கட்டாயம் முயற்சிக்க வேண்டிய புதிய ANDROID LAUNCHERS

ANDROID இற்கான LAUNCHER என்று வரும்போது, ​​அநேகமானோருக்கு மனதில் வரும் முதல் விருப்பம் NOVA LAUNCHER தான். LAUNCHER நீண்ட காலமாக நிறைய அம்சங்கள் மற்றும் தனிப்பயனாக்கங்களை வழங்குவதால் இது மிகவும் இயல்பானது என்றாலும், உங்களில் பலர் புதிய LAUNCHERஐ இன்னும் புதிய COOL OPTIONகளுடன் தேடுகிறீர்கள். இது 5 புதிய ANDROID LAUNCHERகளின் பட்டியலை தொகுக்க எங்களுக்கு ஊக்கமளித்தது. நீங்கள் இதனை முற்றிலும் பார்க்க வேண்டும்.

 

Lawnchair

இந்த LANCHER ஐ முதலாவதாக போடக் காரணம் எனக்கு உண்மையில் பிடித்திருந்தது. மேலும் இதைத்தான் நான் எனது போனிலும் பாவிக்கின்றேன். இதில் அதிகமான குஸ்டோமிஸ்ட்டிங்கால் இருக்கின்றன. மேலும் எந்தவொரு AD களும் இதில் வராது. மேலும் சில புதிதாய் OPTIONகள் மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும். DOUBLE TAP to SLEEP THE DEVICE OPTION மிகவும் COOL OPTION  ஆகும்.

 

Hyperion Launcher

இது மற்றுமொரு சிறந்த LAUNCHER ஆகும். சற்று அதிகமான CUSTOMIZED OPTIONகளை எதிர்பார்க்கும் ஒருவராக இருப்பின் உங்களுக்கு ஏற்ற மற்றுமொரு LAUNCHER தான் இது. இதுவும் முற்றிலும் இலகுவான மற்றும் இலவசமான ஆப் ஆகும். இந்த LAUNCHER ஆப்பிலுள்ள ஒரு முக்கிய அம்சம்தான் உங்களது இதர ஆப்களை FINGERPRINT LOCK செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த OPTION ஐ நீங்கள் செயற்படுத்த நீங்கள் ஆப் ஐ வாங்க வேண்டும்.

 

Niagara Launcher

சந்தேகத்திற்கு இடமின்றி மற்ற எல்லா LAUNCHER களையும் விட இதில் ஒரு சிறப்பான FEATURE அடங்கியுள்ளது. SCREEN இந்த வலது புறத்தில் ALPHABETICAL வரிசையில் ஆப்கள் அமைந்திருக்கும். அதனை வேண்டியவாறு இழுத்துச் செல்லலாம். உங்கள் இசையைக் கட்டுப்படுத்த முகப்புத் திரையில் ஒரு எளிமையான இசை விட்ஜெட்டும் உள்ளது. இந்த NIAGARA LAUNCHER உங்களது ஒவ்வொரு DEVICE இற்கும் வேறுபட்டது.

 

Customized Pixel Launcher

இந்த LAUNCHER உம் மற்றவைக்கு சளைத்ததல்ல. ஏனென்றால் இதில் தரப்பட்டுள்ள FEATURES அனைத்துமே முற்றிலும் இலவசமானது. மேலும் இது பெயரிற்கு ஏற்றவாறே PIXEL LAUNCHER இல் சற்று CUSTOMIZING செய்ய விரும்புவோருக்கு ஏற்ற ஒன்றாகும். HYPERION LAUNCHER இல் வாங்க வேண்டிய OPTION இங்கு இலவசமாக தரப்பட்டுள்ளது. அதாவது FINGERPRINT LOCK FOR APPS எனும் OPTION தான் அது. இந்த ஆப் வெறும் 3.9 MB மட்டுமே.

 

Before Launcher

உங்களது சிரமத்தை குறைத்து குறுகிய அனுபவத்தை பெற விரும்பும் அனைவருக்கும் ஏற்றது. ஏனென்றால் இந்த LAUNCHER இல் MESSAGING APPS எனும் குழுவில் MESSAGING இற்காக பயன்படுத்தப்படும் ஆப்களை இதனுள் போட்டுக் கொள்ள முடியும். PHOTOS இற்காக பயன்படுத்தும் ஆப்ஸ் களை PHOTOS குழுவிலும் மேலும் பல இதர குழுக்களை உங்களுக்கு விரும்பியது போல் CUSTOMIZED செய்து கொள்ள முடியும். மேலும் QUICK ACCESS TO RECENT APPS எனும் OPTION உம் உள்ளது. இந்த LAUNCHER 7 .7 MB ஆப் ஆகும். மேலும் இதனை பாவிக்க உங்களது ANDROID DEVICE 7.0 (NUOGUT) VERSION ஐ விட அதிகமாக இருக்க வேண்டும்.