அவசரகாலத்தில் உங்கள் நண்பர்களுடன் இணைவதற்கும் அவர்களுடன் தகவல்களைப் பகிர்வதற்கும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில APPLICATION களைப் பற்றி இன்று விளக்கவுள்ளோம்.
1. TELEGRAM
டெலிக்ராம் என்பது சில காலங்களுக்கு முன்பு இரகசியமாக பேசிக்கொண்ட ஒரு அப்ளிகேஷன் ஆகும். அனால் இந்த வசதி அதிகமான ஆப்களில் வந்துவிட்டது. டெலிக்ராமில் சாதாரண முறையில் பேசிக்கொள்ளவும் முடியும். மேலும் தனிப்பட்ட முறையில் இரகசியமாக பேசிக்கொள்ளவும் முடியும். அதாவது அதனை COPY செய்ய SCREENSHOT எடுக்க அல்லது அவற்றை பார்க்கவும் முடியாமல் செய்யலாம். இவ்வாறான வசதிகளை இது வழங்குகின்றது.
2. BRIEF
பொதுவாக FACEBOOK MESSENGER அப்ளிகேஷன்களுக்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு இது சற்று புதிதாகவே காணப்படும். இந்த ஆப் விசேடமாக கூட்டு வேலை செய்பவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் தகவல்களை பரிமாறக்கூடிய ஆப் என்பதாகவே கூறலாம். அலுவலக வேலை செய்பவர்களுக்கு மிகவும் உகந்தது. ப்ரொஜெக்ட்கள் மற்றும் டு டூ லிஸ்ட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக இதனுள் உள்ள BREIF இல் வைக்கவும் முடியும்.
3. SIGNAL PRIVATE MESSENGER
பாதுகாப்பைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டவர்கள் மற்றும் நேரத்தை கடக்க விரும்புவோருக்கு இது மிகச் சிறந்தது. இது தொழில்முறை சார்ந்ததுபோல் இருந்தாலும் எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம். இது இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள். ஒவ்வொரு செய்தியும் அழைப்பும் முற்றிலும் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்த மெசஞ்சர் பயன்பாட்டின் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாக இந்த அப்ளிகேஷனை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
4. LINE
லைன் ஆப் என்பது உலகில் உள்ள எவருடனும் இரகசியமாக கதைக்கக்கூடிய ஒரு ஆப் ஆகும். இதை வாட்ஸ்அப் போல எமது கணினியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் அழைப்பை ஏற்படுத்தி கதைக்கவும் முடியும்.
5. KIK
கிக் ஆப் என்றால் நாம் முன்பு குடித்த கிக் கோலா நினைவிற்கு வரலாம். அல்லது உண்மையில் இந்த கிக் ஆப்பை பயன்படுத்தி இருக்கலாம். எதுவாயுனும் சரி, இந்த ஆப் மூலம் குழு முறைமையில் உங்கள் நண்பர்களுடன் உறவினர்களுடன் இலகுவாக கதைக்கலாம்.
6. GROUPME
சிலர் எங்கு சென்றாலும் ஒரு குழுவோடு சென்றால்தான் அதில் சந்தோசம் இருக்கும். அவ்வாறான சிலருக்காகவே உருவாக்கப்பட்ட இந்த GROUPME ஆப் பெயருக்கேற்ப குழுவாக செய்தி பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்டது. மேலும் இதில் தேவைக்கேற்ப குழுக்களை வடிவமைத்துக்கொள்ளவும் முடியும்.
7. SKYPE
இப்போது ஏன் ஸ்கைப்பை பட்டியலில் வைத்திருக்கிறோம் என்று யாராவது எங்களிடம் கேட்கலாம். யாரும் பயன்படுத்தாத பெரும்பாலான ஆப்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாதவை என்றுதானே கூறினீர்கள் என நீங்கள் கேட்கலாம்.. உண்மையில் VIBER, FACEBOOK, WHATSAPP போன்ற மெசஞ்சர் சேவைகளுக்குப் பிறகு ஸ்கைப் மிகவும் பின்தள்ளப்பட்ட சேவையாகிவிட்டது. கடந்த காலத்தில், ஸ்கைப் தவிர வேறு யார் எங்களுக்கு வீடியோ அழைப்பை வழங்கியது?
ஆனால் இப்போது SKYPE, தொலைபேசி மற்றும் மடிக்கணினி இரண்டிற்கும் சிறந்த பயன்பாடாகும். ஆனாலும் இதனை பயன்படுத்துவது மிகவும் குறைவு. குறிப்பாக இப்போது ஸ்கைப் மைக்ரோசொப்டின் கீழ் இருப்பதால், ஸ்கைப் பயன்பாட்டை உங்கள் எல்லா சாதனங்களுக்கும் நெறிப்படுத்தலாம்.