கடவுளுக்கு பதிலாக மக்கள் நம்பக்கூடிய 7 விடயங்கள்

கடவுள் இல்லையென கூறினால் கடவுள் நம்பிக்கை இல்லாத சிலர் உண்மையில் கடவுள் இல்லை என்றே கூறுவார்கள். ஆனால் அதுபற்றி எமக்கு தெரியாது. எனென்றால் கடவுளைக் கண்டவர்கள் இருந்தால் கடவுள் சார்பாக எங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துவிட்டால் எங்கள் கதை இத்துடன் முடிந்துவிடும். கடவுள் இருக்கின்றார் என்பதற்கு சாட்சிகள் இல்லாத நிலையில் கடவுளுக்கு பதிலாக அல்லது அடுத்த நிலையில் வைத்து பார்க்கும் விடயங்களை பற்றியே இன்று பேசவுள்ளோம். வாருங்கள் அவை பற்றி பார்ப்போம்.

 

நடந்தது என்ன?

கோயில் பாதுகாப்பு சபை அமைக்கும் போது அதன் தலைவரின் கனவில் கடவுள் வருகிறார். “முன்னரை விட உண்டியலில் பணம் குறைவது எப்படி? மக்களுக்கு என் மீதான நம்பிக்கை போய்விட்டதா? இல்லையானால்  திருடர்களின் விடா முயற்சிக்கு கிடைத்த விஸ்வரூப வெற்றியா?” என்று கடவுள் கேட்கின்றார். இதுமட்டுமன்றி, “முதலில் எனது உண்டியலில் இருந்து முப்பதாயிரம் ரூபாய் எடுத்து சந்தியில் உள்ள சாமரவின் கடையில் நல்ல CCTV கேமரா ஒன்று வாங்கி இங்கே பொருத்தி விடு” என்கிறார். ஆகவே, பக்தர்களே உங்கள்  பொருட்களும் காணாமல் போனால் தாமதமின்றி CCTV ஒன்றை பொருத்த மறக்காதீர்கள்.

 

அசாதாரண விடயம் நேர்ந்தால்?

நம் நாட்டில் ஒரு சிறிய தவறு செய்து அகப்பட்டால் அவரை விட்டுவிட்டு அவரை கடவுள் தண்டிப்பார் என்று கூறினால் பரவாயில்லை. ஆனால் அவற்றை ஒரு பொருட்டாக கருதாத அசாதாரண விடயங்களை செய்யக்கூடியவராக இருந்தால் உதாரணமாக பண மோசடி, பாலியல் வன்புணர்வு போன்றவற்றை செய்பவராயின் அவரையும் கடவுள் தண்டிப்பார் என்று கூறுவது முட்டாள்தனம். எனவே நன்கு யோசித்து வழக்குத் தொடர்தல் நல்ல முடிவாக இருக்கும்.

 

சுய வழியில் குணமாக வேண்டுமா?

வருத்தம் குணமாக நீங்களும் கடவுளிடம் போனீர்களா? பெரிய மேடை மீது அமர்ந்து கொண்டு இன்று கடவுள் வருவார், நாளை கடவுள் வருவார் என காத்திருந்தீர்களா? முதலில் சென்று காயத்துக்கு மருந்து போடுங்கள். ஆனால் ஒன்று. கஷ்டப்பட்டு சிகிச்சையளித்து உங்களை காப்பாற்றிய வைத்தியர்களிடம் “நன்றி கடவுளே! அந்த சாமியார் கட்டிய தாயத்தே என்னை காப்பாற்றியது” என்று மட்டும் கூற வேண்டாம். அவர் நாத்திகராக இருந்தால் மறுபடியும் வயிற்றை கிழித்துவிடுவார்.

 

மாந்திரீகம்

அளவுக்கதிகமாக பணம் இருந்தால் பயமும் கூடவே வரும். அந்த பயத்தினால் பணத்தை பாதுகாக்க போலிச்சாமியாரிடம் செல்லாதீர்கள்.  அவரோ ஆஹா சிக்கியது ஆடு என்று உங்களிடம் உள்ள பணத்தை கறந்துவடுவார். அத்துடன் அதற்கு பரிகாரமாக ஒரு 20 ரூபாய் பெறுமதியான கயிறை மஞ்சள் தடவி கொடுப்பார். இதனை உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் காட்டுமாறு கூறுவார். உண்மையில் இதன் பிறகே திருடர் வேட்டை ஆரம்பமாகும். மறைமுகமாக சொந்தக்காரனின் மூலமே பணத்தை போலிச்சாமியார் கொள்ளையடித்துவிடுவார். அதனால் மந்திரவாதிக்கு முன் உங்கள் மூளையை கசக்கி யோசித்து நல்ல SMART LOCK ஒன்றை போட்டுக்கொள்ளவும். அப்படி இல்லாவிட்டால் HIGH SECURITY SERVICE ஐயை பெறவும்.

 

ரகசியம் அறிதல்

இரகசியம் கேட்க இன்றும் கடவுளிடம் செல்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதன் மூலம் தெரியவருவது நீங்கள் இன்னும் UPDATE இல் இல்லை என்பதே. பாதி உயிர் போன கிழவன்கூட இந்தக்காலத்தில் ஃபேஸ்புக் பாவிக்கின்றனர். அழகாக இருக்கும் நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது. உண்மையில் இங்குதான் அதிக நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும். தனது மனைவி காலையில் திட்டியது முதல் இரவு தூங்க செல்லும் நேரம் வரை இதில் பகிர்கிறார்கள். ஆகவே இதில் ஒன்றிணைந்து உங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ளவும்.

 

பழிவாங்குதல்

அரசியல்வாதிகளுக்கு அவர்களது எதிர்க்கட்சி சார்பிலிருந்து ஏதாவதொரு தீங்கு விளைவிக்கப்பட்டால் அவர்கள் செய்வது என்ன? பழிவாங்குவதாக கூறி தேங்காய் உடைப்பார்கள். அதனால் ஒன்றும் நிகழப்போவதில்லை என்று அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அதனை செய்வார்கள். அதற்கு பதிலாக 10000 ரூபாய்க்கும் காரியத்தை கச்சிதமாக முடித்துத் தரும் பாதாள உலகக் குழு இருக்கும் போது, நல்ல தேங்காய்களை ஒதுக்கிவிட்டு சரியில்லாத தேங்காய்களை கல்லில் உடைக்கிறீர்கள். உண்மையில் இவர்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளது.

 

அதிஷ்ட மஹாலட்சுமி கதவை தட்டும்!

காலையில் கண்விழித்தது முதல் சோர்வாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நேற்றும் பணம் இருக்கவில்லை. இன்றும் இல்லை. நாளையும் இப்படியே சென்று விடும் போலும். அதனால் நான் கடவுளிடம் செல்லப்போகிறேன். அவரிடம் காணிக்கையாக எஞ்சியுள்ளதை கொடுக்கப் போகிறேன் என சிலர் கிளம்பிவிடுவர். பரம பக்தரே 3 தடவைகள் 2000 ரூபா பணத்தை கொடுப்பதற்கு பதிலாக  6000 ரூபாய் பெறுமதியான சுவீப் டிக்கெட்டை எடுங்கள். அதிலாவது இலட்சத்தை பார்க்கலாம். அப்படியும் அதிஷ்டம் இல்லாவிட்டால் உங்களது துரதிஷ்டத்தை அந்த கடவுளால்கூட நிறுத்த முடியாது.