உலகில் இன்று அதிகமான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கான மவுசு எப்போதும் அதிகம்தான். அன்று தொடக்கம் இன்று வரை அழகான தோற்றத்தில் சினிமா நட்சத்திரங்களை போல இருக்கும் சில கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். அப்படியான அழகான கிரிக்கெட் வீரர்களை பற்றிதான் இன்று நாம் பேசவுள்ளோம்.
விராட் கோஹ்லி
அழகாக இந்த வீரரை மணந்ததும் ஒரு நடிகையே. ஆம் இந்திய கிரிக்கெட் இரசிகர்களின் அதிகமான செல்வாக்கை குறைந்த காலத்திலேயே பெற்ற ஒரு கிரிக்கெட் வீரராக இவரைக் கூறலாம். இவரது அழகான தோற்றத்தில் மிகவும் உச்சக்கட்ட அழகை சேர்ப்பது இவரது கண்களே. இந்தியாவின் பல பிரபலமான நிறுவனங்களின் விளம்பரங்களுக்கும் இவரையே நடிக்க வைக்கின்றனர். இவரது வயது 30. உயரம் 5.8 அடி ஆகும்.
ஸ்ரீமத் அலெய்ஸ்டர் குக்
சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறிய பிறகும், CLUB இல் விளையாடுவதால் அவர் இன்னும் முதற்தரத்தில் இருக்கின்றார். இல்லையென்றால், இந்த அழகான கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இருப்பதைப் பற்றி பேசும்போது அவரை மறப்பது கடினம். பார்த்தவுடன் இவரை கிரிக்கெட் வீரர் என்று கூறுவதைவிட சூப்பர்மேன் திரைப்படத்தில் உள்ள கதாநாயகன் கிளார்க் கதாபாத்திரத்தைபப் போல இருப்பார் என்று கூறலாம். 34 வயதுடன் 6.4 அடி உயரத்தைக் கொண்டவர் இவர்.
டேல் ஸ்டைன்
முகபாவனையோ சற்று அகங்காரம் பிடித்தவர் போல் இருக்கும். ஆயினும் அழகான வீரர்கள் பட்டியலில் இவரை சேர்க்க முடியும். இவர் தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளராவார். வயது வெறும் 36 தான். ஆனாலும் இவருக்கு கடைசியாக நடந்த ICC கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கவில்லை. பச்சையும் குத்தி இருப்பார். அது மாத்திரமின்றி சமூக வலைத்தளங்களில் தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை பதிவிட்ட வண்ணம் இருப்பார். 5.10 அடி உயரமுடையவர்.
ஷகீப் அல் ஹசன்
சிலர் எதிர்பாராத விதமாக சிரிக்கும் போது அழகாக இருப்பார்கள். அந்த பட்டியலில் நாம் இவரை சேர்க்கலாம். ஏனென்றால் இவரது சிரிப்புகூட கிரிக்கெட் இரசிகர்களிடத்தில் பேசப்பட்டுள்ளது. பங்களாதேஷை சேர்ந்த இந்த வீரர் சுமார் 10 ஆண்டுகளாக கிரிக்கெட் துறையில் உள்ளார். இவரது வயது 32. அதற்கேற்ற வகையில் 5 .8 ஆடி உயரத்தையும் கொண்டுள்ளார்.
ஸ்டீவன் பின்
இங்கிலாந்தின் கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரரான ஸ்டீவன் ஒரு மெழுகுச்சிலை போல அவ்வளவு அழகாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு காலத்தில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. இவரது கண், மூக்கு, காது போன்றன தேவைக்கு ஏற்ப செதுக்கியது போல அவ்வளவு அழகாக இருக்குமாம். வயது 30 தான். ஆனால் உயரமோ 6.6 அடியாகும். உயரம் சற்று அதிகம்தான். சமூக வலைத்தளங்களில் அவரது படங்கள் மிகவும் அழகானவையாக இருக்கும். இவருக்கென ஒரு இரசிகை கூட்டமே உள்ளதென்பதாகவும் இவரை கண்டால் இவரை தூக்கிச் சென்றுவிடும் நிலையில் உள்ளதாகவும் கூறுகின்றனர்!
புவனேஷ்வர் குமார்
இவருக்கு வயது 29 தான். ஆயினும் இவரது திறமையும் அழகான தோற்றமும் இவரை இந்திய கிரிக்கெட் இரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒருவிதமான வசீகரிக்கும் நிறத்தில் இவரது கண் காணப்படும். 5.8 என்ற சாதாரண உயரத்தில் இருப்பார்.
மார்ட்டின் கப்டில்
இவர் எந்த நேரத்திலும் ஒரு நிலையான பார்வையை கொண்டிருப்பவர் ஆவார். மைதானத்தில் மாத்திரமின்றி வெளியுலகிலும் நிலைதவறாமல் இருப்பாராம். ஒரு வீரர் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க அவரின் நிலையான தன்மையே போதும். ஆனால் இவர் சிரிப்பையும் அழகாகக் கொண்டுள்ளார். இதனாலோ என்னவோ அந்த நாட்டு நடிகைகள் இவர் மீது கண் வைத்துள்ளனர். உலக கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் தடம்பதித்த முதல் நாளிலே 100 ஓட்டங்களைப் பெற்ற இந்த வீரரின் வயது 33. உயரம் 6.2 அடி ஆகும்.