எந்தவொரு நாட்டினதும் இராணுவம் பொதுவாக காலாட்படை, வான் மற்றும் கடற்படையுடன் ஆயுதம் ஏந்தியிருக்கும். அணு அல்லது அணு சக்தி போன்றவற்றை பயன்படுத்தி தாக்குகின்றமையானது நீர், காற்று மற்றும் நிலத்தில் நேரடி கதிர்வீச்சு வீசி குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு மக்களை மோசமாக பாதிக்கும். சமீபத்தில் வெளியாகிய செர்னோபில் தொலைக்காட்சித் தொடரானது, அணு மின் நிலையங்களின் மறைக்கப்பட்ட ஆபத்தைக் காட்டுகிறது. செர்னோபில் தொலைக்காட்சி தொடரானது அமெரிக்காவின் மிகப்பெரிய தயாரிப்பு. அணுசக்தி பிரச்சினைக்கு பதிலாக அதில் ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் ஆட்சியை பற்றியே அதிகம் விமர்சித்துள்ளது. ஆனால் படத்திலும், அசல் கதையிலும், சோவியத் ஒன்றியத்தின் மீதான மக்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பானது இந்த தொடரின் பின்னர் குறைந்துவிட்டது.
1. அணு ஆயுத பயன்பாடு இனப்படுகொலைக்கு சமன்
யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் போன்ற கதிரியக்க பொருட்களைப் பயன்படுத்தி செயற்படுத்தும்போது மிகப்பெரிய ஆற்றலை உருவாக்குகின்றன. ஹிரோஷிமா என்ற அழிவுக்கு அமெரிக்கா 64 கிலோகிராம் அணுகுண்டை மட்டுமே பயன்படுத்தியது. ஆனால் அதன் தாக்கம் ஹிரோஷிமா முழுவதும் பரவியது. அணு ஆயுதமானது ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தும் சக்தி கொண்டது. எனவே அணு ஆயுதங்கள் உலகம் முழுவதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
2. அணு வெடிப்பின் பாதகமான விளைவுகள்
அணு வெடிப்பானது பெரும் அழிவை ஏற்படுத்தும். மேலும் அதிலிருந்து வரும் கதிர்வீச்சு நீண்ட காலத்திற்கு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த கதிரியக்க பொருட்கள் காற்று மற்றும் நீர் வழியாக சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவக்கூடும். கதிரியக்க பொருட்கள் நேரடியாக வெளிப்படுவதால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் பிறந்த குழந்தைகளில் தலைமுறை தலைமுறையாக கடுமையான பிறப்பு குறைபாடுகளையும் ஏற்படுத்தும். ஒரு பொதுவான இரசாயன எரிப்பு அந்த நேரத்தில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் கதிரியக்க பொருட்களின் விளைவுகள் முழு தலைமுறையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். வழக்கம் போல், கதிரியக்க பொருட்களை அகற்றுவது கடினம். எனவே ஒரு அணு வெடிப்பு ஒவ்வொரு வகையிலும் ஆபத்தானது.
3. அணுசக்தியின் நன்மைகள்
அணுசக்தி ஆபத்தானது என்றாலும், உலகின் முன்னேறிய நாடுகளில் அணுசக்தியானது மின் சக்திக்காக இன்னும் பயன்படுத்தப்படுகிறது. அணு மின் நிலையங்களில் வெடிப்பு ஏற்பட்டால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரி போன்ற பிற மின்சார உற்பத்தியைவிட அணுசக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது மலிவானது. மேலும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களுடன் ஒப்பிடும்போது சுற்றுச்சூழல் பாதிப்புகள் மிகவும் குறைவு. நீர் மின்சாரம் அதிக சேதத்தை ஏற்படுத்தாதென நாம் எண்ணினாலும் ஒரு பெரிய நீரோட்டம் எமது தேவைகளுக்கேற்ப செயற்படும் போது பாய்ந்து செல்லும். அத்துடன் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதிக்கிறது. இலாபம் மற்றும் சுற்றுச்சூழலில் குறைந்த தாக்கங்கள் இருப்பதால், தொழிநுட்பத்தின் ஆபத்துக்களைக் குறைத்து அணு மின் நிலையங்களை இயக்க உலகம் முயற்சிக்கிறது. இருப்பினும் வளர்ச்சியடைந்த நாடுகளில் அணுசக்திக்கு எதிரான போராட்டங்கள் எழுந்துள்ளன.
4. செர்னோபில் மற்றும் புகுஷிமா
சோவியத் யூனியன் செய்தித் தொடர்பாளர்களின் கூற்றுப்படி, செர்னோபில் விபத்து சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வை என்னவென்றால், சரியான பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உடன்பட தவறியதால் செர்னோபில் செயலிழந்தது என்பதே ஆகும். செர்னோபில் விபத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஊழியர்களும் உடல் காயங்களுக்கு உள்ளானார்கள். 2011இல் சுனாமியால் புகுஷிமா மின் உற்பத்தி நிலையம் வெடித்தது. அப்போதுகூட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர் பரப்பளவில் வாழ்ந்த மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இந்த இரண்டு இடங்களும் தற்போது அணுக முடியாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் எளிதில் துண்டிக்கப்படாத நாடென்றால் அது ஜப்பான் ஆகும். புகுஷிமா பேரழிவால், ஜப்பானிய மக்களுக்கு இரண்டு நாட்களுக்கு மின்சாரம் இல்லை. ஜப்பானில் மின்சாரம் இன்றி எதுவும் இயங்காது. அந்த வகையில் மின்சாரம் இன்றி ஜப்பான் பாரிய சிரமத்திற்கு உள்ளானது.
5. ஒரு வெடிப்பு நிகழாவிட்டாலும் ஏற்படக்கூடிய சேதம்
நிலக்கரி மின் உற்பத்தி நிலையமானது சராசரியாக ஒரு கிலோவாட் மணி நேர மின்சாரத்தை உருவாக்குவதற்கு சுற்றுச்சூழலில் நானூறு கிராமுக்கு மேற்பட்ட கார்பன் டை ஒக்சைட்டை உற்பத்தி செய்கின்றதென கண்டறியப்பட்டுள்ளது. கார்பன் டை ஒக்சைடு குவியும் அளவுக்கு அணுசக்தி குவிவதில்லை. ஆனால் ஒரு வெப்பமூட்டும் ஆலை சுற்றியுள்ள சூழலுக்கு அதிக நீரினை வெளியிட வேண்டி வரும். இதனால் சுற்றியுள்ள நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கும். அணு மின் நிலையம் எவ்வளவு சிறப்பாக செயற்பட்டாலும், யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் போன்ற அணுக்கருக்கள், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் உறுப்புகளின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பயன்படுத்தப்படும் கதிரியக்கக் கழிவுகளை என்ன செய்வது என்பது அணுசக்தியில் காணப்படும் சிக்கல். அமெரிக்கா அவற்றை ஒரு பெரிய மலையில் புதைத்தது. ஆனால் பசுமை அமைதி போன்ற அமைப்புகள், எரிமலை வெடித்தால் மலை முற்றாக வெடிக்கக்கூடும் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளன.
6. பாதுகாப்பு நடவடிக்கைகள்
செர்னோபில் மற்றும் புகுஷிமாவில் அணு மின் நிலையங்கள் வெடித்ததில் பேரழிவு ஏற்பட்டது. அப்போது சரியான பாதுகாப்பு நடைமுறைகளை செயற்படுத்த முடியவில்லை. 1986 இல் செர்னோபில் இருந்ததைவிட தொழில்நுட்ப ரீதியாக அணு மின் நிலையங்கள் இப்போது முன்னேறியுள்ளன. ஜப்பானின் புகுஷிமா மின் உற்பத்தி நிலையத்தில் சுனாமி வெடிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய இயற்கை பேரழிவுகள், பயங்கரவாதம் மற்றும் போரின் அபாயங்கள் குறித்து அணு மின் நிலையங்கள் அக்கறை கொண்டுள்ளன. அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டால், முழு மின்நிலையமும் சில நிமிடங்களில் பாதுகாப்பாக செயலிழக்கப்படலாம்.
7. உலக நிலை
உலகில் 450 அணு மின் நிலையங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 அணு மின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜெர்மனி இப்போது அணு மின் நிலையங்களிலிருந்து விலகி, சூரிய மற்றும் காற்றாலை போன்ற இயற்கை எரிசக்தி ஆதாரங்களை அதிகளவில் நம்பியுள்ளது. அமெரிக்காவில், இன்னும் பெரிய அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. நம் நாட்டில், அணு மின் நிலையங்கள் பற்றி எதுவும் பேசப்படவில்லை. இருப்பினும், தென்னிந்தியாவில் மின் உற்பத்தி நிலையம் குறித்து சமீபத்தில் ஒரு அறிக்கை வந்துள்ளது. இருப்பினும், எந்தவொரு சவாலான மற்றும் ஆபத்தான விஷயத்தையும் மனிதன் பயன்படுத்த முடிந்தது. அணுசக்தியை மிகவும் பாதுகாப்பான முறையில் மிகவும் திறமையாக பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.