சமபோஷாவிலிருந்து தயாரிக்கும் ஏழு உணவுகள்

சமபோஷா ஒரு சிறந்த சத்துணவு என்பது அனைவருக்கும் தெரியும். சமபோஷா, திரிபோஷா ஆகியவை சிறு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு மிகவும் ஏற்றவை. இந்த விடயங்களை நாம் சொல்லும்போது, ​​எப்போதும் நாம் தயாரிக்கும் சமபோஷா உருண்டைதான் நினைவிற்கு வரும். ஆனால், சமபோஷாவால் இன்னும் சுவையான உணவை தயாரிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Lifie உங்களுக்கு புதிய விடயங்களை தருகின்றது. அந்தவகையில் இந்த வாரம் உங்களுக்கு சில சிறந்த சுவையான சமபோஷா சமையல் குறிப்புகளை இங்கு தருகின்றோம். சுவைத்து மகிழுங்கள்.

சமபோஷா முறுக்கு

தேவையான பொருட்கள்

  • சம்போஷா – 200 கிராம்
  • அரிசி மா – 100 கிராம்
  • பட்டர் – 2 தேக்கரண்டி
  • கடலை மா – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப
  • மிளகாய்த் தூள் – சிறிதளவு

முதலில் இவை அனைத்தையும் ஒரு சூடான நீரில் போட்டு நன்கு ஒட்டும் தன்மை வரும் வரை கலக்கவும். பின்னர் எண்ணெய்யை சூடாக்கி, அதில் முறுக்கு பிழியும் அச்சின் மூலம் பிழிந்து பொரிக்கவும்.

 

சமபோஷா குக்கீஸ்

தேவையான பொருட்கள்

  • சமபோஷா – 200 கிராம்
  • சர்க்கரை – 200 கிராம்
  • உப்பு – சிறிதளவு
  • வெண்ணெய் – 150 கிராம்
  • முட்டை – 1
  • சொக்கலேட் சிப்ஸ்
  • பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி

முதலில் சீனியையும் பட்டரையும் சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பின் சமபோஷாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா இட்டு நன்கு கலந்துகொள்ளவும். இவை அனைத்தையும் பட்டர் கலவையுடன் சேர்த்து கலக்கவும். பின்னர் இதனுள் சொக்கலேட் குக்கீசையும் சேர்த்து பிரட்டவும். இதனை ஒரு அச்சில் அல்லது ஒரு தட்டில் போட்டு 120 பாகை சூட்டில் 20 நிமிடங்கள் வரை ஒவெனில் வைத்து எடுக்கவும்.

 

சமபோஷா கப் கேக்

தேவையான பொருட்கள்

  • வெண்ணெய் – 250 கிராம்
  • சர்க்கரை – 250 கிராம்
  • முட்டை – 5
  • பால் – 3/4 கப்
  • வெணிலா சுவையூட்டி
  • பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
  • கோதுமை மா – 50 கிராம்
  • சமபோஷா – 200 கிராம்
  • பேரீச்சம்பழம் – சிறிதளவு
  • முந்திரிப்பழம் – சிறிதளவு

முதலில் சீனியையும் பட்டரையும் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் முட்டையின் மஞ்சள் கருவை மாத்திரம் சேர்த்து கலக்கவும். இதில் வெணிலா சுவையூட்டி மற்றும் பால் சேர்த்து கலக்கவும். சமபோஷாவுடன் கோதுமை மா, பேக்கிங் பவுடர் சேர்த்து வேறாக கலந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனுள் வெள்ளைக் கருவையும் சேர்த்து கலக்கவும். இந்த அனைத்து கலவையையும் ஒன்றாக சேர்த்து கலந்த பின் ஒரு கப் கேக் தட்டினில் ஊற்றி, அவற்றின் மீது பேரீச்சம்பழம் மற்றும் முந்திரி துண்டுகளை இட்டுக்கொள்ளுஙகள். இதனை 180 பாகை வெப்பத்தில் 20 வினாடிகள் வரை ஒவெனில் வைத்து எடுத்து சாப்பிடவும்.

 

சமபோஷா ரொட்டி

தேவையான பொருட்கள்

  • சமபோஷா – 2 கப்
  • கோதுமை மா – 1 கப்
  • தேங்காய்ப் பால் – 2 கப்
  • முட்டை – 2
  • உப்பு – சிறிதளவு

இங்கு தரப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒரு இறுக்கமான கலவையை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை தட்டு ஒன்றில் போட்டு ரொட்டி போல் சுட்டு எடுக்கவும். ரொட்டியுடன் சாப்பிடும் கறி ஒன்றுடன் சேர்த்து சாப்பிடவும் முடியும்.

 

சமபோஷா பிட்டு

தேவையான பொருட்கள்

  • சமபோஷா – 1 சிறிய பக்கற்
  • துருவிய தேங்காய் – 1 கப்
  • பால் – 1 கப்
  • உப்பு – சிறிதளவு
  • நீர் – தேவைக்கேற்ப

அரிசி மா, சமபோஷா, உப்பு மற்றும் தேங்காய்த் துருவலை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையில் நீர் சேர்த்தும் கலக்கவும். சாதாரணமாக பிட்டு செய்வதை போலவே செய்து எடுக்கவும்.

 

சமபோஷா மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்

  • பால் – 2 கப்
  • சர்க்கரை – 3 தேக்கரண்டி
  • சமபோஷா – 2 தேக்கரண்டி

மேலே உள்ள அனைத்தையும் கலக்கவும். பின்னர் வெணிலா சுவைகொண்ட ஐஸ்கிரீமை அதன் மேல் வைத்து பருகவும்.

 

சமபோஷா கஞ்சி

தேவையான பொருட்கள்

  • சமபோஷா – 200 கிராம்
  • தேங்காய் பால் – 2 கப்
  • ஓட்ஸ் – 2 தேக்கரண்டி
  • சர்க்கரை – சிறிதளவு
  • உப்பு – சிறிதளவு

சமபோஷா மற்றும் ஓட்ஸ் சேர்த்து சிறிது சூடான நீரில் கலக்கவும். இப்போது இந்த கலவையை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும். நன்கு சூடாகியவுடன் அதனுள் தேங்காய்ப் பால் சேர்க்கவும். நன்கு கொதித்து குமிழிகள் வரும் வரை காத்திருக்கவும். பின்னர் அதன் மேல் முந்திரி மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து பரிமாறவும்.