நிலத்தின் கீழிருந்து வெளிவந்த 6 நகரங்கள்

பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பல நகரங்களும் கட்டிடங்களும் சில கால மாற்றங்களினால் பூமிக்கடியில் புதையுண்டன. இவை தொல்லியல் ஆராய்ச்சிகளின்போதும் அகழ்வாராய்ச்சிகளின்போதும் தொடர்ந்தும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பூமிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட 6 மர்ம நகரங்களைப் பற்றி பார்ப்போம்.

 

GOBEKLI TEPE , துருக்கி

1994இல் துருக்கியின் ஸன்லுஇருபா மாகாணத்தில் ஓரென்சிக் எனும் இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் பின்னர் இது 12000 வருடங்கள் பழைமையான நாகரீகமாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இது வட்ட வடிவமாக அமைந்திருப்பதும் இதில் உள்ள 12 தூண்களும் பாலைவனப்பகுதியில் இருந்து எடுத்துவரப்பட்ட ஒரு வகை சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டிருப்பதாலும் 10000 வருடங்களிற்கு முன்னர் மனிதனால் கட்டப்பட்ட கோயிலாக இருந்திருக்கலாமென கணிப்பிடப்படுகின்றது. இந்த இடத்தின் அமைப்பினது 5% மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவை பூமிக்கடியில் புதையுண்டு இருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது.

 

கீழடி தமிழ்நாடு, இந்தியா

இந்தியாவின் மதுரை மாவட்டத்திலிருந்து 12KM தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், பலநூறு வருடங்களாக மண்ணில் புதையுட்டிருந்த தமிழரின் பெருமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது அகழ்வாராய்ச்சிகளின் போது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நேர்த்தியான முறையில் மனிதன் நீர்வடிகால்கள் மற்றும் வணிகத்தை நடாத்தி வந்ததை “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி” என்ற வாக்கியத்தின் மூலம் மேலும் உலகிற்கு ஒலிக்கச் செய்தது இந்த கீழடி அகழாய்வு. ஆனால் பல சதித்திட்டங்களினால் இதன் பணிகள் முடக்கப்பட்டு இருந்தாலும் பின்னர் நடத்தப்பட்ட மீள் அகழாய்வின் போது தமிழனின் பெருமை உலகெங்கும் ஒலித்தது.

 

CATACOMBS OF PARIS

அழகான பாரிஸ் நகரத்தின் மற்றுமொரு அகோரமான பகுதியாக இருப்பதுதான் இந்த இடம். பல மைல்கள் நீளத்திற்கு மனித மண்டையோடுகளால் நிரம்பி வழியும் பாதாள மண்டை ஒட்டு சுரங்கமாக இது உள்ளது. கி.பி 5 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனிய பிராங்கிஸ் இனத்தவர்களால் லைன் ஸ்டோன்ஸ் எனப்படும் சுண்ணாம்புக்கல்லின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்டி அதனை வெட்டி எடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். காலப்போக்கில் பாரிஸ் நகரினில் மக்கள் சனத்தொகை அதிகரிக்க மறுபுறம் இறந்தவர்களை புதைக்க போதியளவு இடவசதி அற்ற இடமாகவும் பாரிஸ் மாறியது. இறந்தவர்களின் உடல்களில் இருந்து வந்த துர்நாற்றத்தினால் பல தொற்றுநோய்கள் வந்ததால் 17 ஆம் நூற்றாண்டளவில் இந்த காட்டாகோம்ப்ஸ் சுரங்கத்தில் சுமார் 60 இலட்சம் மக்களின் எலும்புக்கூடுகளை சுமார் 1 வருடமாக இதனுள் அடுக்கி வந்துள்ளார்கள். உலகிலுள்ள முதல் பாதாள கல்லறை சுரங்கமும் இதுதான்.

 

CAPPADOCIAN UNDERGROUND CITY

டெரின்கியூவ் எனும் பகுதியில் 1963 இல் ஒருவர் தனது வீட்டை மறுசீரமைப்பு செய்யும்போது இந்த பாதாள நகரத்தை கண்டுபிடித்துள்ளார். இதனை மேற்கொண்டு ஆராய்ந்ததில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் 20000 பேர் வசிக்கும் அளவுக்கு அறைகளை நேர்த்தியாக அமைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு படையெடுப்புக்களால் பாதிக்கப்பட்டிருந்த பண்டைய கால துருக்கி மக்கள் இந்த இடத்தில் மறைந்து வாழ்ந்திருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

 

TERRACOTA ARMY

சீனாவின் XIAN எனும் இடத்தில் 1974இல் ஒரு உள்ளூர் விவசாயி கிணறு தோண்டும்போதுதான் இந்த இடத்தை பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 6000 போர்வீரர்கள் மற்றும் குதிரைகளின் சுடுமண் சிலைகள் ஆகியன வெளிப்பட்டுள்ளன. பின்னர்தான் இது சீனாவின் முதல் மன்னனான சின் சி ஹுவாங் இனால் உருவாக்கப்பட்ட டெர்ரகோட்டா ARMY என வெளிப்பட்டது. சுமார் 2200 ஆண்டுகளாக காலத்தால் அழிக்கப்படாத இந்த சிலைகளை பார்த்ததும் தொல்லியல் ஆரய்ச்சியாளர்கள் வாயடைத்து போய் இருந்தார்கள். இந்த மன்னனின் காலத்தில்தான் சீனப்பெருஞ்சுவர் எழுப்பப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

 

UNFINISHED OBLISK OF EGYPT

எகிப்தில் உள்ள அஸ்வான் எனும் கிரனைட் சுரங்கத்தில் கண்டுபிடிக்கட்ட இந்த ஒப்பிலிஸ்க் எனப்படும் கிரனைட் தூண் போன்ற அமைப்பு பூமியுடன் முழுமையாக இணைக்கப்பட்டிராத ஒன்றாகும். இது 137 அடி நீளமும் 1100 மெற்றிக் தொன் எடை கொண்டதாகவும் இருக்கின்றதென ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஏறத்தாழ 3500 வருடங்கள் பழைமையான இந்த தூண் போன்ற அமைப்பு எதற்காக அமைக்கப்பட்டதென இன்னும் கண்டறியப்படவில்லை.