மது அருந்தாமலேயே போதையாகக்கூடிய தருணங்கள்

சில குடிமகன்களின் குடிக்கு அளவே இல்லை. சிலர் இரண்டாவது தடவையிலேயே போதைக்கு சென்று விடுவார்கள். இன்னும் சிலருக்கு அதன் மனம் பட்டாலே போதையில் சுருண்டு விடுவார்கள். இதைப்போன்ற தருணங்களில் மற்றவர்களின் கேலிப்பார்வைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். அதனால் எம்மை விரைவில் போதைக்கு தள்ளும் விடயங்கள் தொடர்பான காரணிகள் குறித்து விபரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

 

1. தூக்கமின்மை

தூக்கமின்மையானது விரைவில் சோர்வடைவதற்கான முக்கிய காரணம்  என  மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். சோர்வு வந்தாலே மீட்டர் வேலை செய்யாது. அதுபோலவே மூளைக்கு செல்லும் நெட்வேர்க் வேலை செய்யாது. தொடர்ந்து தூக்கமில்லாமல் வேலை செய்தால் வரும் சோர்வானது குடித்துவிட்டு சோர்ந்துகிடப்பவர்களை போல எம்மை மாற்றிவிடும். அனுபவித்தவர்களுக்கு இது நன்றாக புரியும்.

 

2. நெருக்கடியான இடங்களில் குடிப்பது

நெருக்கடியான இடங்களில் குடிப்பது மற்றும் காற்று இல்லாத இடத்தில் குடிப்பது போன்ற சந்தர்ப்பங்களில் விரைவில் போதை ஏறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். உடலில் ஏற்படும் அலுப்புத்தன்மை காரணமாகவும் மதுபானத்தில் உள்ள போதை காரணமாகவும் விரைவில் அங்கே வாந்தி எடுக்கவும், தலை சுற்றி விழுதல், தலைவலி போன்ற இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

 

3. சோடா வகைகளுடன் கலந்து குடித்தல்

மதுபானம் அதிக கேடு விளைவிக்கக்கூடியது என்பதால் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களையும் அதனுடன் சேர்த்து எமது அண்ணாமார்கள் குடிக்கின்றனர். மதுபானங்களுடன் பழங்களையும் நொறுக்குத்தீனிகளையும் மட்டுமின்றி டயட் சோடா போன்றவற்றையும் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அவற்றால் விரைவிலே போதை ஏறலாம். சீனி உள்ள பானங்களின் மூலம் போதை ஏற அதிக நேரம் எடுக்கும். ஆனால் சீனி இல்லாத பானங்களால் விரைவில் போதை ஏறிவிடும்.

 

4. எடையை குறைத்தல்

ஆண் பெண் இருபாலரும் தத்தமது எடையை குறைப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆகவே எடை குறைத்தவர்கள் தாம் எடை குறைக்க முன் உட்கொண்ட அளவு மதுபானம் அருந்தினால், தமது வழமைக்கு மாறான உடலுக்கு அதனை தாங்கும் சக்தி இல்லாததால் விரைவில் போதை ஏறிவிடும். ஆகவே எடை குறைத்தவர்கள் தாம் முன்பு குடித்த அளவை விட குறைத்துக்கொள்வது சிறந்தது.

 

5. உட்கொள்ளும் உணவு வகைகள்

வெறும் வயிற்றுடன் மது அருந்தினாலும் பிரச்சினை. நன்கு வயிறு முட்ட உண்டு விட்டு அருந்தினாலும் பிரச்சினை. அதே போல கொழுப்புத் தன்மை குறைந்த உணவை உட்கொண்டுவிட்டு அருந்தினாலும் விரைவில் போதை ஏறிவிடும். அதனால் கொழுப்புத் தன்மை உடைய உணவை உட்கொண்டுவிட்டு அருந்துவதாயின் போதையாகும் அளவு சற்று நீடிக்கும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே பல சத்துக்களைக் கொண்ட உணவை உட்கொண்ட பின் மது அருந்துவது நல்ல தீர்வாகும்.

 

6. உடற்பயிற்சிகளின் போது

உடற்பயிற்சிகளின் போது மது அருந்தினால் போதை செல்லக்கூடிய துளைகளுக்கு மேலதிகமாக இன்னும் துளைகள் அதிகரிக்கும். அதன்போது விரைவில் போதை ஏற்படலாம். ஆகவே உடற்பயிற்சிகளின் போது மது அருந்தாமல் இருப்பது நன்று.

 

7. வயது முதிரும்போது உட்கொள்ளும் மது

30 வயது தாண்டிய பின் முன்பு மது அருந்தியதை போல அருந்த முடியாமல் போகின்றது. தூக்கம் வரும், சோர்வுபோல் உணரலாம். வயது செல்லும் போது மது அருந்தும் அளவுக்கு உடலில் தெம்பின்றி செல்கின்றது. அதனால் நமது வயதுக்கு ஏற்ற அளவிற்கு மது அருந்துவதே நன்று. எவ்வாறெனினும் வயது முதிரும் போது உட்கொள்ளும் மதுவினால் உடலில் பல பிரச்சினைகளையும் தாங்கும் சக்தியையும் வளர்த்துக்கொள்ளுங்கள் அண்ணாமார்களே.