சுவையான வடை செய்வது எப்படி?

“வடே வடே வடே… 10 ரூபாவுக்கு மூன்று” என்று வடைக்காரர் செல்லும் போதே வாய் ஊறிவிடும். ஆம் வடை என்பது நல்ல ருசிகரமான சிற்றுண்டிதான். இன்று நாம் வாய்க்கு ருசியான முறையில் வடை செய்வது எப்படி என்று சொல்லித்தர போகின்றோம். வாருங்கள் வடை  சாப்பிடலாம்.

 

உளுந்து வடை

தேவையான பொருட்கள்

  • உளுந்து மாவு – 250g
  • கோதுமை மாவு – 50g
  • அரிசி மாவு – 50g
  • தேங்காய் நீர் – ஒரு கோப்பை
  • ஈஸ்ட் – 1 /4 தேக்கரண்டி
  • சிறிதாக வெட்டிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய்
  • உப்பு
  • இடித்த மிளகாய்

 

ஈஸ்ட் உடன் உளுந்து மா, அரிசி மா மற்றும் கோதுமை மா கலந்து தேங்காய் தண்ணீரில் கிளறவும். தண்ணீர் சேர்க்க மறக்க வேண்டாம். எங்களுக்கு தண்ணீர் கலவை தேவையில்லை, கையால் செய்யப்பட்ட கலவையே தேவை. இப்போது இந்த கலவையை 5 முதல் 6 மணி நேரம் வைத்திருப்போம்.  சுவைக்கு ஏற்ப வெங்காயம், மிளகாய், இடித்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்க்கவும். இப்போது உங்கள் கைகளால் சிறிது தண்ணீரை எடுத்து, கலவையை தட்டி நடுவில் ஒரு துளை செய்து எண்ணெய்யில் குறைந்த நெருப்பில் பொரிக்கவும்.

 

பருப்பு வடை

தேவையான பொருட்கள்

  • கடலை பருப்பு – ஒரு கோப்பை
  • மிளகாய் – சிறிதளவு
  • வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • காய்ந்த மிளகாய்
  • உப்பு

பருப்பைக் கழுவி சுமார் 6 மணி நேரம் ஊற விடவும். 6 மணி நேரத்தின் பின் தண்ணீரை விட்டு நீக்கவும். ஒரு பிடியளவு பருப்பை அதிலிருந்து எடுத்து வைக்கவும். நறுக்கிய வெங்காயம், நறுக்கிய உலர்ந்த மிளகாய், மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பிடியளவு பருப்பில் உப்பு சேர்க்கவும். பின்னர் எல்லாவற்றையும் கலந்து சிறிய உருண்டைகளாக்கி பின் சிறிதளவு தட்டி எண்ணெய்யில் பொரிக்கவும். சுமார் 15 நிமிடங்கள் குளிர விடவும், மீண்டும் நன்கு சூடாகிய எண்ணெய்யில் குறைந்த வெப்பத்தில் பொரிக்கவும். இவ்வாறு பொரிக்கும் வடை வடை ஊறாமல் கருமுரு என்று இருக்கும்.

 

கோல்பேஸ் வடை

தேவையான பொருட்கள்

  • கரட், முட்டைக்கோஸ், கறிவேப்பிலை, வெங்காயம்
  • இறால் – 10-12
  • கோதுமை மா – 1 கப்
  • தேங்காய் – 1/2 கப்
  • உப்பு
  • மஞ்சள் – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு

கரட், முட்டைக்கோஸ், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கவும். இறால்களை சுத்தமாக வைத்திருங்கள். இப்போது கோதுமை மாவுடன் அரை கப் தேங்காய் சேர்த்து சுவைக்க உப்பு சேர்க்கவும். விரும்பினால் மஞ்சள் நிறம் ஒரு சொட்டு சேர்க்கவும்.  சிறிதளவு மா எடுத்து தோசை பதத்தில் தயாரித்துக்கொள்ளுங்கள். இது வடையுடன் இறாலை வைத்து ஒட்ட தேவைப்படும். தட்டையான குழி செய்து அதனது நடுவில் இறாலை வைத்து ஒட்டிக்கொள்ளுங்கள். இப்படியாக எல்லாவற்றையும் செய்து எண்ணைய்யில் பொரித்துக் கொள்ளவும்.

 

கடலை வடை

தேவையான பொருட்கள்

  • ஊறவைத்த கொண்டைக்கடலை – 1 கப்
  • சிவப்பு வெங்காயம்
  • உலர்ந்த மிளகாய்
  • வெட்டப்பட்ட கறிவேப்பிலை
  • இடித்த மிளகாய்
  • உப்பு

கடலையை நன்கு கழுவி அரைக்கவும். துண்டுகளாக இருக்காத வரை அரைத்துக்கொண்டே இருங்கள். இப்போது கறிவேப்பிலை, இடித்த மிளகாய், உலர்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். உப்பு சேர்த்து கலவையாக்பி பின்னர் சிறிய உருண்டைகளாக்கி பொரித்துக்கொள்ளுங்கள்.

 

மாசி வடை

தேவையான பொருட்கள்

  • ஊற வைத்த சிவப்பு பருப்பு – 250 கிராம்
  • சிவப்பு வெங்காயம் – 12
  • மிளகாய் துண்டுகள்
  • மாசி தூள் -5 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • இடித்த மிளகாய் தூள்
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய்

பருப்பை துண்டுகளாக அரைக்கவும். இப்போது சிவப்பு வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்க்கவும். இதனுடன் துண்டுகளாக்கிய பருப்பையும் சேர்த்து அரைக்கவும். மிளகாய் சேர்க்கவும். ருசிக்க உப்பு சேர்க்கவும். மாசியும் சேர்க்கவும். இப்போது, ​​இதையெல்லாம் நன்றாக கலக்கவும். மாசி வடை கொஞ்சம் முட்டை வடிவமாக இருப்பதால், நீங்கள் அந்த வடிவத்தில் உருவாக்கி குறைந்த சூட்டில் எண்ணைய்யில் பொரிக்கவும்.