உடல் பருமனை குறைப்பதற்கு ஆர்வம் காட்டுவது இன்று ஒரு ஸ்டைல் ஆகிவிட்டது. டயட்டில் இருக்கின்றேன் என பெருமையாக குறிப்பிடுவார்கள். மற்றவர்கள் செய்வதால் தானும் செய்து சிக்கல்களில் மாட்டிக்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதனால் நோய்களை தேடிக்கொண்டவர்களும் இருக்கின்றனர். அதனால் டயட் இருக்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றி நாம் இன்று உங்களுடன் பேசவுள்ளோம்.
தனது உடலை பற்றி அறிதல்
முதலில் நீங்கள் உண்மையில் டயட் இருப்பது அவசியமானதா என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான BMI அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
நீங்கள் அதிக பருமனை கொண்டவராயின் தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. சிலர் தாம் பருமனாக இருப்பதால்தான் டயட் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். அதனால் டயட் இருக்க விரும்புவோர் BMI அட்டவணையை பார்த்து தனது எடையில் தேவையானளவு மாத்திரம் குறைத்துக்கொள்வது சிறந்தது.
நீங்கள் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் நபரா?
அதிக உடல் எடை உள்ளவரானால், நிச்சயமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இத்தகையவர்களின் தினசரி கலோரி தேவை போலவே போஷாக்கு தேவையும் வேறுபடும். டயட் இருக்கும் முன் தன்னிடம் சீனி நோய், கொலெஸ்ட்ரோல் நோய் குறித்த பரிசோதனை பெற்ற பின்னரே டயட் இருப்பது சிறந்தது. மற்றும் வேறு பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் டயட் இருப்பது சிறந்தது .
- பாலூட்டும் தாய்
- சுகாதார நிலைமைகள்
- போஷாக்கு குறைபாடுகள்
- கருத்தரிக்கவுள்ள பெண்கள்
- நோயாளிகள்
டயட்டிங் பற்றி அழுப்படைய வேண்டாம்
டயட்டிங் பற்றி கவலைப்படவோ அல்லது அழுப்படையவோ வேண்டாம். டயட்டிங் என்பது தனது உடலுக்கும் தோற்றத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதென்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். BURGER அல்லது PIZZA ஒன்றை கண்டவுடன் ஐயோ இதை என்னால் சாப்பிட முடியாதே என எண்ணுவதற்கு பதிலாக இது அதிக கலோரி கொண்டதென நினைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் சாப்பாட்டின் கலோரி பற்றி அறிந்துகொள்ளுங்கள். ஆனால் அதனை எண்ணி சாப்பிட்டு கொஞ்சமாவது கலோரி இல்லாதவாறு உண்ண வேண்டாம். அது உடலுக்கு கேடு விளைவிக்கும். ஒரு நாளுக்கு தேவையான அளவு கலோரியை பெற்றால் போதுமானது. அதனை தாண்டும்போது இது எனது உடலுக்கு ஏற்றதல்ல என எண்ணிக்கொள்ளுங்கள். அது மட்டுமின்றி கிழமைக்கு ஒரு முறை தான் விரும்பிய உணவை சிறிதளவு சாப்பிடுவது ஏற்றதாகும். அது உடம்பிலுள்ள METABOLISM பெறுமானத்தை சீராக பேணிக்கொள்ளும்.
உணவுக்கட்டுப்பாடு மட்டும் போதுமா?
டயட் இருக்கும்போது உணவுக்கட்டுப்பாட்டில் மட்டும் இருப்பது சாத்தியமற்றது. அதனுடன் ஒரு நாளுக்கு அரை மணித்தியாலம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தாலும் போதும். அது எந்த நேரமானாலும் பரவாயில்லை. காலையில் அல்லது மாலையில் அல்லது நேரம் கிடைக்கும்போது செய்வது அவசியமாகும். டயட்டின் போது மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் உடற்பயிற்சி செய்வது உடம்பின் ஆரோக்கியத்தை பேண உதவும்.
நண்பர்களுடன் ஊர்சுற்ற வேண்டுமா?
நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்லும்போது டயட் இருப்பது பற்றி மறந்துவிடுவார்கள். நண்பர்களுடன் வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் சாலட், நீர், பிரெஷ் ஜூஸ் போன்றவற்றை சாப்பிட்டு பொறுத்துக்கொள்வது சிறந்தது. அதைவிடுத்து தமது டயட் கட்டுப்பாட்டை இழந்து விட்டால் மீண்டும் கொண்டு வருவது சிரமமாகி விடும். அப்படி இல்லாவிட்டால் தனது டயட் திட்டத்திற்கு இன்னொரு நண்பரை சேர்த்துக்கொள்வதும் நன்று. அதுவும் இல்லாவிடின் தற்காலிகமாக நண்பர்களுடன் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்வதும் நன்கு. உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும்போது இவற்றை கவனிப்பது சிறந்தது.
உண்ணும் உணவைப்பற்றி அறிந்திருத்தல்
கட்டாயம் தான் உண்ணும் உணவைப்பற்றி அறிந்திருப்பது அவசியம். அடுத்தது தினசரி உணவிற்கான அட்டவணையை தமது செல்போன்களில் குறிப்பு வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதுமட்டுமின்றி இப்பொழுதெல்லாம் அதிகமான டயட் ஆப்ஸ்கள் நமக்கு உதவுகின்றன. டயட்டிலுள்ள ஒருவர் முதலில் தான் வழமையாக உண்ணும் உணவில் பாதியை குறைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவர் இரண்டு பிளேட் உணவு உண்பாரேயானால் அவரது உணவை ஒரு பிளேட் ஆக மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்தது தான் எவ்வாறு உணவு உட்கொண்டால் எதிர்பார்த்த நிறையை எவ்வளவு காலங்களில் அடைய முடியுமென்பதை பற்றிய அறிவை பெறவேண்டும்.
அர்ப்பணிப்பு அவசியம்
அயல் வீட்டார்களின் கருத்துக்கள்தான் டயட்டில் இருக்கும்போது எதிர்நோக்கக்கூடிய முதல் அசௌகரியம். “அந்த உணவு போதுமா? நோய்களை தேடிக்கொள்ளவா? வேறு நாட்களுக்கு எப்படி சாப்பிட்ட பையன்!” எனும் கதைகள் அடிபடும். இவ்வாறான கருத்துக்களை காதில் வாங்கிக்கொள்ளாமல் டயட் திட்டத்தை செய்து முடியுங்கள். நிச்சயமாக தனது அர்ப்பணிப்பு, விருப்பம், ஆர்வம் போன்றவை இதற்கு அவசியமாகும். டயட்டில் இருக்க ஆரம்பித்து இரு நாட்களிலே அய்யோ இதை என்னால் செய்ய முடியாது என்று கூறாதீர்கள். அல்லது அந்த எண்ணத்துடன் நீங்கள் டயட் இருந்தும் பிரயோஜனமில்லை. ஆகவே அந்த எண்ணத்தை மனதில் இருந்து அகற்றிடுங்கள்.