உலகையே உலுக்கக்கூடிய 5 இரகசிய ஆயுதங்கள்

இராணுவத்தின் ஆயுத தொழிநுட்பமானது பல்வேறு முன்னேற்றங்களை கண்டு உலகையே அழிக்கக்கூடிய வல்லமை பெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது இருந்த ஆயுதங்களுக்கும் இப்போது 70 வருடங்கள் கழித்துள்ள ஆயுதங்களுக்கும் அதிக வித்தியாசமுண்டு. அவ்வாறாக இரகசியமாக உருவாக்கப்பட்ட 5 ஆயுதங்களை பற்றி இன்று பார்க்கவுள்ளோம்.

 

POSEIDON

ரஷ்ய நாட்டு கண்டுபிடிப்பான இது நீருக்கடியில் மிக தொலைவில் சென்று வெடிக்கக்கூடிய ஒரு அணு ஆயுதமாகும். சுமார் பத்து ஆண்டுகளாக தொடர்ந்த இதன் உருவாக்கப் பணிகள் 2018 ஆண்டளவில் நிறைவுபெற்றது. 65 அடி நீளமும் 6.7 அடி சுற்றுவட்டமும் உடைய இது கடலில் பயணம் செய்து எதிரிலுள்ள இலக்கை தாக்கக்கூடியது. இதன் தாக்கத்தின் போது ஏற்படக்கூடிய 200 மெகா டொன் அழுத்தத்தின் காரணமாக 500M உயரமுடைய சுனாமி அலைகளை உருவாக்கக்கூடியது. இதன் மூலம் அருகிலுள்ள நகரங்களும் சுனாமி குளியலை அனுபவிக்க முடியும். இந்த போசெய்டன் அணு ஆயுதமானது நீருக்கடியில் 130 KM வேகத்தில் செல்லக்கூடியது. ரஷ்யா இதற்கென ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் உருவாக்கியுள்ளது.

 

SOLAR RECHARGABLE DRONE

DEFENCE ADVANCED RESEARCH PROJECT AGENCY (DARPA) எனும் அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கபட்ட இது சூரிய மின்கலத்தினால் பறக்கக்கூடிய DRONE ஆகும். சாதாரணமாக DRONEகள் சில மணிநேரமே வானில் பறக்கக்கூடியது. இதன் SOLAR செயற்பாட்டினால் அதிக நேரம் வானில் உலாவ முடியும். இதன்மீது பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எதிரி நாட்டின் தாக்க வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் சரியான இடத்தில தாக்குதலை துல்லியமாக செய்து முடிக்க முடியும்.

 

GIANT IONOSPHERE ZAPPING RADAR

இந்த ஆயுதத்தின் மூலம் உயர் வளிமண்டல அடுக்கான IONOSPHERE இற்கு சக்தி வாய்ந்த ரேடியோ அலைகளை அனுப்பி பூமியில் செயற்கையான சுனாமிகள், நிலநடுக்கம் போன்ற இடர்களை உருவாக்க முடியும். மேலும் இதனால் விண்வெளியில் உள்ள மிக தொலைவிலுள்ள இதர செயற்கைக் கோள்களைக்கூட கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து செயற்படுத்த முடியும். சீனா இந்த கருவியை தனது சொந்த தீவான ஹைனனில் வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதேபோல் ஹார்ப் எனும் தொழிநுட்பமும் அமெரிக்காவிடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது உலக நாடுகளை அச்சுறுத்த அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட பொய் என்பதாகவும் கூறப்படுகின்றன.

 

PROJECT THOR

ஜெர்ரி போர்னள்ளி எனும் ஆராய்ச்சியாளர் 1950 களில் கண்டுபிடித்த ஒன்று தான் தொன்ஸ்தான் எனும் உலோகம். இது அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது. 9000 KG நிறையும் 20 அடி நீளமானதுமான ஒரு கம்பியை உருவாக்கி விண்வெளியிலிருந்து எதிரி நாட்டிற்கு ஏவும்போது ஏற்படும் அழிவு அணுஆயுத தாக்குதலை விட வீரியமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். ஆனால் 9000KG இற்கு மிகவும் அதிகமான செலவு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் உள்ளனர். ஆனால் அமெரிக்காவின் பென்டகன் இது குறித்த ஆராய்ச்சிகளை தொடர்ந்தும் செய்துவருவதாக தெரிவித்துள்ளது.

 

SEA DRAGON WEAPON

அமெரிக்கா மற்றும் பெயர் தெரியாத நிறுவனம் ஒன்று இணைந்து உருவாக்கிய ஏவுகணையான இதை பற்றிய தகவல்களை அமெரிக்கா வெளியிட மறுத்து வருகின்றது. SEA DRAGON WEAPON பற்றி கசிந்த சில தகவல்கள் என்னவென்றால், இந்த ஆயுதத்தை அமெரிக்கா கடலில் நீர்மூழ்கிக் கப்பலில் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும், இதனை உபயோகப்படுத்தினால் மணிக்கு 4000KM வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. 4000KM வேகம் என்பது ஒளியின் வேகத்தை விட அதிகமாகும். மேலும் இதன் மூலம் ஒரு குறுகிய தூர இலக்கை கண் இமைக்கும் நொடியில் அழித்து விட முடியும்.