இளைஞர்கள் தம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மனநிலைகள்

அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் மனக்குழப்பம் ஏற்படுகின்றது. குழப்பத்தை தாண்டி அந்நிலை செல்லுமாயின் கட்டாயம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதனால் இது சம்பந்தமான அறிவை அனைவரும் பெற்றுக்கொள்வது சிறந்தது.

மன அழுத்தம்

மன அழுத்தத்தை ஆங்கிலத்தில் DEPRESSION என்று கூறுவார்கள். இது உலகில் பொதுவாக அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சினைதான். ஆனால் மன அழுத்தம் என்பது சிலரது உடல் குறைப்பாடுகளினாலும் ஏற்படும். சாப்பாட்டின் மீதான அலட்சியத்தன்மை, எடை குறைந்து இருத்தல் போன்றவற்றினாலும் ஏற்படும். சரியாக தூக்கம் இல்லாதிருத்தல், வேலை செய்ய முடியாமலிருத்தல், சரியான தீர்மானம் எடுக்க முடியாமல் இருத்தல் போன்ற பிரச்சினையை இதன் மூலம் சந்திக்க நேரிடலாம். இதுபற்றி பிறருடன் பேச முடியாமல் சிலர் தவிப்பர். CLINICAL DEPRESSION மட்டத்திற்கு இந்த பிரச்சினை செல்லமுன் இதற்கான தீர்வினை பிறருடன் பேசி குறைத்துக்கொள்வது அவசியம். அதற்கு அவருக்கு தெரிந்த நம்பிக்கையான இருவர் அவருடன் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் பல இடையூறுகளை சந்திக்க வேண்டிவரும்.

 

கவலை

இதற்கு பதற்றம் என்றும் கூறுவார்கள். ஆனால் இதனை ஒருவகையான ஏக்கம் என்றும் கருதுகின்றனர். கவலையாக இருப்பவரிடம் பதற்றமான தன்மையும் காணப்படுமென வைத்தியர்கள் கூறுகின்றனர். கவலை ஏற்பட்டவுடன் பயம் கலந்த ஒரு பகுத்தறிவற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் பின்னர் மனிதர்களுடன் பேசக்கூட முடியாத அளவுக்கு வெட்கம் மற்றும் பயம் உண்டாகும். வியர்வை அதிகமாக வருதல், இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்ற சந்தர்ப்பங்கள் கவலை அதிகமானவுடன் வரக்கூடியதாகும். சாதாரண வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் கைகளை கழுவ அதிக நேரம் எடுப்பாரேயானால் அவருக்கு கவலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதன் பின்னர் நீங்கள் ஒரு மனநல மருத்துவரை அணுக வேண்டிவரும்.

 

கவனக்குறைபாடு உயர்செயற்திறன் கோளாறு

சில நோய் சம்பந்தமான பெயர்களை நாம் ஆங்கில முறையில் கூறுவதே சிறந்தது. அதன்படி இதனை ADHD என்றழைப்பர். இது அதிகமான சந்தர்ப்பங்களில் ஆண்களுக்கே ஏற்பட வாய்ப்புண்டு. மூளையில் உள்ள இரசாயன சேர்க்கைகளில் வெவ்வேறு விதமான உந்துதல்களின் காரணமாக நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இந்த பிரச்சினையை நாம் அதிகம் எமது பாடசாலை பருவத்தில் சந்தித்திருக்க நேரலாம். அதாவது பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களின் கைகளால் அடிவாங்கி இருக்க காரணம் இந்த ADHD ஆகவும் இருக்கலாம். வேலையொன்றை கொடுத்தால் அதனை செய்ய முடியாதிருத்தல், ஒரு இடத்தில் சற்று அமர்ந்திருக்க முடியாமல் இருத்தல், தனது பொருட்களை காணாமல் ஆக்கிக்கொள்ளுதல், கால் வேகமாக நகர முயற்சித்தல் என்பன இதன் வெளிப்பாடாகும். மருத்துவ சிகிச்சையும் சில நடத்தை மாற்றங்களும் இந்த நோயாளிகளை குணப்படுத்தும்.

 

இருமுனை கோளாறு

Bipolar Disorder என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இந்த நோய் ஒரு இருமுனை தன்மைக்கொண்ட நோயாகும். மக்கள் இந்த நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறாததற்கு ஒரு முக்கிய காரணம், இந்த இருமாறுபட்ட குணங்கள் கொண்ட ஒருவரை ஒரு கடவுள் அல்லது பேய் என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த நோய் அதிக மகிழ்ச்சி மற்றும் அதிக சோகத்திற்கு வழிவகுக்கும். அதிக சந்தோசமும் ஒரு நோயாகும். எங்கும் இல்லாத ஒரு அசாதாரண சூழல் உருவாகும். இதேபோல், அசாதாரண செலவு மற்றும் பாலியல் ஆசைக்கு வழிவகுக்கும். அதிக சோகமும் ஒரு நோயாகும். இது வேறு விதமான மனநோயை உண்டாக்கக்கூடும். ஆகவே முறையான வைத்திய உதவியை உடனுக்குடன் நாடுவது அவசியம்.

 

மனச்சிதைவு நோய்

உலகிலுள்ள மிகக்கொடிய மற்றும் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாக இதை கூற முடியும். யாரேனும் ஒருவர் உங்கள் மனதில் ஏதாவது ஒன்றை பற்றி செருகிய பின் உங்கள் சொந்த எண்ணங்களை மக்கள் கேட்கும்போது அது ஒருவிதமான எரிச்சல் உணர்வை ஏற்படுத்திடும். கூடுதலாக அவர்கள், யாரும் பார்க்க முடியாத விடயங்களையும் ஒலிகளையும் கேட்கிறார்கள். இது மனசஞ்சலத்தினால் ஏற்படக்கூடியதாகும். அவர்கள் பிறரின் வாழ்க்கையைப் பற்றி பேசுவார்கள். அத்தோடு மாதக்கணக்கில் சிந்தித்து கொண்டிருத்தல், குழப்பமான தகவல்களை கூறுதல் அல்லது வழங்குதல் போன்ற செயல்கள் உண்மையில் பயத்தை உண்டாக்கக்கூடியன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களை தனிமையில் விட்டால் அல்லது அவர்களது பேச்சை கணக்கில் எடுக்காது விட்டுவிட்டால் அவர்கள் மனதளவில் பாதிப்படையும் வாய்ப்புக்கள் உண்டு. அதனால் அவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துவது அவசியம்.

 

மனநோய்

முட்டாள்தனமான செயல்களை செய்யவைக்கும் இந்த நோயை மனநோய் என்பார்கள். இந்த நோய் கொண்ட ஒருவரை அவரது எண்ணத்திலிருந்து அவரது கருத்தை மாற்றுவது மிகவும் கடினம். மனநோயின் அறிகுறிகள், சிரமம் மற்றும் மன மாற்றத்தால் உணரப்படுகின்றன. இதனை நோய் என்பதற்கு பதிலாக ஒரு நோய் கூட்டம் எனவும் கூறலாம். இவர்கள் பேசும் போதும் அல்லது ஏதாவது சொல்ல முனையும் போதும் பலரின் பேச்சுப்பாவனைகள் இவர்களிடமிருந்து வரக்கூடும். அவர்களுக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படாவிடின் மனநோயை குணப்படுத்த முடியாமல் போய்விடும்.

 

சந்தேக உணர்வு கொண்ட நோய்

இந்த நோயுள்ளவர்களின் யோசனைக்கு பதிலளிப்பதற்கு முடிவே இல்லை என்று கூறலாம். உதாரணமாக GAS ஐ மூடிய பின்னர் அதன் மீது சந்தேகம் கொண்டு மூடியுள்ளோமா அல்லது மூடவில்லையா என்று சிந்திப்பது, தேவையற்ற விடயங்களைப் பற்றி யோசித்தல் போன்றவற்றால் இந்நோய் அதிகரிக்கின்றது. அது மாத்திரமின்றி இந்த நோயின் பிரதான ஒரு குணம், தன தேவைக்கு அதிகமாக சுத்தம் பேணுதல். மேலும் பிறர் தொட்ட ஒரு பொருளினை இவர்கள் தொட மாட்டார்கள். இந்த நோயினை பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமே PREMAYA எனும் சிங்கள திரைப்படம் ஆகும். இந்த நோயின் தீவிரம் அதிகரிக்கும் முன்னரே இதனை குணப்படுத்த வேண்டும்.