சிறுவர்கள் காயமடைந்தால் முதலில் இதனை செய்யுங்கள்

சிறுவர்கள் இருக்கும் வீடென்றாலே அங்கு குறும்புத்தனத்திற்கு அளவில்லை. எவ்வளவுதான் கூறினாலும் அவர்களின் குரும்புத்தனமும் சேட்டைகளும் குறையாது. சிறார்களுக்கு காயம் ஏற்பட்டால் செய்யும் சிறு வைத்தியங்கள் தொடர்பாக பலர் அறிந்திருப்பர். எனினும், அவை சரியான முறையில் செய்யப்படுகின்றதா என்பது பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

 

சுத்தம்

குழந்தைக்கு அடிபட்டவுடன் காயத்துக்கு மருந்துபோட முன் அடிபட்ட இடத்தை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி மருந்துப் பொருட்களை நன்கு சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். பொதுவாக மருந்தகங்களிலும் வைத்தியசாலைகளிலும்  மருந்துப்பெட்டிகளை எவ்வாறு பரிசுத்தமான இடங்களில் வைத்திருப்பார்களோ அதேபோல நமது வீட்டிலும் சிறுவர்களுக்கு எட்டாத இடத்தில் வைத்திருப்பது நல்லது. ஏனென்றால் சுத்தம் இல்லாத மருந்தும்கூட காயங்களின் தீவிரத்தை அதிகரிக்கும்.

 

இரத்தம் சிந்துவதை தடுத்தல்

கால்களில் இப்படியான காயங்கள் வந்தால் குழந்தையை சாய்த்து கால்களை உயர்த்தி வைக்க வேண்டும்.  காரணம் பெரிய காயமாக இருந்தால் அவற்றிலிருந்து அதிகமாக இரத்தம் வெளியேறக்கூடும். இப்படி செய்வதால் இரத்தம் வெளியேறுவது குறையும். குறிப்பாக மண், கல், புற்தரைகள் ஆகியவற்றில் விழுந்து காயம் ஏற்பட்டால் காயத்தை முதலில் நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் காலை உயர்த்திப் பிடித்து இரத்தம் வடிவதை நிறுத்துவது சிறந்தது. சாதாரணமாக கீழே விழுந்த காயம் என்றால் காயத்தை கைகளால் மூடி அழுத்தும் போது சில வேளைகளில் இரத்தம் வடிவது நின்றுவிடும்.

 

காயத்தை சுத்தப்படுத்தல்

காயம் ஏற்பட்டால் SURGICAL SPIRIT அல்லது HYDROGEN PEROCKSYDE மூலமே எமது தாய்மார் எமது காயத்தை சுத்தப்படுத்தினார்கள். ஆனால் அவற்றை பயன்படுத்தக்கூடாதென இன்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குழந்தைகளின் சருமங்கள் மிகவும் மென்மையானது என்பதால் சிறு காயங்களுக்கு அவற்றை போடுவதார் காயங்களின் தீவிரம் அதிகரிப்பதுடன் வழியை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக சைலன் அல்லது குளிர்ந்த நீரினால் சுத்தம் செய்வது நல்லது என்கின்றனர்.

 

ANTIBIOTIC CREAM

காயத்தை பக்டீரியாக்கள் மேலும் தீவிரமடைய செய்துவிடுகின்றன. அவற்றைத் தடுக்கவே இந்த கிறீமை வைத்தியசாலைகளில் உபயோகிக்கின்றனர். சிறுவர்களின் சருமத்திற்கு ஏற்ற கிரீமை வைத்தியரிடம் கேட்டுப்பெற்று அதனையும் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். மேலும் காயப்பட்ட இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று தடவை பூசவேண்டும்.

 

காயத்தை மறைப்பது அவசியம்

 

சிறுவர்கள் என்பதால் காயத்தைத் தேடவேண்டிய அவசியமில்லை. அவர்களே கூறிவிடுவார்கள். எனவே, காயத்தை சரியாக மறைப்பது முக்கியம். குழந்தை வெறுமனே புரிந்துகொண்டு காயத்தைத் திறந்து வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது. குழந்தையை திட்டாமல் காயம் தொடர்பாக அவர்களுக்கு கற்பிக்க வேண்டியது அவசியம். பின்னர் குழந்தை காயத்திலிருந்து விலகி இருக்கும்.

 

தொற்றக்கூடியதா என்பதை பார்க்க வேண்டும்

சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டவுடன் அவை விரைவாக குணமடைந்து விடுமா என்பதனை பார்க்க வேண்டும். சிறிய கீறல் காயம் காலில் ஏற்பட்டாலும் அவை மீண்டும் மீண்டும் அதே இடத்தில் படக்கூடியதாக இருக்கலாம். காயத்தின் நிறம் மாறி, அதைச் சுற்றி வீக்கம் ஏற்பட்டால், காத்திருக்காமல் ஒரு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. மருந்தின் சரியான அளவை குழந்தைக்கு வழங்குவதும் முக்கியம். காயம் வெறுமனே உலர்ந்தவுடன், மருந்துகள் நிறுத்தப்பட்டால் பக்டீரியா மீண்டும் வளரக்கூடும். அதனால் அந்த காயத்தின் தடயங்கள் நீங்கும் வரை மருந்துகளை கொடுப்பது சிறந்தது.

 

பெரிய காயம் என்றால்?

மேலே குறிப்பிட்டுள்ளபடி, சிறிய காயங்கள் உள்ள பகுதிகளில் அதனை சுத்தம் செய்து சிகிச்சையளிக்க முடியும். காயத்தை நாம் காணாவிட்டால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். சில குழந்தைகள் மேலிருந்து கீழே குதித்து காயமடையக்கூடும். அவர்களின் எலும்புகள் சில வேலை உடைந்திருக்கக்கூடும், வெளியே சிறு காயமாக இருந்தாலும் சில தசையிழையங்கள் கிழிந்திருக்கலாம். விளையாடும்போது ஒரு குழந்தைக்கு காயம் ஏற்பட்டதா, அல்லது பார்க்கும் போது வேறு யாராவது காயமடைந்திருக்கிறார்களா என்பதையும், விபத்து ஒரு கீறல் காயமா என்பதையும் பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் பெற்றோருக்கு இருக்கும் அச்சம் மற்றும் பாசம் காரணமாக, விபத்து குறித்து பெற்றோர்களிடம் உண்மையைச் சொல்வதில்லை. பெரிய காயங்களை மறைத்து, சிறிய காயங்களே ஏற்பட்டதென கூறலாம்.

 

சிறியோரின் காயங்கள் பொதுவாக பெரியவர்களை விட வேகமாக குணமாகும். இருப்பினும், சில நேரங்களில் காயத்தின் தன்மை மற்றும் பிற காரணிகள், குணமடையும் நேரத்தை அதிகமாக்கலாம். அதிகமானோர் கைமருந்து செய்வார்கள். அதனை அதிகம் நாடிச்செல்லாமல் விரைவில் ஆங்கில மருந்தை நாடுவது சிறந்தது. சிறு பிள்ளைகளிருக்கும் வீட்டில் பிளாஸ்டர், பஞ்சு, அண்டிபயாடிக் கிரீம் போன்றவற்றை வைத்திருப்பது நல்லது.