இன்று உறவினர்கள், நண்பர்களுடன் கருத்துப்பகிர மற்றும் கதைக்க வாட்ஸ்அப் பயன்படுகின்றது என்றால் மிகையாகாது. பாதுகாப்பான உரையாடலாக கருதப்படுவதோடு, குழுவாக உரையாட கருத்துப்பகிர இது மிகவும் உதவுகிறது. ஆனால் அதிகமானோருக்கு இந்த வாட்ஸ்அப்பில் உள்ள பயன்தரக்கூடிய பல விடயங்களை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறானோருக்கு உதவக்கூடிய குறிப்புகளே இவை.
SWIPE FONT STYLE
புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் மூலம் அனுப்பும் போது அந்த போட்டோவின் மீது ஏதாவது எழுதி அனுப்புவோம். அப்படி எழுதி அனுப்பும் போது அந்த எழுத்துக்களை வாட்ஸ்அப்பின் DEFAULT ஆக இருக்கும் FONT STYLE மூலம்தான் அனுப்ப முடியும். இதற்கு மேலதிகமாக இந்த FONT STYLEகளை மாற்றவும் முடியும். புகைப்படத்தின் மீது டைப் செய்யும் போது வர்ணத்தையும் மாற்ற முடியும். அந்த வர்ண கோட்டிலிருந்து இடது பக்கமாக SWIPE பண்ணும் போது FONT STYLE மாறும்.
LINE THICKNESS DRAWING
புகைப்படங்களை அனுப்பும்போது அதில் ஏதாவது கீறி அனுப்புகின்றோம். அப்படி கீறி அனுப்பும்போது அங்கு கீறும் பென்சிலின் THICKNESS ஐ அதிகரிக்க, நாம் FONT ஸ்டைலை மாற்ற செய்தது போலவே இதையும் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் பென்சிலின் THICKNESS ஐ அதிகரிக்கலாம்.
VOICE RECORD TIPS
VOICE RECORD செய்து அனுப்பும் போது முன்பெல்லாம் அந்த MIC ஐகனை பிடித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த UPDATE இன் மூலம் அந்த MIC ஐகனை DRAG செய்து மேலே தள்ளி விட்டால், அது AUTORECORD ஆகும். அந்த VOICE RECORD பிழைத்து விட்டால் அதையும் CANCEL செய்து கொள்ளலாம்.
PRIVATE STATUS
உங்களது வாட்ஸ் அப்பின் STATUS ஐ நீங்கள் விரும்புபவர் மட்டும் பார்க்க வேண்டுமென்றால் STATUS பக்கத்தில் STATUS PRIVACY ஐ CLICK செய்யவும். அதில் ONLY SHARE WITH எனும் OPTION ஐ கிளிக் செய்து உங்களுக்கு விரும்பிய CONTACT ஐ மாத்திரம் SELECT செய்து கொள்ளலாம்.
READ RECEIPTS
உங்கள் நண்பருக்கு அவர் அனுப்பிய மெசேஜ்களை நீங்கள் பார்த்தீரா இல்லையா என்பதை அவருக்கு தெரியாமல் வைக்க வேண்டுமென்றால் SETTINGS > ACCOUNT > PRIVACY > READ RECIEPTS > OFF செய்து கொள்ளவும்.
SWIPE RIGHT
வாட்ஸ் அப் குழுவில் ஒருவரது மெசேஜிற்கு REPLY செய்ய வேண்டுமென்றால் அவர்களது மெசேஜினை வலது புறமாக SWIPE செய்வதன் மூலம் அவர்களது மெசேஜிற்கு REPLY செய்ய முடியும். அல்லது அவர்களது மெசேஜிற்கு PRIVATE ஆக REPLY பண்ண வேண்டுமென்றால் அதே மெசேஜை கிளிக் செய்து வலது பக்க மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து REPLY PRIVATELY எனும் OPTION ஐ பயன்படுத்தலாம்.