இலங்கையில் நாம் சுவைக்க முடியாத 7 உணவுகள்

நான் எதையும் சாப்பிடுவேன் என்று கூறி பெருமைப்படும் அண்ணாமார்களுக்கு, பார்க்கக்கூட முடியாத அளவுள்ள உணவுகள் இந்த உலகில் உள்ளதென்பதை காட்டுவதற்கு எழுதப்படும் கட்டுரையே இது. இது எமக்கும் அவசியமான கட்டுரையே. வாழ்க்கையில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சமைக்கப்பட்ட உணவுகளை பற்றியே இன்று பேசவுள்ளோம். வாருங்கள் கட்டுரையை தொடர்வோம்.

 

1. நாய் இறைச்சி சாப்பிடுவோமா?

வீட்டில் செல்லமாக விளையாடும் ஒரு பிராணியாக அல்லது தெருவில் குறைத்துத்திரியும் பிராணியாகவே நாம் நாயை பார்த்துள்ளோம். ஆனால் சில நாடுகளில் நாய்களை வீட்டு அடுப்பறையில் கறியாகத்தான் பார்க்க முடியும்.  இவ்வாறான நாய்க்கறியை விரும்பி உண்ணும் நாடுகளாக சீனா, வட மற்றும் தென் கொரியா, நைஜீரியா போன்ற நாடுகள் பெயர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. விருப்பத்தின் அடிப்படையில் சீனாவில் ஆண்டிற்கு ஒருமுறை “நாய் இறைச்சி பண்டிகை” கூட உள்ளது.

 

2. பாம்பு இறைச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பாம்பு என்றால் நினைவிற்கு வருவது அதன் நெகிழும் தன்மையும் ஒருவிதமான சிலிர்ப்பை உண்டாக்கக்கூடிய உடல் தோற்றமும்தான். பாம்பென்றால் படையே நடுங்கும் என்று கூறக்கூடிய காலம் போய் இன்று பாம்பு இறைச்சி உண்ணும் ஒரு பட்டாளமே வந்துவிட்டது. ஆம் ஒருபுறம் நாம் பாம்பிற்கு பயந்து கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் பாம்பை சாப்பாட்டுத்தட்டில் போட்டு உண்கின்றனர். சீனா, வியட்நாம், அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் பாம்பை விரும்பி உண்கின்றனர்.

 

3. செம்மறி ட்டின் தலையை உண்ண முடியுமா?

செம்மறி ஆட்டின் உடலிலிருந்து உரோமங்களை எடுத்து ஆடை செய்வது மாத்திரமே எமக்குத் தெரியும். ஆனால் அவ்வாறான சில நாடுகளில் அவற்றிலிருந்து மீண்டும் உரோமங்களை பெறமுடியாதபோது நடக்கும் விடயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம் வழமை போன்று கறிதான். ஆனால் இந்த கறியில் மேலும் ஒரு விடயம் சேர்ந்திருக்கும். அதுதான் செம்மறியாட்டுத் தலை. அதுவும் அந்த தலை சாப்பாட்டுத்தட்டில் போட்டுத் தரப்படும். இப்படி உண்ணும் உணவிற்கு நோர்வே நாட்டு மக்கள் “SMALAHOVE” எனும் விசேட பெயரையும் சூட்டியுள்ளனர். நோர்வே மாநிலம் இந்த உணவின் பிறப்பிடம் என்று அழைக்கப்படுகிறது.

 

4. எறும்பு முட்டையும் உணவு!

கோழி முட்டையை சாப்பிட்ட நாம் எறும்பு முட்டையை சாப்பிடுவோமா?  ஆனால் அதையும் கிலோ அளவிற்கு விற்கக்கூடிய நாடுகள் உள்ளன. ஆம் தாய்லாந்தில் எறும்பு முட்டைகளுக்கு நல்ல வரவேற்புள்ளது. எறும்பு முட்டைகளில் புரதம் நிறைந்துள்ளது. ஆனால் கோழி முட்டைகளைப் போல கொழுப்பு மற்றும் கலோரிகளை இவை கொண்டிருக்கவில்லை.

 

5. வெட்டுக்கிளியை சாப்பிட ஆசையா?

இலங்கையில் வெட்டுக்கிளியை சாப்பிட மாட்டார்கள். ஆனால் தாய்லாந்தில் அப்படி இல்லை. வெட்டுக்கிளியை நன்கு எண்ணெய்யில் பொரித்து உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து பிரட்டி அவற்றை ஒரு முறுமுறுப்பான சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வார்கள். இவற்றிலிருந்து வெளிவரும் ஜெல்லி போன்ற திரவம் அசௌகரியத்தை அளிப்பதில்லை என்கின்றனர் தாய்லாந்து மக்கள்.

 

6. தவளையின் கால்களை சுவைக்கத்தயாரா ?

தவளை இளவரசர்களைப் பற்றிய விசித்திரக் கதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த உணவு ஒரு விசித்திரக் கதை போன்றதுதான். இதற்கு தேவையானது ஒன்றுதான். மன்னிக்கவும் இரண்டு தேவைப்படுகின்றது. ஏனென்றால் தவளைக்கு இரண்டு கால்கள் இருக்கிறதே. ஆம் தவளையின் இரு பின்புற கால்களையும் கொண்டே இந்த உணவு தயாரிக்கப்படுகின்றது. தவளைக் கால்களின் தோலினை அகற்றி எண்ணெய்யில் பொரித்தே இதனை தயாரிக்கின்றனர். இவ்வாறான உணவை தென்கிழக்காசிய நாடுகளிலே அதிகம் உண்கின்றனர்.

 

7. குதிரைப் பாலில் மதுபானம்!

நீங்கள் மொங்கோலியா சென்றால் குதிரைப் பாலுக்கு அங்கு அமோக வரவேற்புள்ளதை காண்பீர்கள். இது உண்மையில் குதிரையின் பாலாகும். மொங்கோலியாவில் இந்த பாலின் மூலம் ‘ஐராக்’ எனும் மதுபானமும் செய்யப்படுகின்றது. இது ‘குமிஸ்’ என்றும் கூறப்படுகிறது. சம்பிரதாய சடங்குகளின்போது இந்த மதுபானத்தை குடிப்பவதாகவும் கூறுகின்றனர். வாருங்களேன் ஒரு குமிஸ் குடிப்போம். அதுதான் அந்த குதிரைப் பால்!!. ருசித்து பார்க்க கீழே உள்ள லிங்க்-ஐ அழுத்தவும்

 

மேலும் உங்களுக்கு தெரிந்த இலங்கையில் உண்ண முடியாத உணவுவகைகள் இருப்பின் கீழேயுள்ள கருத்துப் பகுதியில் பதிவிடவும்.