நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் வேலைகள்

பயனுள்ள வேலைகளை செய்யவே மக்கள் ஆசைப்படுகின்றனர். அவற்றில் அற்பமான வேலைகள் செய்தாலும், அவை பயனுள்ளவை என உலகிற்கு காட்ட முனைகின்றனர்.  இருப்பினும்,  இந்த வழியில் செய்யப்படுபவை பயனற்றதாகவே அமைகின்றன. இவற்றினால் நேரம், பணம், முயற்சி ஆகியவை வீணாகின்றன.  இவை மூன்றையும் அர்த்தமின்றி செலவழிக்கவே கூடாது. நீங்களும் இவ்வாறு வீணடிக்கப்போகிறீர்கள் என்றால் இதை கட்டாயம் வாசியுங்கள். யாரேனும் ஆலோசனைக்காக உங்களை நாடினால் இவற்றை சொல்லிக்கொடுங்கள்.

 

மிஸ்டர் பெர்பெக்ட்  

இது எமது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். நாங்கள் வேலையைச் செய்யும் போது, ​​மிஸ்டர் பெர்பெக்ட் அல்லது மல்டி டாஸ்கர்களாக  இருப்பது உகந்ததல்ல.  ஏன் என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம். பொதுவாக மல்டி டாஸ்கர் அல்லது மிஸ்டர் பெர்பெக்ட் ஆக இருப்பது நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். மேலும், மிஸ்டர் பெர்ஃபெக்டாக இருப்பது எல்லாமே உங்களை கடினமாக உழைக்க வைக்கும் மற்றும் உங்கள் வேலையை குறைக்கிறது.

 

D I Y   (Do It Yourself)


நீங்கள் பேஸ்புக்கில் இருக்கும் போது மற்றவர்களின் வதந்திகளைத் தேடுவதற்குப் பதிலாக ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறீர்கள் என்று DIY (Do It Yourself)  வீடியோக்களைப் பார்க்கிறீர்களா? ஆனால் அதில் ஏதேனும் பயன் கிடைத்துள்ளதா? உங்கள் வீட்டில் இது போன்ற காரியங்களைச் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா?  அல்லது அதைச் செய்ய உங்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லையா? எத்தனை உணவு தயாரிக்கும் வீடியோக்களைப் பார்த்தீர்கள்? ஒரே வீடியோவை எத்தனை முறை பார்த்தீர்கள்? நாங்கள் இன்னும் எதையும் முயற்சித்தோமா? உண்மையில், நீங்கள் ஒரு நண்பரின் விடயங்களை தேடினால், அது உங்கள் மகிழ்ச்சியை பூர்த்திசெய்ததா? நீங்கள் ஒரு சாதாரண மனிதனாக சமைப்பதில் அல்லது வீட்டுவேலைகள் செய்வதில் ஆர்வமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அப்படியில்லை என்றால்  சமைக்க, மின்சாரவேலை, பரிசு பொதிசெய்ய,  தச்சுவேலை, வீட்டை சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு வீடியோ பார்ப்பது மொபைல்டேட்டா (MOBILE DATA) மற்றும் காலத்தை வீணாக்குவதாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

முகநூல் செய்திகள்

பலர் தங்கள் நேரத்தை செலவிடும் இடங்களில் ஒன்றாக முகநூல் (Facebook)  மாறிவிட்டது. தற்போதைய அரசாங்கம் அவ்வப்போது அதை அணுக தடைவிதித்தபோது, ​​துணிச்சலுடன் பேசியவர்கள், இது தேசிய பாதுகாப்பு மற்றும் தகவல் உரிமைக்காக செய்யப்பட்டது என்று தற்பெருமை காட்டினர். ஆனால் இது தேசிய பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகவும் காணப்பட்டது. தவறான தகவல்கள் குவிப்பு, இராணுவ நடவடிக்கைகள் பற்றிய வெளிப்பாடுகள் மற்றும் சிறிய தலைப்புச் செய்திகள் போன்றவை எந்தவொரு பொதுக்கருத்தையும் தூண்டவில்லை. ஏப்ரல் 1 ஆம் திகதி (முட்டாள்கள் தினம்) மட்டும் காணப்படும் செய்திகளை நாம் இருமுறை சரிபார்க்க வேண்டுமா? அதற்காக நாம் செலவிடும் நேரமும் நம்பிக்கையும் எவ்வளவு தவறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

தி கலெக்டர் (The Collector)

கவர்ச்சிக்காக பலவற்றை சேகரிக்க பலர்  விரும்புகிறார்கள். சிலர் படிக்காத புத்தகங்களை சேகரிக்கின்றனர். பல்வேறு நாடுகளில் நாணயங்களைப் பற்றிய எந்த அறிவும் அல்லது படிப்பும் இல்லாமல் சேகரிக்கப்படுகின்றன. புத்தகங்களை நிரப்ப முத்திரைகள் சேகரிக்கப்படுகின்றன. எந்தவொரு ஆசை அல்லது நிதி வலிமையும்  இல்லாமல்  பழம்பொருட்கள், காலணிகள் அல்லது கைப்பைகள்  சேகரிப்பது ஒரு குற்றம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  இது பணத்தையும் இடத்தையும் வீணாக்குவதாகும். உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத புத்தகக்கடையை அடுக்கி வைப்பதன் மூலம் நீங்கள் கல்வி கற்கிறீர்கள் என்று நினைத்தால் அது உண்மையில் பணத்தையும் இடத்தையும் வீணடிப்பதற்கு சமனாகும்.

விமர்சித்தல்


தொழில்முறை  விமர்சகர்கள் திரைப்படங்களைப் பார்ப்பது, புத்தகங்களைப் படிப்பது அல்லது கலையை அனுபவிப்பது மற்றும் கருத்து தெரிவிப்பது பொதுவானது. கலை சிக்கல்களை தீர்ப்பதற்கு இந்த விமர்சனங்கள் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.  ஆனால் முகநூல் (facebook) பலருக்கு ஒரு தளமாக மாறியுள்ள நிலையில், கலைப் படைப்பினை குறை கூறல் என்பது பலரும் நீண்ட காலமாக பார்க்க விரும்பிய ஒன்று. அதாவது,  ஒரு கலைப்படைப்பு சரியான அறிவு இல்லாமல் வெளியிடப்படும் போது, ​​அதைப்படித்து அல்லது பார்த்து மற்றும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவது ஒரு குழுவினரின் செயலாகும். ஆராய்ந்து பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லாத இந்த நடவடிக்கைகள் உங்கள் நேரத்தை வீணடிக்கக்கூடியது. எனவே இது ஒரு தொழில் முறை விடயம் அல்ல என்றால், தயவு செய்து கலையை விமர்சிப்பதை விட்டு விடுங்கள்.

திருமணம்

இக்காலக்கட்டத்தில் திருமணம் என்பது ஒரு முக்கிய விடயமாகும். இந்த தேவைக்காக பல வேலைகள்கூட உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக அதிகமான பணம் செலவு செய்யப்படுகின்றது.  ஒரு திருமணத்தின் அவசியம் பற்றி கேட்டால், பலர் சிறிய விளக்கத்தை அல்லது விளக்கத்தையே அளிப்பதில்லை.  “வாழ்நாளுக்கே ஒன்று என்பதால் அல்லது பெற்றோரின் கட்டாயப்படுத்தலினால்” போன்ற காரணங்கள் என கூறுவர். திருமண செலவிற்கு உங்களிடம் பணம் இருப்பின்,  எப்பிரச்சினையும் இல்லை. மாறாக இவை தனிப்பட்ட வங்கிக்கடன் மூலம் செய்யப்பட்டதாயின் அல்லது வீட்டை வாங்க வைத்திருந்த பணத்தினால் நடத்தப்பட்ட திருமணமாயின் இது உண்மையில் தவறு என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த அதிக செலவு காரணமாக, உங்கள் வாழ்க்கையின் வெற்றி பல ஆண்டுகளுக்குப்  பின்னால் தங்கி இருக்கலாம்.  ஆகவே,  மிக முக்கியமானது என்று நீங்கள் நினைக்கும் அதிக செலவு கொண்ட திருமணத்தை பற்றி இரு முறை சிந்தியுங்கள்.

மற்றவர்களின் வேலை பற்றி ஆராய்தல்

இதைப்பற்றி கூறும்பொழுது  திரு.பிரேம கீர்த்தி டி அல்விஸ்  எழுதி  திரு. விக்டர் ரத்நாயக்க   இசையமைத்து திரு. ஃப்ரெடி சில்வா  பாடிய ஒரு சிங்களப்பாடல் நினைவிற்கு வருகின்றது.

அப்பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது . . . . .

                           “அடுத்தவனின் வேலையை விமர்சிப்பதை விட்டு விட்டு

                             உங்களுக்குத் தெரிந்ததை சரியாக  செய்யுங்கள். “

உண்மையில் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அடுத்தவர்களை கேலி செய்து ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். உங்கள் சக ஊழியரை கேலி செய்ய நீங்கள் செலவழிக்கும் நேரத்தில் உங்கள் வேலையை நீங்கள் சரியாக செய்திருப்பின், நீங்கள் ஒரு நல்ல வேலையையோ அல்லது ஒரு நல்ல ஊதியத்தையோ சம்பாதிக்க முடியும்  என்பதை புரிந்து கொள்வீர்கள்.