வீடியோ கேம்களில் ஆர்வம் கொண்டோருக்கான பதிவே இது. நாம் பொதுவாக வீடியோ கேம்களை கணினிகளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றோம். ஆனால், ஒரு நல்ல கேமிங் அட்டையுடன் கணினியை ஒன்றுசேர்ப்பதற்கு அல்லது நேரடியாக வரும் கணினியை வாங்குவதற்கு இலட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டும். அப்படி செய்தாலும், சில காலத்தின் பின் புதிய கேமிங் அப்கிரேட் (upgrade) களின் போது நீங்கள் வாங்கும் சந்தர்ப்பம் வந்தால் வீட்டைத்தான் அடகு வைக்க வேண்டும். புதிய கிராபிக் அட்டை (Graphic Card) வாங்குவதை விட கேமிங் கன்சோல் (Gaming Console) வாங்குவது சிறந்தது. புதிய கேம்கள் இதற்கு வந்து கொண்டிருக்கும்.
PS4 2013 நவம்பர் மாதத்தின் பிறகே விற்பனைக்கு வந்தது. அதன் இன்னொரு பதிப்பு 2016 செப்டம்பர் மாதம் PS4 SLIM என்ற பெயரில் வெளியானது. அத்துடன் PS4 PRO மேம்பட்ட வன்பொருள் மற்றும் திறன்களுடன் வந்தது.
SONY தமது PlayStation 5 இனை இந்த வருட இறுதியில் வெளியிடுவதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் கேமிங் கன்சோல் (Gaming Console) வாங்காதவர்கள் PS5 இனை வாங்க அடுத்த வருட இறுதிவரை காத்திருந்து அதிக பணம் செலவிட நேரிடும் என எண்ணுகின்றீர்களா? அதற்கு பதிலாக இப்போது உள்ள PS4 வாங்க விருப்பமா?
இவ்வாறு குழம்பிப் போயுள்ளவர்கள் PS4 PRO ஒன்றை வாங்குவது சிறந்தது. அதற்கான காரணத்தை நாங்களே விளக்குகின்றோம்.
1. இதன் விலை எவ்வளவு?
பொதுவாக ஒரு இலட்சம் ரூபாய் எனும் போது அதை சிறிய தொகையாக எண்ணுவோரின் தொகை குறைவே. எம்மை போன்றவர்களுக்கு எழுபதாயிரம் எண்பதாயிரம் என்பதே மிகவும் பெரிது. PS4 PRO ஒன்றும் அந்த விலையில்தான் உள்ளது. ஆனால், இவ்வளவு காலத்திற்கும் PS4 மற்றும் PS4 PRO களின் விலை குறைந்துள்ளது. அப்படியாயின், PS 5 இனது விலை எவ்வளவாக இருக்கும்? நிச்சயமாக ஒன்றரை இலட்சத்தை தாண்டிவிடும். அப்படி இல்லையாயின், வியத்தகு விடயம் தான். எனவே, PS4 இனை வாங்க முற்படுவது இலாபம் மிக்க தீர்மானம் ஆகும்.
2. இன்னும் புதிய விளையாட்டுகள் வரவுள்ளன!
PS4 விற்கு ஏற்ற புதிய வீடியோ கேம் பல வரவுள்ளன. மற்றைய Console களுடன் ஒப்பிடும் போது SONY PlayStation சிறந்தது என்பதை கூற அவசியம் இருக்காது. ஆகவே PS4 வாங்கி இரண்டு மூன்று வருடங்கள் கடந்தாலும் விளையாட விளையாட்டு இல்லாமல் போகாது. முந்தைய விளையாட்டுகளும் இருக்கின்றன. இன்னும் அதிகமான விளையாட்டுகள் வரவுள்ளன.
3. அதன் பயன்பாடு முடியவில்லை
சாதாரணமாக பார்த்தால் PS4 வின் பயன்பாடு இந்த வருடத்துடன் முடிவிற்கு வருகிறது. இதன் பின்னர் PS 5 வின் இராச்சியமாக இருக்குமென எண்ணினால் அது முற்றிலும் தவறு. உண்மையில் அப்படியல்ல. PS4 PRO வினது வன்பொருள் மற்றும் திறன்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். உதாரணமாக PS4 PRO வில் 4K QUALITY விளைாயட்டை விளையாடவும், PLAYSTATION VR இன் மூலம் யதார்த்தமான விளையாட்டுகளை விளையாடுவதற்கான வசதிகளும் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் பொதுச்சந்தையில் இன்னும் மேம்பட்ட புரட்சிகர வீடியோ கேம் தொழிநுட்பங்கள் வருவதை கற்பனை செய்வது கடினம். ஆனாலும் என்ன? நாம் மெதுவாக அவர்களிடம் செல்லலாம்!
4. விளையாட்டுகள் முடியவில்லை!
வதந்திகளின் படி, SONY PS5 ஐbackward compatibility உடன் வெளியிடவுள்ளது. நீங்கள் விரும்பினால், PS 5 இல் PS4 வின் கேம்களையும் விளையாடலாம். ஆனால், இந்த சேவை PS4 இற்கு கொடுக்காததால், PS3 இனது விளையாட்டுகளை PS4 வில் விளையாட முடியாமல் போனது. PS3 இனது விளையாட்டுகளை PS4 விற்கு எடுத்துவர “Remaster” செய்ய வேண்டியிருந்தது. ஆனால், Backward Compatibility மூலம் அந்த சிக்கலை தீர்க்கும் போது, இன்னும் இரு வருடங்களுக்கு PS4 இற்கும் PS 5 இற்கும் பாவிக்கக்கூடிய முறையில் விளையாட்டுகளை வெளியிடுவதே தர்க்க ரீதியான விடயம். அதனால், PlayStation 5 வரும்போது PS4 பற்றி கவலைப்பட தேவையில்லை.
5. எவ்வளவு காலம் பொறுத்திருப்பீர்கள்?
SONY PS5 விற்காக ஒரு வருடம் காத்திருக்கக்கூடிய பொறுமை உடையவராயின் பரவாயில்லை. PS4 விற்கு அதிக செலவு செய்ய விருப்பம் இல்லையாயின் அல்லது ஒரு வருடம் காத்திருக்க பொறுமை இல்லை எனின், PS4 PRO வுக்கு செல்வதே சிறந்த வழி. உண்மை என்னவெனில், SONY நிறுவனம் PS5 வெளியாக உள்ள தினத்தை பற்றி எந்த அறிவித்தலும் வெளியிடவில்லை. அது விரைவிலும் வரலாம் அல்லது தாமதமாகலாம்.
6. விளையாட்டுகளை பரிமாற்றம் செய்வது இலகு
நாம் PS5 வரும் வரை காத்திருந்து அதை வாங்கி, அதற்கான விளையாட்டுகளையும் வாங்கி விட்டோம் என நினைப்போம். அதில் இருந்த விளையாட்டுகளையும் விளையாடி முடித்த பின் மீண்டும் வாங்க வேண்டும். ஆனால், PS5 புதியது என்பதால் அதற்கான விசேட விளையாட்டுகள் வழங்கப்பட்டால், அவற்றை SECOND HAND ஆக பெற வெகு நாட்கள் செல்லும். இதனால் விளையாட்டுகளை பரிமாற்றங்கள்கூட செய்ய முடியாது. ஆனால், PS4 விற்கு SECOND HAND உம் உள்ளது. இதில் விளையாட்டுகளை பரிமாற்றம்கூட செய்யலாம்.
7. PS4 உள்ளதென்றால்?
நாங்கள் மேலே கூறிய அனைத்தும் Gaming Console வீட்டில் இல்லாதவர்களுக்கானது. PS5 விற்கு காத்திருக்காமல் PS4 PRO வை பெற பரிந்துரைத்தோம். ஆனால், உங்களிடம் பழைய PS4 உள்ளதெனின் PS4 PRO வுக்கு மாறுவது அர்த்தமற்றது. உங்களிடம் பழைய PS4 இருக்குமாயின், PS5 இற்காக காத்திருக்கும் வேளை தயவு செய்து பழைய PS4 கேம்ஸ்களை விளையாடுங்கள். அதாவது நீங்கள் புதிய Gaming Console இனை பெறும்வரை அதை விளையாடுங்கள்.