காதல் தோல்வியா? கவலை வேண்டாம்! உங்கள் காதல் கடிதத்தை வாங்கிக்கொள்ள ஒருவர் தயாராக உள்ளார்

காதல் என்பது ஒருவகையான பைத்தியமான மனநிலைக்கு கொண்டு செல்லக்கூடியது என்றால் அதில் தவறில்லை. உதாரணமாக காதலர்களில் ஒருவர் மற்றவரை புறக்கணித்துச் சென்றால் அல்லது வேறு காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டாலும் மீண்டும் மீண்டும் பின்தொடர்ந்து சென்று காதலை சொல்லிச் சொல்லி கேவலப்படும் சந்தர்ப்பமும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் கட்டாயம் படிப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதியுள்ளோம்.

 

1. கடலில் ஒரு மீனா உள்ளது?

பொதுவாக காதல் தோல்வியானால் எமது நண்பர்கள் கூறும் ஆறுதல் வார்த்தை என்ன? கடலில் ஒரு மீனா உள்ளது என கேட்பார்கள்.  கடலில் ஆயிரம் மீன்கள் இருந்தாலும் என் மனதில் எண்ணியிருந்த மீன் கிடைக்காவிட்டால்… என்று எண்ணி கவலையடையத்தான் செய்வோம். ஆனால் உண்மையில் தனக்கு பிடித்தவர் கிடைக்காவிட்டால் வேறு யாரும் வேண்டாம் என்று கூறுவது தற்காலிகமான வார்த்தைகளே ஆகும். அதேபோல் வேறு ஒரு நல்ல மீன் அகப்படும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். அதன்படி ஒரு நாள் எமக்கு ஏற்ற ஒரு மீன் மாட்டினால் சந்தோசம் தானே? அதனால் கிடைக்காத ஒன்றுக்காக கண்ணீர் வடிப்பதும் காலத்தை  வீணடிப்பதும் பொருத்தமற்றது.

 

2. தரமிழந்து செல்லுதல்

நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தி அவர் அதே அன்பை மீண்டும் தர மறுத்துவிட்டால் அது எமது சுயவிருப்பத்திற்கும் மானத்திற்கும் வேதனையாக இருக்கும் என பலரும் எண்ணுகின்றனர். எமது காதல் உண்மையானதும் அந்த காதலுக்குரியவர் பக்குவமானவருமாக இருந்தால் நீங்கள் அவர்களிடம் சென்று உங்கள் காதலை சொல்வது தரமிழந்து போகக்கூடிய செயல் அல்ல. அடுத்தது அந்த பெண் அவரது தோழிகளிடம் சென்று இவன் எனது பின்னால் வருகிறான் என்று சொன்னால் அதுவும் தரமிழந்து போகக்கூடிய செயல் அல்ல. உண்மையில் அவளை விட்டு நீங்கள் சென்றுவிட வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் உங்களுக்கு சரிவர மாட்டார்.

 

3. பின்னால் சென்று அசிங்கப்படாதீர்கள்

ஒருவர் மற்றவரிடம் தனது காதல் விருப்பத்தை பெறுவது இலகுவான காரியமல்ல. ஒரு தடவை முயற்சி செய்து வேண்டாம் என்று கூறினாலும் இன்னொரு தடவை முயற்சிக்க மனம் தூண்டும். அவ்வாறு இன்னொரு தடவை முயற்சித்து அதனையும் ஏற்காவிட்டால் அவரை விட்டுவிடுவது நல்லது. ஆனால் அதிகமானோர் வேண்டாம் என கூறிய பின்னரும் பின்னால் சென்று மீண்டும் மீண்டும் காதலை சொல்வார்கள். கருணையின் அடிப்படையிலாவது தமது காதலை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நப்பாசைதான் காரணம். அவ்வாறு ஒரு பெண் பின்னால் சென்று அசிங்கப்பட்டு அல்லது வற்புறுத்தி காதலை பெறுவது நல்ல காதலாக இருக்காது.

 

4. கண்ணீர் வடிக்கவும் வேண்டாம்!

கண்ணீர் வடிப்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்று. தான் ஆசைப்பட்டவருடன் காதல் தோல்வி அடைந்து விட்டால் கண்ணீர் வடிப்பது சகஜம். ஆனால் அந்த கண்ணீரை அங்கிருந்தே வடிக்க வேண்டாம்.  மேலும் அவரது முன்னிலையில் கண்ணீர் சிந்துவது உங்களை பிறரிடத்தில் ஆளுமை அற்ற ஒருவராகவும் பக்குவமற்ற ஒருவராகவும் எண்ணக்கூடிய அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அந்த கண்ணீரினால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை. அப்படியின்றி  உங்களை வேண்டாம் என்றால் அங்கிருந்தே புதிய துணையை தேடும் பணியை தொடங்குங்கள்.

 

5. பழிவாங்கும் நோக்கில் இருக்கவும் வேண்டாம்!

காதலுடன் தொடர்புடையவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விடயம் இது. காதலை ஒருவர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவரை பழி வாங்கும் நோக்கில் பேஸ்புக்கின் மூலம் சீரழிப்பது, உடல் ரீதியாக துன்புறுத்துவது, மேலும் மனரீதியாக வற்புறுத்தும் நோக்கில் செய்வது போன்ற காரியங்களால் தமது காதலை நிரூபிக்கவும் முடியாது. அந்த காரியத்தினால் உங்கள் மானமும் சென்றுவிடும். மேலும் சட்டரீதியான இன்னல்களுக்கு முகங்கொடுக்க  நேரிடும். இவை அனைத்தையும் விட இது ஒரு மனிதநேயத் தன்மையே அல்ல.

 

6. அவரை பற்றி ஆராய வேண்டாம்

நாம் ஒருவரை உண்மையில் காதலித்து அவர் வேண்டாம் என்று மறுத்தால் அவரது நண்பர்களிடம் சென்று அவரை பற்றி ஆராய்ந்து அவருக்கு பிடித்த பிடிக்காத விடயங்களை பற்றி ஆராய்வது பொருத்தமற்றது. ஏனென்றால் அவருக்கு பிடித்த, பிடிக்காத விடயங்களை தெரிந்து அவற்றை செய்ய அவர்கள் சிறுகுழந்தை அல்ல. இப்படி அடுத்தவரிடம் அவரைப் பற்றி கேட்பதெல்லாம் ஒருநாள் அவருக்கு தெரிந்தால் அன்றைய தினம் உங்கள் நிலை என்னவாகும்? இவற்றைவிட, அவரை விட்டு பிரிந்து நீங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போனமை அவர்களுக்கு எவ்வளவு பெரிய நட்டம் என்பதை உணர்த்துங்கள்.

 

7. வளர்ந்தவர்கள் போல் நடந்து கொள்ளுங்கள்

வளர்ந்தவர்களை போல நடக்க வேண்டும் என்பது தனது காதல் ஜெயித்தாலோ தோற்றாலோ அதனை சிறிய விடயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல. இது அவர்களின் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை பேணுவது பற்றியது. அவர்களின் காதல் வழக்கம் போல் நிராகரிக்கப்பட்டால், திரும்பி நன்றி கூறிவிட்டு வருதல் அல்லது. உங்கள் காதல் மோசமாக நிராகரிக்கப்பட்டால், மிக்க நன்றி என்று கூறுவது மிகவும் ஒழுக்கத்துக்கும் தனது நன்னடத்தைக்கும் ஒரு எடுத்துக்காட்டு. சில சந்தர்ப்பங்களில் இந்த ஒழுக்க சந்தர்ப்பங்களினால்கூட நீங்கள் ஆசைப்பட்டவர் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.