GOOGLE MAP இல் நீங்கள் அறியாத FEATURES

முன்பெல்லாம் தெரியாத இடத்திற்குச் செல்லும்போது அந்த இடத்தினை பற்றி  வழியெல்லாம் விசாரித்துக்கொண்டுதான் செல்வோம். ஆனால் இன்று புதிய தொழிநுட்பங்கள் பெருகி வருவதில் இந்த GOOGLE இன் MAP வசதியும் நமக்கு மிகவும் உதவுகின்றது. அதாவது யாருடைய உதவியுமின்றி சொந்தமாகவே GPS ஐ ஒன் செய்து MAP இன் மூலம் செல்லும் இடத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். மற்றும் செல்லும் வழியையும் பாதையும் பற்றியும் அறிந்து கொள்ளலாம். ஆனால் அதிகமானோருக்கு இதன் இதர பயன்களைப் பற்றி தெரியாதென்பதால் இன்று அவை பற்றி விளக்கவுள்ளோம்.

 

ADD STOP

உதாரணமாக நீங்கள் விடுமுறை நாட்களுக்கு கொழும்பிலிருந்து திருகோணமலை செல்லவுள்ளீர்கள் என்றால், GOOGLE MAP இல் அங்கு செல்ல எடுக்கும் தூரம் மற்றும் நேரத்தை பார்த்தால் தம்புள்ளை வழியாக 6 மணித்தியாலத்தில் செல்ல முடியும் என்று காட்டும். ஆனால் நீங்கள் திருகோணமலைக்கு செல்ல முன் வில்பத்திற்கு சென்று அதன் பிறகு அநுராதபுரத்தில் மதிய உணவை சாப்பிட்டு விட்டு செல்லவுள்ளீர்களென்றால் எவ்வளவு தூரம் மற்றும் எத்தனை மணித்தியாலம் எடுக்கும் என்பதை சரியாக தெரிந்துகொள்ள இந்த ADD STOP எனும் அம்சத்தை GOOGLE MAP கொண்டுள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்த, நீங்கள் செல்லவுள்ள இடத்தை DIRECTION இல் குறிப்பிட்ட பின்னர் வலது பக்க மூலையில் உள்ள மூன்று புள்ளி குறியீட்டில் உள்ள ADD STOP அம்சத்தின் மூலம் செயற்படுத்தலாம்.

 

OFFLINE MAPS

இலங்கையில் உள்ள எல்லா இடத்திலும் MOBILE DATA CONNECTION ஐ எதிர்பார்த்திருக்க முடியாது. சில இடங்களில் SIM களும் சேவையை இழந்துவிடக்கூடும். அந்த இடங்களுக்கு நீங்கள் சென்றால் உங்களால் GOOGLE MAP இனை பயன்படுத்த முடியாமல் போகலாம். இந்த அசௌகரியத்தை போக்க GOOGLE MAP இனால் தரப்பட்ட அம்சம்தான் OFFLINE MAPS. இதனை செயற்படுத்த MAP MENU வில் OFFLINE MAPS OPTION இற்கு சென்று எமக்கு தேவையான அளவு பிரமாணத்தை CLICK செய்து குறிப்பிட்டு DOWNLOAD  செய்து கொண்டால் OFFLINE யிலும் நமக்கு GOOGLE MAPS ஐ பயன்படுத்தலாம்.

 

MEASURE DISTANCE

பொதுவாக GOOGLE MAP இல் ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் செல்ல இருக்கும் தூரத்தை மட்டுமே நாம் பார்ப்போம். இது சற்று கடினம்தான். ஏனென்றால் நாம் செல்லவுள்ள இடத்திற்கான வழியை GOOGLE தீர்மானிக்கின்றது. நாம் செல்லவுள்ள இடத்திற்கான வழியை நாமே தீர்மானித்தல் எவ்வளவாக நன்றாக இருக்கும். இந்த அம்சத்தை GOOGLE MAP வழங்குகின்றது. MAP MENU விற்கு சென்று அதனுள் GOOGLE EARTH எனும் OPTION ஐ கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் DROP PIN செய்து நாம் செல்லவுள்ள இடத்தின் தூரத்தை MEASURE செய்து தரும்.

 

EXPLORE

பயணிக்க ஆசையான இடங்கள், அருகிலுள்ள நல்லதொரு உணவகம், நீங்கள் குறிப்பிடும் உணவு எங்கு கிடைக்கும் போன்ற பல வசதிகளையும் இந்த OPTION மூலம் செய்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் உங்களது MAPUPDATE செய்து வைப்பது போதுமாகும்.

 

எதில் செல்வது?

 

பொதுவாக நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு MAP போட்டதன் பின்னர், செல்லும் இடத்திற்கான தூர அளவு மற்றும் எடுக்கும் நேரத்தைதான் காட்டும். இதனை ரயிலில் சென்றால் அல்லது பைக்கில் சென்றால் அல்லது நடந்து சென்றால் எவ்வளவு நேரம் மற்றும் தூரம் எடுக்கும் என்பதையும் வகை பிரித்து காட்டும். இதற்கு மேலதிகமாக UBER TAXI யில் எவ்வளவு பணம் செலவாகும் என்பதையும் காட்டும்.

 

LOCATION SHARING

 

LOCATION SHARING பற்றி அனைவரும் அறிந்திருப்பர். ஆனால் அதிகமானோர் அதனை தேவையான இடத்தில் பாவிப்பதில்லை. பொதுவாக ஒரு இடத்தில் இருக்கும் நாம் எமது நண்பருடன் தொடர்புகொள்ள CALL செய்து இடத்தை கூறி தடுமாறி கொண்டிருக்கும் நேரத்திற்கு பதிலாக WHATSAPP, VIBER, TELEGRAM, EMAIL இதில் எது மூலமாகவும் எமது நண்பருக்கு நமது LOCATION ஐ அனுப்பி அவரை வரவழைத்துக்கொள்ள முடியும்.