புத்தக கண்காட்சியில் புத்தகங்களைத் தவிர வேறு எதனை வாங்கலாம் ??

இந்த வருட புத்தகக்கண்காட்சி இன்னும் வரவில்லை. கடந்த முறை புத்தகக் கண்காட்சியில் சிறு கிசுகிசுக்களுக்கான புத்தகங்கள் காணப்படவில்லை. ஆனால் இங்கு சென்றால் புத்தகம் மட்டுமல்ல, வாங்கக்கூடிய நிறைய பொருட்கள் உள்ளன. புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் உங்களுக்கு நீங்கள் விரும்பிய புத்தகங்கள் கிடைக்கவில்லையா? இதோ இதனை படியுங்கள்.

புகைப்படங்கள்

யாராவது உங்களிடம் வந்து புத்தகக்கண்காட்சிக்கு சென்று என்ன வாங்கினீர்கள் என்று கேட்டால் கொடுக்கக்கூடிய வேடிக்கையான பதிலே இது. விரும்பிய வகையில் புகைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்ற வேண்டும். அப்போதுதானே அதன் பயனை பெறமுடியும்! என்ன.. குழம்பிவிட்டீர்களா? இதுவும் ஒரு குருட்டுத்தனமான  இன்பம் தான். புத்தகம் வாங்குவதென்பது பலாக்கொட்டை வாங்குவது போலவா? கஜூ வாங்குவதைப் போல பெறுமதி அதிகம் ஆகவே புத்தகம் வாங்க முடியாவிட்டால் கண்காட்சியில் புகைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

 

உணவு

வீட்டில் தயாரிக்கப்பட்ட நூடில்ஸை போலல்லாமல் இங்கு வாங்கும் நூடில்ஸ் சற்று அளவாக இருக்கும். கப் ஒன்றில் வைத்து அழகாக தருவார்கள். ருசி என்றால் வித்தியாசம் இருக்காது. ஆனால் இது ஒரு உணவுப்புத்தகத்தை படிப்பது போன்றது. ஏனென்றால் இது ஒரு புத்தக பூமி ஆயிற்றே.

 

எழுதுபொருட்கள்

படிக்க புத்தகங்கள் இல்லை என்றால் அங்கு நீங்கள் எழுதுபொருட்கள் பல வாங்கமுடியும். சிலர் புத்தக கண்காட்சிக்கு இவற்றை வாங்க மட்டுமே வருகின்றனர். இதற்கான தனிக் கடைகளும் உள்ளன. இங்கே சிலவற்றை குறைந்த விலைக்கு பெற முடியும் என்பதால் தொலைதூரத்தில் இருந்து வருகின்றனர். புத்தகங்கள் மட்டும் அல்ல. பேனா, பென்சில்கள் மற்றும் சிறியவர்களுக்கான கல்விசார் பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

 

பாதங்களுக்கான மசாஜ்

கண்காட்சிக்குள் நுழைந்தவுடன் சிறிமாவோ பகுதிக்கு செல்லும் வழியில் கவிதைச்சாவடிக்கு அடுத்ததாக இது உள்ளது. நடந்து நடந்து கால்கள் சோர்வுற்ற சிலர் இங்கு வந்து பாதங்களுக்கு ஏற்ற மசாஜ் இனை பெற்றுச் செல்கின்றனர். இது சில காலங்களுக்கு முன்பிருந்தே நடைபெற்று வருகின்றது. நிச்சயமாக இந்த வருடமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

D V D

D V D க்கு என இங்கு இரண்டு பிரதான பகுதிகள் உள்ளன. குறிப்பாக BROADCASTING CORPARATION பகுதியில் நீங்கள் பழைய பாடல்களை பெறலாம். கூடுதலாக சிறிமாவோவில் உள்ள RUPAVAHINI CORPARATION பகுதியில் கார்ட்டூன்கள், நாடகங்கள் மற்றும் அதிக நிகழ்ச்சிகளை பெறலாம்.

 

தர்மம் செய்யுங்கள்

நீங்கள் கண்காட்சிக்கு வந்து உங்களுடைய தர்மங்களை சேர்க்கலாம். நாம் வாசித்து முடிந்த புத்தகங்களை வாங்கி, வாசிக்க ஆசைப்படும் சிறார்களுக்கு அளிக்க அதிகமான தொண்டு நிறுவனங்கள் உள்ளன. உள்நுழையும் முன்னரே இது போன்ற நிறுவனங்களைச் சார்ந்தோர் பலர் இருப்பதை காணலாம். அவர்களிடம் கொடுங்கள்.

 

கல்வி மற்றும் தொழில் ஆலோசனைகள்

இங்கு கல்விக்கண்காட்சிகளும் உள்ளன. இங்கு பல கல்வி நிறுவனங்கள் தமக்குரிய தனி கண்காட்சிசாலையையும் அமைப்பர். உயர்கல்விக்கு காத்திருப்பவர்களுக்கு உகந்த இடமாக இது அமையும். தொழிற்துறை சார்ந்த ஆலோசனைகளை பெற்று அதற்கேற்ப நீங்கள் செயற்படலாம்.