உண்மைக்கதைகளில் உருவான சிங்களப் பாடல்கள்

இலங்கையில் தொலைக்காட்சி ஊடகங்கள் அதிகரித்தவுடன், பாடல்களுக்கான படச்சட்டங்களும்  சேர்க்கப்பட்டன.  அடுத்தகட்டமாக பாடல்களை வீடியோ பாடலாக வெளியிட்டனர். Youtube வளர்ச்சியுடன் இது தொற்றுநோய் போல மக்களிடம் பரவி வருகின்றது. இதன் காரணமாக, சில இசை வீடியோ தயாரிப்பாளர்கள் தங்கள் இசை வீடியோக்களை சர்ச்சை கொண்ட விடயங்களுடன் சேர்ப்பது மட்டுமின்றி, நிர்வாணத்தை பயன்படுத்தி சந்தைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக சாதாரண பாடலை வீடியோ பாடலாக கேட்டனர். அப்பாடியான சில வீடியோ பாடல்களில் பயன்படுத்தப்பட்ட உண்மைக் கதைகளை பற்றி இன்று நாம் பேசப் போகின்றோம்.

 

1. பம்பர நாதே – BAMBARA NADE

2005 ஆம் ஆண்டில் THE ROYAL PARK HOTEL இல் யுவோன் ஜொன்சன் என்பவர் தன் காதலன் ஷ்ரமந்த ஜயமஹவினால் கொல்லப்பட்டார். அவரது சகோதரியுடனான வாக்குவாதத்திலே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னரே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை அனைவரும் அறிந்த விடயம். குறிப்பாக இந்த கொலைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட வீடியோ பாடலே இது.

 

2. ஹித பெரலா –  HITHA PERALA

ரொஷான் பிலபிட்டிய மற்றும் சதுரிகா பீரிஸிற்கு இடையிலான உறவு யாவரும் அறிந்ததே. ஆனால் இறுதியில் கயான் விக்ரமதிலகவுக்கும் திருமணம் நடந்தது. கயான் விக்ரமதிலக ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆவார். இந்த சம்பவத்தின் பின்னர் இது தொடர்பான வீடியோ பாடல் ஒன்று வெளியானது. அதில் ஆச்சரியப்படும் வகையில் சத்துரிக்காவின் தாயாரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

3. யளி ஹமுவெமு – YALI HAMUWEMU

தசுன் நிஷான் என்பவர் தனது இரசிகர்களையும் குடும்பத்தினரையும் விட்டுப்பிரிந்து சென்ற பிரபலமான நடிகர். அவரது திருமணத்தின் பின்பும் தொடர்ந்த பிரபல நடிகை ஷாலினி தாரகாவுடனான காதலே அவரது தற்கொலைக்கு காரணமாய் அமைந்தது. அதனால் ஷாலினி தாரகா பாடல் ஒன்றை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இவர்களது இந்த சம்பவத்தில் ஒரு பகுதி வீடியோ பாடலொன்றில் வெளியாகியுள்ளது.

 

4. சிரவீ  –  SIRAWEE

தசுன் நிஷானின் தற்கொலையால் தனக்கு ஏற்றப்பட்ட மன அழுத்தத்தை மையமாக கொண்டு ஷாலினி தாரகா இயற்றிய பாடலை பலரும் வீடியோ பாடலாக இயற்றி இருந்தனர். அவற்றில் ஒரு பாடல்தான் இது.

 

5. தெனுநா –  DHENUNA

இந்த பாடலை பற்றிய விபரம் அனைவரும் அறிந்ததே. இந்த வீடியோவினால் இராஜ்க்கு இரசிகர்கள் பாரிய எதிர்ப்பு தெரிவித்தனர். தென்கொரியாவிற்கு சங்கீத நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பியூமி ஹன்சமாலிக்கு அங்குள்ளவர்கள் வாழைப்பழத்தால் அடித்த சம்பவமும் இந்த பாடலின் பிறகே ஆகும். இராஜ் இதற்கிடையில், இந்த பாடலில் சித்தரிக்கப்படுபவர் தனது இசை வாழ்க்கையின் முற்காலத்தில் தன்னை அவமானப்படுத்தியதற்காக இந்த பாடலை பதிலடியாக கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

 

6. லீக் LEAK

இந்த பாடலில் சித்தரிக்கப்படும் விடயம் உண்மையா பொய்யா என்பதை மேலுள்ள ஆண்டவன் மட்டுமே அறிவான். சிலரின் கூற்றுபடி, ஹஸினி சாமுவேல்க்கும் விஸ்வ பெரேராவுக்கும் திருமணம் நடந்தது. அந்த நாளிலே ஹஷினி, பில்டியுடன் அறையில் இருந்தார் எனவும் இதைத் தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் அறியப்பட்டுள்ளது.

 

7. சாட்டு தாலா –   CHATU DHALA

இப்பாடலைப்பாடி வீடியோவாக இயற்றிய யுரேணி நொஷிகா, இந்த பாடல் தனது உண்மைக்காதலை மையமாக கொண்டதென கூறியுள்ளார். யுரேனியின் கூற்றுப்படி, தன் காதலன் தன்னை முதலில் விரும்பியபோது பிடிக்காதது போல் காட்டிக்கொண்டாலும் பின்பு இருவரும் காதலித்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.