே போட்ட அனைத்து ஜில்களையும் அடிக்க வேண்டும். அந்த ஜில்கள் அந்த வலைக்கூடை விட்டு வெளியேறும் வரை அடிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அது அடுத்தவருக்கு திரும்பி விடும்.
3. டக் டக் (TAK TAK)
‘’ டக் டக், யாரது? , பேய், என்ன வேண்டும்?, நிறம் வேண்டும். என்ன நிறம்?” என்றவுடன் பேயாக கூறப்படுபவர் ஒரு நிறத்தைக் கூற அதனை ஒருவர் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பேய் அவரைத் தொட, அவர் பேயாக மாறிடுவார்.
4. பட்டா பாய்தல் (BATTA)
இந்த விளையாட்டில் 1 முதல் 8 வரையான பெட்டிகள் இருக்கும். கூர்மையற்ற ஒரு ஓட்டுத் துண்டும் இருக்கும். 1 முதல் 8 வரையான பெட்டிகளை சரிவர தாண்டி முடிப்பவர் வெற்றியாளர். அவ்வாறு இல்லாமல் பெட்டிகளின் கோடை மிதித்து விட்டால் அவர் தோற்றுவிடுவார்.
5. எல்லே (ELLE)
இந்த விளையாட்டில் இரண்டு அணிகள் இருக்கும். அதில் ஒரு அணியினால் ஒரு சிறிய மரக்குச்சி சற்று நீளமான மரக்குச்சியினால் தூக்கி எறியப்படும். எதிர் அணியினர் சிறிய மரக்குச்சியை பிடிக்க வேண்டும். அப்படி இல்லையாயின் அதனை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தூக்கி எறிய முடியும்.
6. ஐஸ் வாட்டர் (ICE WATER)
இது ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டுதான். ஆனால் சற்று முன்னேற்றமடைந்துள்ளது. இங்கு விரட்டிச் செல்பவர் மற்றவரை பிடித்தால் ஐஸ் என்று கூறியே பிடிக்க வேண்டும். அதன் மூலம் பிடிக்கப்பட்டவர் அங்கிருந்து நகர முடியாது. அவர் அங்கிருந்து நகர மற்றுமொருவர் வந்து அவரை வாட்டர் என்று கூறி தொட்டாலே போதும்.
7. மஸ்கட்டை (MASKATTA)
கபடி ஒன்றின் சாதாரண தர விளையாட்டு போலவே இதுவும் அமைந்துள்ளது. இங்கு நடுவில் இறைச்சி துண்டாக சித்தரிக்கப்படும் ஒரு மரக்கட்டை இருக்கும். அதனை எடுக்க இருவர் வருவதற்கு முன் அடுத்த அணியில் இருந்து ஒருவர் வந்து அதனை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு முன் ஏற்கனவே வந்த இருவரில் ஒருவர் அதனை எடுத்து விட்டால் அடுத்த அணி தோற்றுவிடும்.