அதிஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது. சிலர் தமது முயற்சிகளில் உடன் வெற்றியை பெற்றுவிடுவர். ஆனால் அந்த வெற்றியை அவர்கள் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். இசையை பொறுத்தவரையில் அதன் வரிகளும் இசையும் மனதை ஈர்த்துவிட்டால் எளிதில் மறக்க மாட்டார்கள். தசாப்தங்கள் கடந்தும் அந்த இசை உயிர்வாழும். எமது நாட்டிலும் அவ்வாறான இசைக்கு சொந்தக்காரர்கள் பலர் உள்ளனர். அவர்களில், ஒரு பாடலிலேயே பிரபலமடைந்தவர்கள் பற்றியே இன்று பேசவுள்ளோம்.
1. மேகலா கமகே
எமது வாழ்க்கையில் சகல விடயங்களும் இருந்தாலும்கூட சில விடயங்களை கவலையுடன் எதிர்பார்ப்போம். அதுபோலதான் இந்த மேகலா. மேகலா கமகேவிற்கு கடவுள் அழகான குரலை கொடுத்தாலும் பார்வை இல்லாத குழந்தையாக அவரை படைத்துள்ளார். பிந்திய காலப்பகுதிகளில் அவரத பாடல்கள் பெரிதாக பிரசித்தி பெறாவிட்டாலும் அவரது முதல் பாடல் மிகவும் பிரபலமாகி மக்களின் வரவேற்பை பெற்றது.
2. அப்சரா தி சில்வா
அப்சரா தி சில்வா தனது முதல் பாடலிலேயே புகழ் பெற்றவர். அதன் பிறகு அவர் பாடிய பாடல்கள் அவ்வளவாக பிரசித்தி பெறவில்லை. அவரது முதல் பாடலான இவான் பாலூஷா அவரது பிரபலத்திற்கு பின்னணியாக இருந்தது. இசை வீடியோ துறையில் ஆரம்ப கட்டங்களில் ரஷ்ய தொலைக்காட்சிப்படங்கள் அதன் பிரபலத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.
3. சுமித் அஹங்கம
அலாய் குணவர்தன எழுதி சுமித் அஹங்கம பாடிய அதிஷ்டம் நிறைந்த பாடல் “சுவந்தை மூவே மல்பெணி” என்பதில் தவறில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக ருகந்த குணதிலக பாடிய அதன் இரண்டாவது பாடலை அனைவரும் அடிக்கடி கேட்கிறோம். இதனால் சுமித் அஹங்கமவை மக்கள் மறந்துவிட்டனர். ஆனால் அந்த பாடல் இரண்டாம் பதிப்பாக வராவிட்டால் சுமித் அஹங்கமவின் பாடலையே நாம் கேட்டிருப்போம்.
4. சுனில் பெர்னாண்டோ
“நதீகட மதக நேத“ எனும் பாடல் எம்மில் பலருக்கு நினைவிருக்கும். ஆரம்பத்தில் இந்த பாடல் அமோக வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த பாடலின் உரிமையாளர் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்தான் சுனில் பெர்னாண்டோ. இந்த பாடலின் வெற்றி காரணமாக இவரை பல மேடைப்பாடல்களுக்கு அழைத்தனர். பின்னர் நீரிழிவு நோயக்கு உள்ளான இவர் படுத்த படுக்கையாகிவிட்டார்.
5. எட்மண்ட் விக்ரமசேகர
மஹா ஆச்சாரியார் சுனந்த மஹேந்திர அவர்கள் தமது மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்கிறார். இங்கிலாந்தில் ஒரு தடவை பூங்காவொன்றில் அமர்ந்திருக்கும் போது யுவதி ஒருவர் அதிக நேரம் அங்கிருப்பதை கண்ட அவர் அதனை கவிதையாக எழுதினார். இவரது நண்பரான எட்மண்ட் விக்ரமசிங்க அதற்கு இசையமைத்து பாடலாக்கினார். எட்மண்ட் அவர்கள் இயற்றிய பாடலில் பிரபலமான பாடல் இதுவென கூறினால் தவறில்லை. மேலும் இந்த பாடல் இங்கிலாந்தில் மிகவும் பிரபல்யமடைந்தது.
6. சஹேலி கமகே
இந்த பாடலை பற்றியும் பாடலை பாடியவர் பற்றியும் அதிகம் கூறத் தேவையில்லை. இந்த பாடல் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை மேம்படுத்த பயன்படுத்தப்பட்ட பாடல் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரை மாத்திரம் மையமாக கொண்டதென கூறமுடியாதென பாடகி கூறியுள்ளார். இந்த பாடல் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆதரவாளர்களின் மத்தியில் அதிகம் பிரபலம் பெற்றிருந்தாலும் இந்த பாடலில், நாட்டின் கடுமையான போக்கு குறித்து கூறப்பட்டுள்ளது.