SCOOTY ஓட்டும் பெண்களுக்கான குறிப்புகள்

இன்றிலிருந்து சுமார் 10 வருடங்கள் வரை REVERSE GEAR போட்டு பார்த்தால் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது அபூர்வமாக பார்க்கக்கூடிய விடயமாக இருந்தது. இந்த மாற்றத்தை இந்தியன் SCOOTY கள் இலங்கைக்கு வரத்தொடங்கிய நாள் முதல் இன்று வரை காணக்கூடியதாக உள்ளது. இது பெரிதும் பெண்களுக்கே மகிழ்ச்சியை அளித்தது. இளம்பெண்கள் மட்டுமல்ல வயது முதிர்ந்த பாட்டிகளும் SCOOTY  ஓட்டுகின்றனர். என்னவாக இருந்தாலும் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆண்களுக்கு சரிசமமாக தானும் SCOOTY ஒன்றை ஓட்ட பெண்ணொருவர் ஆசைப்படுவது அனைவரும் அறிந்த விடயம்தான். ஆனாலும் BIKE ஓட்டுவதை போலவே அதை பராமரிக்கவும் அறிந்திருக்க வேண்டும்.

 

தனக்கு பொருத்தமான BIKE ஐ தெரிவு செய்தல்

இப்போதைய BIKE சந்தையில் அதிகளவான SCOOTY MODEL கள் வந்துள்ளன. அவற்றில் சிறியது முதல் பெரியது வரை உள்ளன. பெண்களுக்கு எனும் பொழுது தமக்கு ஏற்ற அளவிலான SCOOTY BIKE ஐ தேர்ந்தெடுப்பது அவசியம். குறைந்தது வண்டி கீழே சரிந்துவிட்டால் மீண்டும் தூக்க முடியுமா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி தூக்கக்கூட முடியாத வண்டிகளை தயவுசெய்து வாங்க வேண்டாம். ஏனெனில், BIKE வாங்குவதென்பது வாங்கிய பின் வரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

 

பாதுகாப்பு

இரண்டாவதாக குறிப்பிட்டாலும் இதனையே முதலில் கவனிக்க வேண்டும். ஆகவே நீங்க SCOOTY ஓட்டும் அல்லது SCOOTY  ஓட்ட இருக்கும் பெண்ணாயின் இதை பற்றி சற்று அதிகம் கவனத்தில் எடுங்கள். BIKE ஓட்டும் போது பாதுகாப்பில் முதலிடம் பெறுவது என்னவோ ஹெல்மெட்தான். ஆனாலும் ஆண்களை போலவே பெண்களும் இதைப்பற்றி சற்று தவறான எண்ணத்தையே கொண்டுள்ளனர். ஹெல்மெட் போடுவது என்பது அழகுக்கானது என்று எண்ணியுள்ளனர். வீதி விபத்துக்களில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்துவது ஹெல்மெட்டின் தர குறைப்பாட்டினாலேயே ஆகும். ஆகவே, ஹெல்மட் வாங்கும்போது அழகுக்கு மட்டும் அல்லாமல் குறைந்தது SLS சான்றிதழ் பெற்றதையாவது வாங்குங்கள். அடுத்து ஜாக்கெட் ஒன்றையும் வாங்கிக்கொள்வது சிறந்தது. அது கொஞ்சம் பெரிதான தடித்த துணியால் தைக்கப்பட்டது என்றால் வரவேற்கவேண்டிய விடயம். ஏனென்றால், காயங்களில் இருந்தும் மழை, வெயிலிருந்தும் உங்களது உடலை பாதுகாக்கும். இதை சரிவர பாவித்து உங்களது உடலை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

 

SYSTEM களை பற்றி அறிந்திருத்தல்

BIKE என்பதும் ஒரு இயந்திரமே. இதில் ENGINE  மற்றும் CHESY போன்ற இரு பிரதான விடயங்களே உள்ளன. BIKE ஓட்டும் பெண்ணாக இருப்பின் இவை இரண்டையும் பற்றி சாதாரண அறிவாவாது இருக்க வேண்டும். அவசரமாக வீதியில் செல்லும்போது ஏதாவது என்ஜினில் கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றில் என்ன பிரச்சினை என்பதை கண்டுகொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். இதற்கு பெரிதும் துணை புரிவது FACEBOOK குழுக்களே. இவை அனைத்தையும் சாதாரண அளவிலாவது அறிந்துகொள்வது பிரதான விடயமாகும்.

 

பராமரித்தல்

நீங்கள் BIKE ஓட்டுவதைவிட அதை பராமரிப்பதே சிரமமான விடயமாகும். நீங்கள் BIKE ஓட்டுபவர் என்றால் அதனை அடிக்கடி பராமரிக்க தவறக்கூடாது. முதலில் BIKE இல் அமர்ந்தவுடன் தமக்கு போதுமான அளவில் BRAKE இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும். அடுத்து பெற்றோல் போதுமானளவு உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். அடுத்து டயர் தேய்ந்துள்ளதா என்றும் தேய்ந்துள்ளதெனில், டயரை மாற்றவும் வேண்டும். இதற்கு மேலதிகமான விடயம் ஒன்றுதான் வீதியில் SIGNAL LIGHT களை உபயோகித்த பின்னர் அவற்றை OFF செய்து விட வேண்டும். இது உமக்கும் பிற வாகன ஓட்டுநர்களுக்கும் உதவியாக இருக்கும்.

 

சட்டம் தொடர்பான விடயங்கள்

BIKE மட்டுமல்ல எந்த வாகனத்தை செலுத்தினாலும் பெண் என்ற முறையில் நாட்டின் வாகன சட்டதிட்டங்களை பற்றி அறிந்திருத்தல் வேண்டும். இல்லாவிட்டால், சட்டத்தின் அறியாமை காரணமாக பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடலாம். விபத்து ஏற்ப்பட்டால் பிறரது நட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிவரும். ஆகவே அதனை பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கும் பிறருக்கும் பயனளிக்கக்கூடிய விடயமாகும்.

 

ஓட்டுநர் சான்றிதழ் மற்றும் வாகன உரிமைச்சான்றிதழ்

BIKE ஓட்டும் பலருக்கும் மறக்கக்கூடிய விடயம்தான் இது. BIKE மட்டும் அல்ல இது எல்லோருக்கும் பொதுவான விடயம். BIKE என்று மட்டும் எடுத்துக்கொண்டால் அதற்குரிய DRIVING LICENSE, INSURANCE COPY, REGISTRATION COPY, EMISSION TEST CERTIFICATE போன்றவற்றை எப்பொழுதும் வைத்துக்கொள்வது சிறந்தது. அவற்றில் புதுப்பிக்க வேண்டியவற்றை புதுப்பிக்க வேண்டியது எமது பொறுப்பு. அவற்றை நமது SMARTPHONE களில் REMINDERS களில் வைத்துக்கொள்வது வரவேற்றக்கத்தக்கது.

 

தன்னம்பிக்கை

BIKE ஓட்டும் பெண் என்பவள் மற்றைய பெண்களை விடவும் சற்று தன்னம்பிக்கை உடையவள் என்பது குறிப்பிட வேண்டிய விடயம். ஆனாலும் பெண்கள் வீதியில் BIKE களில் செல்லும்போது பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். நீங்கள் BIKE ஓட்டும் பெண்மணி என்றால் தன்னம்பிக்கையுடன் செல்லுங்கள். அதிக சந்தர்ப்பங்களில் பொலிஸிடம் அல்லது பிறரின் இடையூறுகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவது தத்தமது ஆளுமை பற்றாக்குறையினாலே ஆகும். எனவே சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஒரு ஆளுமையை வளர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கைக்கும் உதவும்.