200 வருடங்கள் என்பது சுமார் நான்கு தலைமுறைகள் ஆகும். ஆம், சுமார் நான்கு தலைமுறைகளாக பொலன்னறுவை ஒரு இராச்சியமாக இருந்தது. இலங்கை வரலாற்றிலும் சரி அல்லது உலக வரலாற்றிலும் சரி 200 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம் அல்ல. அக்குறுகிய காலத்தில், பொலன்னறுவை ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. நீங்கள் பொலன்னறுவை செல்லும் வழியில் நிறைய இடங்களை காணலாம். அவற்றில் சிலவற்றை பற்றி நாம் பார்ப்போம்.
1. பொலன்னறுவை வட்டதாகய
வட்டதாகய என்பது பொலன்னறுவையில் காணப்படும் பிரபல்யம் வாய்ந்த ஒரு இடமாகும். பழைய வட்டதாகயவின் அமைப்பு இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாற்புறங்களும் காணப்படும் புத்தர் சிலைகளில் இரண்டு மாத்திரமே தற்போது நல்ல நிலையில் உள்ளன. சுற்றியுள்ள சந்திரவட்டக்கல் மற்றும் காவற்சிலைகளுடன் இந்த இடம் நன்றாக உள்ளது. தூபியின் பாதுகாப்பிற்காக அதைச்சுற்றி அமைக்கப்பட்ட கட்டிடமே வட்டதாகய ஆகும்.
2. ஹெட்டதாகய
வட்டதாகயவிற்கு முன்னால் உள்ள ஹெட்டதாகய நிசங்கமல்ல மன்னனால் கட்டப்பட்டது. அருகிலேயே நிசங்கமல்ல மன்னனின் பெரிய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இதில் ராஜ நிர்வாகத்தை பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. இதன் நிர்மாணப்பணி 60 மணித்தியாலங்களுக்குள் நிறைவுபெற்றதாலேயே இது ஹெட்டதாகய என அழைக்கப்படுவதாக நிர்மாணக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். இது மரக்கூரையை கொண்ட மாடிக்கட்டிடமாகவும் மற்றும் புத்த பெருமானின் தந்த நினைவுச்சின்னம் கொண்டுவரப்பட்டதால் கட்டப்பட்ட நினைவு ஆலயமாகவும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
3. ரன்கொத் விகாரை
பொலன்னறுவை வீழ்ச்சிக்கு பின் காடாக இருந்த ரன்கொத் விகாரை இப்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இவ்விகாரை நிசங்கமல்ல மன்னனால் கட்டப்பட்டதென கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனால் வரலாற்றை பற்றி அறிந்தவர்களின் கூற்றின்படி இது பராக்கிரமபாகு மன்னனால் கட்டப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இங்கு தங்க கோபுரம் இருந்ததால் இது ரன்கொத் விகாரை என அழைக்கப்பட்டது. அநுராதபுர காலத்தின் கட்டிட நிர்மானக்கலையின் தாக்கம் ரன்கொத் விகாரையின் உச்சியில் காணப்படும் தட்டை வடிவ நிர்மாணத்தில் அறிந்து கொள்ளலாம்.
4. திவங்க சிலை மனை
புராதன இடிபாடுகளை பார்வையிட செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இருந்தாலும், பண்டைய காலத்து கலையில் ஆர்வம் கொண்டோருக்கு உகந்த பரிசாக இது அமையும். இலங்கையின் பழங்காலத்து ஓவியங்கள் திவங்க சிலை மனையில் இன்னும் சற்று இடிபாடுகளுடன் காணப்படுகின்றன. இச்சிலை மனை இரண்டு காலத்திற்கு உரியதென கூறப்படுகிறது. பல்லவ கட்டிடக்கலை சிறிதளவும் வெளிப்புற கட்டிடக்கலை இந்து மரபுப்படியும் தெரிகின்றது. வெளிப்புற சுவர்களில் சிற்பங்கள், தெய்வங்கள், நெகிறோமென்சர்கள், குள்ளர்கள் மற்றும் சிங்கங்கள் போன்ற இன்னும் பல காணப்படுகின்றன. ஓவியங்களின் பாதுகாப்பிற்காக இதனுள் புகைப்படங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இச்சிலை மனையினுள் உள்ள மூன்று புத்தர் சிலைகளை பாதுகாப்பதற்கு வெளிப்புறத்தில் கூரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
5. கிரி விகாரை
சில காலத்திற்கு முன்புவரை கிரி விகாரை கவனிப்பாரின்றி கறுப்பு நிறத்தில் இருந்தது. தற்போது அதற்கு வெள்ளை நிறப்பூச்சு பூசி உயிரோட்டத்தை அளித்துள்ளனர். பக்தர்களை மகிழ்விக்கும் முகமாக இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள கிரி விகாரை, கல் விகாரையை பார்வையிட செல்லும் வழியில் காணக்கிடைக்கும் ஒரு மாதிரி வடிவமாக காணப்படும்.
6. கல் விகாரை
பொலன்னறுவையில் பார்க்க மறக்காத இடங்களில் ஒன்றான இது பிற வழிப்பாட்டுத் தல பக்தர்களாலும் மதிக்கக்கூடிய புனித இடமாக கருதப்படுகின்றது. இங்கே சில அழகான புத்தர் சிலைகள் உள்ளன. இங்கே உள்ள சிலைகள் தனிப்பெரும் கருங்கல்லால் கட்டப்பட்டதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
7. பராக்கிரமபாகு மாளிகை மற்றும் ராஜ சபை
மன்னர் பராக்கிரமபாகுவின் அரண்மனையில் பல தளங்கள் உள்ளன. பொலன்னறுவை காலத்தின் பின்பு தென்னிந்திய கிளர்ச்சியாளர்களினால் இந்த அழகான அரண்மனை இடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த அரண்மனையின் இடிபாடுகள் பல மீற்றர் உயரத்திற்கு இன்னும் எஞ்சியுள்ளன. தரைமட்ட மேடையில் கல்தூண்கள் அமைக்கப்பட்ட இடம் பராக்கிரமபாகு மன்னரின் நீதிமன்றமாக கருதப்படுகிறது. சுவர்களில் காணப்பட்ட செதுக்கல்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
8. தீப உயன
பொலன்னறுவையில் இன்று தீப உயன என்று ஒன்றை கட்டியுள்ளனர். சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் இந்த தீவிற்கு பின் ஒரு பெரிய தோட்டம் இருந்ததாகவும் அத்துடன் தோட்டக்குளம் ஒன்று இருந்ததாகவும் குளங்களின் எச்சங்கள் சான்று பகர்கின்றன. அருகிலுள்ள பிற இடிபாடுகளின்படி, அது ராணியின் அரண்மனையாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
9. பொலன்னறுவை அருங்காட்சியகம்
பொலன்னறுவை அருங்காட்சியகம் பொலன்னறுவைக் காலத்து வளமான வரலாற்றை உள்ளடக்கியுள்ளது. பழம்பெரும் பொருட்களை பற்றி அறிய விரும்புவோருக்கு ஏற்ற இடமாக இது இருக்கும். இக்காட்சியகம் தீவு பூங்காவிலிருந்து சற்று தொலைவில் பராக்கிரம சமுத்திரத்தின் அருகில் அமைந்துள்ளது. இடிபாடுகளை விட நீங்கள் அதிகம் புரிந்து கொள்ள வேண்டுமாயின், அருங்காட்சியகத்தை பார்வையிடுவது சிறந்தது.
https://bit.ly/30n6m1k
10. லங்கா திலக விகாரை
பொலன்னறுவை இடிபாடுகளில் மிகப்பெரிய இடிபாடான இது கிரி விகாரையை அண்மித்தே உள்ளது. இந்த லங்கா திலக விகாரை பொதுவாக மூன்று மாடி உயரங்களைக் கொண்டது. இங்கே புத்த பெருமானின் சிலையின் எச்சங்கள் இன்னும் உள்ளன. இந்த முக்கியமான இடிபாடுகளைத் தவிர, பொலன்னறுவையில் இன்னும் பல மதிப்புமிக்க இடிபாடுகள் உள்ளன. பண்டைய கால மன்னர்களால் கட்டப்பட்ட தொட்டிகளும் நீர்த்தேக்கங்களும் இன்னும் பொலன்னறுவை விவசாயத்திற்கு பெரும் உதவி புரிகின்றன.