IPHONE இரசிகர்களின் கூற்றுப்படி பார்த்தால், உலகில் இரு மனித வர்க்கத்தினர் உள்ளனர். ஒரு சாரார் IPHONE பாவிப்பவர்கள். இன்னொரு சாரார் IPHONE பாவிக்காதவர்கள். இப்படி சொல்லும் போது IPHONE இரசிகர்களின் சமூக நிலைமை பற்றி எம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆனால் அதில் ஒரு உண்மையும் உள்ளது. ஒரு காலத்தில் IPHONE இன் வருகையின் காரணமாகவே ஸ்மார்ட்போன் சமூகமயமாக்கப்பட்டது. மற்றும் புதிய NOTCH DISPLAY DESIGN ஐயும் ஸ்மார்ட்போன் உலகிற்கு அளித்தது IPHONE ஆகும். எனவே IPHONE, பயனருக்கு வேறுபட்ட சமூக நிலையை தரும் என்பதை நாம் விருப்பத்துடன் அல்லது விருப்பமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனாலேயே IPHONE எந்த விலையை எட்டினாலும் IPHONE இரசிகர்கள் அதை வாங்க முற்படுகின்றனர்.
அதன்படி, APPLE IPHONE உலகிற்கு புதிதாக உட்பிரவேசித்திருப்பது IPHONE 11 ஆகும். நீங்கள் ஒரு IPHONE பிரியராக இருப்பின் IPHONE 11 அல்லது IPHONE 11 PRO அல்லது IPHONE 11 PRO Max ஆகியவற்றை ஏன் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதை காரணங்களுடன் விளக்கவுள்ளோம்.
1. IPHONE 11 இன் வடிவமைப்பு
அதிகமானவர்கள் “IPHONE 11 இலும் அதே பழைய NOTCH DISPLAY DESIGN ஐ தான் கொண்டு வந்துள்ளார்கள்” என கூறுவார்கள். ஆனால் NOTCH வடிவமைப்பை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் APPLE IPHONE என்பதை மறவாதீர்கள். IPHONE 11 ஆனது 6.1 அங்குல LIQUID RETINA IPS LCD DISPLAY திரையை வழங்கும்போது, IPHONE 11 PRO Max ஆனது 6.5 அங்குல SUPER RETINA XDR OLED DISPLAY திரையை வழங்குகின்றது. ஆனால், IPHONE 11 PRO வினது SUPER RETINA XDR OLED DISPLAY திரை 5.8 அங்குலமாகும்.
IPHONE இல் உள்ள TOP QUALITY இங்கே மாற்றம் பெறவில்லை. விசேடமாக பின்புற கண்ணாடி PANEL மற்றும் கேமரா வடிவமைப்பை பார்க்கும் போது IPHONE இரசிகர்களிடம் பெரும் வரவேற்பை எதிர்பார்க்க முடியும். ஏனைய SMARTPHONE பாவனையாளர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தும் வகையில் இதன் தொடுதிரை வர்ணங்கள் மேலும் மேம்பட்டுள்ளது.
2. சக்தி வாய்ந்த SMARTPHONE
SMARTPHONE இன் சக்தியானது அதில் செலுத்தப்பட்டுள்ள வன்பொருள், இயக்க முறைமையிலும் மற்றும் வன்பொருள், மென்பொருளினது பாவனை முறையிலும் உள்ளது. எனவே IPHONE இல் வன்பொருள் அதிகமாக இருந்தாலும் இந்த வன்பொருளின் சிறப்பு என்னவென்றால் IPHONE 11 இல் இது சற்று அதிகமாக உள்ளது. இது சாதாரண IPHONE வாடிக்கையாளர்களுக்கும் தெரியும். எடுத்துக்காட்டாக சொல்வதாயின், iPhone 11, 11 Pro, 11 Pro Max ஆகிய பதிப்புக்களிலும் 4GB RAM உள்ளடக்கியுள்ளது. ஆனால் நடுத்தர SMARTPHONE களும் தற்போது 4GB RAM இனை கொண்டுள்ளது. ஆனால், IPHONE 11 இனை பயன்படுத்துவதால் வரும் வேகம் மற்றும் செயற்திறனுடன் 4GB RAM போதுமானதாக உள்ளது. எப்போது கடைசியாக IPHONE இறுகி சிக்கலை காட்டியதென நினைத்து பாருங்கள்.
மேலதிகமாக IPHONE 11 இன் பதிப்புக்கள் பல INTERNAL MEMORY அளவுகளை கொண்டுள்ளன. அவை 64GB முதல் 512GB வரை வேறுபடுகின்றன. மேலும் NANOMETER 7 இற்கு APPLE A13 BIONIC HEXA-CORE PROCESSOR மற்றும் CORE 4 இற்கு APPLE GRAPHIC PROCESSOR இவை அனைத்திற்கும் உள்ளது. EXTERNAL MEMORY களை உட்செலுத்த முடியாது. குறிப்பாக இந்த PROCESSOR இன் சக்தி காரணமாக, IPHONE 11 இன் பதிப்புக்கள் தற்போதைய சந்தையிலுள்ள மிக பிரபலமிக்க SMARTPHONE களுடன் போட்டியிடும்.
3. IOS 13 இயக்க முறைமை
IPHONE இனது இயக்க முறைமையில் புதிய IOS PROCESSOR வெளியாகின்றது என்றால் அது IPHONE பயனர்களுக்கு ஒரு புத்தாண்டினை வரவேற்பதை போல காணப்படும். எடுத்துக்காட்டாக, IPHONE 11 இல் சமீபத்திய IOS 13 இயக்க முறைமை IPHONE க்கு பல தனிப்பட்ட திறன்களை வழங்குகிறது. இப்போது APPLE MAPS மூலம் பயனர்கள் தம் இருப்பிடத்தை வேறொரு நபருடன் பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன் அவர் அவ்விடத்திற்கு வர மதிப்பிட்டிருக்கும் நேரத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஓடியோ பகிர்வு வசதிகள் மேலும் மேம்பட்டுள்ளன. APPLE இன் SMART DIGITAL ASSISTANT SIRI மேலும் முன்னேற்றமடைந்துள்ளது. புகைப்பட வைப்பு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஸ்மார்ட் புகைப்பட முன்னோட்ட திறன் சேர்க்கப்பட்டுள்ளது. ANIMATION சேர்க்கப்பட்டுள்ளது. தனியுரிமை மற்றும் IPHONE DATA பாதுகாப்பிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்துள்ளார்கள். இதுதவிர குறுஞ்செய்தி மற்றும் நினைவூட்டல்களில் (REMINDERS) புதிய முறைகளை கையாண்டுள்ளனர்.
4. DARK MODE (இருள் தன்மை)
இந்த நாட்களில் தொழிநுட்ப உலகில் Dark Mode குறித்து அறிய பலரும் ஆவலாக உள்ளனர். இதன் மூலம் வர்ண நிறம் கொண்ட பயனர் தொடுதிரையை இருண்ட நிறத்தில் மாற்றலாம். Dark Mode பயன்முறையானது கண்களுக்கும் smartphone battery களுக்கும் மிகவும் நல்லது. எனவே Dark Mode மூலம் அதிக நேரம் உங்கள் IPHONE 11 உடன் நேரத்தைக் கழிக்கலாம்.
இது மிகவும் கவர்ச்சிகரமான பயனர் திரையை வழங்குவது மட்டுமின்றி, முழு அமைப்பின் மின் நுகர்வுகளையும் குறைக்கின்றது. இது இயக்க முறைமையுடன் தொடர்புபட்ட ஒரு அம்சமாகும்.
5. கேமரா வடிவமைப்பு
உண்மையில் IPHONE 11 உடன் பலர் இதன் புதிய கேமரா அமைப்பை பற்றி பேசுகிறார்கள். மூன்று கேமராக்களின் அமைப்பு, குறிப்பாக IPHONE 11 PRO மற்றும் IPHONE 11 PRO Max பதிப்புக்கள் APPLE இரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளன.
IPHONE 11 இல் 12 MEGAPIXEL கொண்ட WIDE PDAF கேமரா ஒன்றும் MEGAPIXEL 12 உடைய ULTRA WIDE SENSOR மட்டுமே உள்ளது. ஆனால் IPHONE 11 PRO மற்றும் IPHONE 11 PRO Max இல் மேலே குறிப்பிட்ட கேமராக்கள் போக 12 MEGAPIXEL TELEPHOTO SENSOR கொண்ட கேமரா உம் சேர்க்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி SENSOR இற்கு 2X ZOOM திறனும் உள்ளது.
இந்த கேமரா அமைப்பு புகைப்படப் பிடிப்பை ஊக்குவிக்க அமைக்கப்பட்டுள்ளது என்பதை IPHONE இன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளவர்கள் அறிவார்கள். ஆனால் IPHONE மூலம் புகைப்படங்கள் எடுக்காதவர்கள், கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து அதை FILTERS மற்றும் SETTINGS மூலம் அழகுப்படுத்தலாம். அத்தோடு SMARTPHONE களில் அரிதாக காணக்கூடிய புதிய திட்டங்களை APPLE SMARTPHONE வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றது. அதற்கு சிறந்த உதாரணமாக IPHONE 11 இல் காணப்படும் SLOW MOTION SELFIE VIDEO எடுக்கலாம். இன்னும் சில காலங்களில் சமூக வலைத்தளங்களில் இந்த FEATURE அதிகளவில் பேசப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
6. பேட்டரி பாவனை (BATTERY)
IPHONE 11 சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் திறமையான பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது. இது உண்மையில் பேட்டரியின் அளவின் அதிகரிப்பில் மட்டுமல்ல, அதற்கு மேல் அதன் திறனிலும் ஆயுளிலும் மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, 3D தொடு திறனிலும் அதிக நேரத்தை செலவிட முடியும் .
7. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்
HOME KIT ன்பது IPHONE 11 இன் திறன்களின் தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக, பாதுகாப்பான வீடியோ திறனை பயன்படுத்தி நீங்கள் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டை கண்டறிந்து பதிவு செய்யலாம். இக்குறிப்பிட செயற்பாடு மனிதன், உயிரினங்கள் மற்றும் வாகனங்களாகவும் இருக்கலாம். இது பாதுகாப்பாக ICLOUD இல் பதிவு செய்து சேகரிக்கப்படும்.
APPLE ஆனது IPHONE 11 இனது FACE ID ஐ மேலும் மேம்படுத்தியுள்ளது. இப்போது முகத்தை மிகவும் துரிதமாக அடையாளம் கண்டு BIOMETRIC UNLOCK செய்கின்றது. இது மட்டுமன்றி இன்னும் பல விசேட திறன்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.
IPHONE 11 ஒன்றை வாங்க நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டும். இலங்கையில் IPHONE 11 இன் விலை சாதாரணமாக ரூ. 156,000 முதல் ரூ.172,௦௦௦ வரை காணப்படும். IPHONE 11 PRO 256GB ரூ.273,௦௦௦ இலிருந்து ஆரம்பம் ஆகும். IPHONE 11 பதிப்புக்களில் பெரிய IPHONE 11 PRO MAX 512GB ஆனது சாதாரண கணிப்பின்படி, ரூ.339,௦௦௦ வரை காணப்படும்.
உண்மையில் இவ்வளவு விலை கொடுத்து ஒரு IPHONE வாங்குவது உபயோகமானதா? அது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது. மூன்று இலட்சம் ரூபாய் சிறிய தொகை என எண்ணும் காலத்தில் IPHONE 11 வாங்குவது பரவாயில்லை. ஆனால் கடன் பட்டு வாங்குவதாயின் அது பெரும் முட்டாள்தனமான முடிவு.