புதிய வாகன கெட்ஜெட்ஸ்

உலகில் அதிவேகமாக வளர்ந்துவரக்கூடிய ஒரு தொழிநுட்பமாக AUTOMOBILE தொழிநுட்பத்தை குறிப்பிடலாம். 1769 தொடக்கம் இன்று வரை இந்த தொழிநுட்பத்தின் வளர்ச்சியானது நினைத்து பார்க்க முடியாத உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல் வாகனங்களின் உள்ளே காணப்படும் நவீன உபகரணங்களும் அதீத வளர்ச்சியை எட்டியுள்ளன. அவற்றில் புதிதாக சேர்க்கப்பட்டவற்றை பார்ப்போம்.

LANE DEPARTURE WARNING

ஓட்டுநர் வழியிலுள்ள கோட்டை விட்டு வெளியேறும் போது LANE DEPARTURE WARNING எனும் அம்சத்தை பயன்படுத்தலாம். இலங்கையில் இந்த பாதையில் கோட்டு வழிப்பாதை உள்ளதென்பதால் இந்த தொழிநுட்ப முன்னேற்றமானது மிகவும் பயனுள்ளதாக  இருக்கும். குறிப்பாக புதிதாக வாகனம் செலுத்துவதற்குக் கற்கும் ஒருவருக்கு இந்த அம்சம் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

 

AUTOMATIC EMERGENCY BRAKE

வீதியில் நாம் செல்லும் போது முன்னால் ஒரு வாகனமோ அல்லது ஒரு குழியோ அல்லது ஏதாவது தடை இருப்பின் நாம் BRAKE இனை அழுத்த வேண்டும். ஆனால் தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சியானது இதனை மிகவும் இலகுவாக்கியுள்ளது. ஏனென்றால் வீதியில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் தடைகளையும் நாம் எதிர்பார்த்திருக்க முடியாது. உதாரணமாக நாம் வீதியில் வாகனத்தில் செல்லும் போது ஒரு வாகனம் குறுக்கே வந்துவிட்டால் விரைவாக நமக்கு BRAKE பிடித்து நிறுத்த முடியாமல் போகலாம். சிலர் நிறுத்தினாலும் அதிகமானோருக்கு இது மிகவும் கடினமான ஒன்று. அதனாலேயே இந்த தொழிநுட்பம் உள்ள வாகனத்தில், முன்னால் ஒரு தடை வந்துவிட்டால் இந்த OPTION மூலம் தன்னிச்சையாக வாகனம் நின்றுவிடும். இது முதலில் ஒலி சமிக்ஞையினை ஏற்படுத்தும். இரண்டாவது மீட்டர் இருக்கும் இடத்தில் ஒரு குறியீட்டை காட்டும். மூன்றாவது அதுவாகவே வாகனத்தை நிறுத்திவிடும்.

 

ADAPTIVE CRUISE CONTROL

இந்த CRUISE CONTROL அதிகமான வாகனங்களில் உள்ளது. அதை நாமே நிர்வகிக்க வேண்டும். ஆனால் இந்த ADAPTIVE CRUISE CONTROL மூலம் வாகனத்தின் வேகத்தை எதிரே வரும் வாகனத்தின் வேகத்திற்கு சமனாக செலுத்த முடியும். இந்த தொழிநுட்பத்தின் உதவியின் மூலமே AUTOMATIC EMERGENCY BRAKING SYSTEM வேலை செய்கின்றது.

 

STOLEN VEHICLE TRACKING

அதிகமான வாகனங்களில் இந்த GPS TRACKING DEVICES களை மேலதிகமாக வாங்கி இணைத்துக் கொள்கின்றனர். ஆனால் இன்றைய வளர்ந்துவரும் தொழிநுட்பத்தில் இந்த GPS முறையை வாகனத்தில் பொருத்தியே வாகனத்தை உருவாக்குகின்றனர். அதன் மூலம் அதற்கு ஏற்ற APPLICATION ஐயும் அந்த வாகன நிறுவனத்தின் மூலம் பெறலாம். இதன் மூலம் நமது வாகனத்தை கண்காணிக்க முடியும். அதன் இருப்பிடத்தை GPS மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

PARK PILOT

வாகனத்தை ஓட்டுவதைவிட அதனை PARK செய்வது சிரமமான விடயம் என்று அதிகமானோர் கூறுவதை கேட்டிருக்கக்கூடும். அதேபோல் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இவ்விடயத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இவ்வாறு கஷ்டப்படுவோருக்காக உருவாக்கப்பட்ட தொழிநுட்பமே PARK PILOT அல்லது PARK ASSIST என்பதாகும். 360 CAMERA தொழிநுட்பத்தின் மூலம் இந்த வாகன PARKING தொழிநுட்பம் செயற்படுகின்றது. உதாரணமாக இரு வாகனங்களுக்கு இடையில் PARKING செய்ய வேண்டுமென்றால் பக்கத்திலிருக்கும் வாகனங்கள் மீது படாமல் அதனை செய்ய வேண்டும். அதனை இந்த GADGET இல் உள்ள CENSOR கள் துல்லியமாக காட்டித்தரும். அதன்படி நாம் பாதுகாப்பாக வாகனத்தை PARKING செய்ய முடியும்.

 

TIRE PRESSURE MONITORING SYSTEM

எமது வாகனத்தின் டயர்களில் போதியளவு காற்று உள்ளதா என்பதை பார்த்துவிட்டே ஓட்ட வேண்டும். அதனை கவனிக்க மறந்து வாகனத்தை செலுத்தினால் வாகனத்தின் டயர் காற்று போய் இடைவழியில் அசௌகரியத்துக்கு உள்ளாக வேண்டிவரும். இந்த அசௌகரித்தை தவிர்க்கவே இந்த தொழிநுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இதனை நாம் TIRE PRESSURE MONITORING SYSTEM என்று அழைப்போம். இதன்மூலம், நாம் வாகனத்தில் அமர்ந்தவுடன் டயர்களில் போதியளவு காற்றுள்ளதா என்பதை காட்டும். அதன் பிரகாரம் நாம் டயர்களை கழற்றி காற்றினை நிரப்பிக்கொள்ளலாம். உண்மையில் இது மிகவும் பயனுள்ள தொழிநுட்பமாகும்.

 

ELECTRONIC AIR SUSPENSION 

வாகனத்தின் உயரத்தை வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமாக இருப்பதே ELECTRONIC AIR SUSPENSION  என்று கூறுவார்கள். நீங்கள் கரடுமுரடான வீதியில் செல்லும்போது வாகனத்தின் உயரத்தை அதிகரித்து வைத்திருந்தால் சௌகரியமான பயணத்தை மேற்கொள்ளலாம். அதனை இந்த SYSTEM மூலம் நீங்கள் பெறலாம். அது மட்டுமின்றி அதிவேக நெடுஞ்சாலைகளில் (HIGHWAY) செல்லும்போது வேகமாக செல்ல உயரத்தை குறைத்துக்கொள்ளலாம்.