உலகின் மிகப்பெரிய உயிரினங்கள்

GOLIATH FROG

இது ஒரு தவளையினமாக இருந்தாலும் சாதாரண தவளையின் அளவை விட இது அதிகமாக இருக்கும். சராசரியாக இதன் நீளம் 35CM வரையும் இதன் எடை 3KG வரையும் இருக்கும். இது மத்திய ஆபிரிக்காவில்தான் அதிகமாக காணப்படும். மிகப்பெரிய அளவில் இருக்கும் இந்த தவளையினால் 10 அடி வரை தாவி நீருக்குள் செல்ல முடியுமாம். மேலும் இது ஒரு தடவை நீருக்குள் சென்றால் சுமார் 15 நிமிடங்கள் வரை நீருக்குள் மூச்சை தாக்குப்பிடிக்க முடியுமாம். இதன் ஆயுட்காலம் 21 வருடங்களாகும். மத்திய ஆபிரிக்க மக்கள் கோழி இறைச்சிக்கு பதிலாக இதன் சுவை நன்றாக இருக்கும் என்று இதனை வேட்டையாடி உண்பதே இந்த உயிரினம் அழிவதற்கு காரணம்.

 

LEATHERBACK SEA TURTLE

இது மிகவும் பெரிய ஆமையினமாகும். இதன் பெயரிற்கேற்ப இதன் ஓடும் லெதர் போன்றுதான் இருக்கும். இதன் நீளம் 2.4 மீற்றர் வரை இருக்கும். இதன் எடையானது கிட்டத்தட்ட 1000 கிலோகிராம் வரை இருக்கும். அதிக எடையென்பதால் மிகவும் சோர்வான ஆமை என்று கணிக்க முடியாது. ஏனென்றால் இந்த ஆமையால் கிட்டத்தட்ட 16000 கிலோமீற்றர் வரை ஒரு வருடத்தில் நீரில் நீந்தியே கடக்க முடியும். மேலும் இந்த ஆமை பெரும்பாலும் கடலிலே இருந்தாலும் முட்டையை இடுவதற்காக கரைக்கு வரும். அந்த ஒரு தடவையில் சுமார் 100 முட்டைகளை இடும்.

 

OCEAN SUNFISH

கடலிலுள்ள மிகப்பெரிய மீன் எது என்று கேட்டால் நம்மில் பலரும் கூறும் பதில் திமிங்கிலம். இது பார்ப்பதற்கு ஒரு முழு மீனை போல் இருக்காது. ஒரு மீனின் முன்பகுதியை போல் மட்டுமே இருக்கும். இதன் சராசரி எடை 2500 கிலோகிராம் வரை இருக்கும். ஒரே தடவையில் மூன்று கோடிக்கும் அதிகமான முட்டைகளை இட முடியும். இந்த மீன் ஒரு நாளின் பாதி நாளை சூரிய வெளிச்சத்தில்தான் கழிக்கும். மற்றைய பாதிநாளில் நீருக்கடியில் மிகவும் ஆழமாக சென்று தனது உணவை தேடிக்கொள்ளும். இதன் விருப்பமான உணவு ஜெல்லிமீன் ஆகும். பார்ப்பதற்கு மாமிச மலை போல் இருக்கும் இந்த மீன், திமிங்கிலத்தை போலல்லாமல் மனிதர்களிடத்தில் மிகவும் சாதுவாக நடந்துகொள்ளும். வேண்டுமென்றால் நீங்களும் அருகில் சென்று பார்க்கலாம்.

 

DARIUS RABBIT

இந்த முயல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாலும் இதனை வளர்ப்பது மனிதனுக்கு கடினம்தான். ஏனென்றால் இந்த முயலின் தினசரி உணவுக்கு போகும் செலவே கிட்டத்தட்ட 1000 ரூபாய் வரை இருக்கும். இதன் நீளம் 1 மீற்றர். எடை 22 கிலோகிராம் ஆகும். இந்த முயல்தான் உலகின் மிகப்பெரிய முயல் எனும் கின்னஸ் சாதனையையும் பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சாதனையை முறியடிக்க இதன் குட்டியும் வளர்ந்து வருகின்றது.

 

SPIDER CRAB

இது சிலந்தி உருவத்தில் உள்ள ஒருவகை நண்டாகும். இந்த நண்டின் கால்கள் மிகவும் வலுவானவை. இதுவும் இந்த நண்டுடன் சேர்ந்தே வளரும். இந்த கால்கள் கிட்டத்தட்ட 12 அடிகள் வரை வளரக்கூடியது. மேலும் இந்த நண்டினால் சுமார் 100 வருடங்கள் வரை உயிர்வாழ முடியுமாம். மேலும் இந்த நண்டானது தனது உடல் சட்டையினை கழற்றி மாற்றும் திறன் கொண்டது. ஒரு பாம்பு சட்டையை மாற்றுவது போலவே மாற்றும். இந்த நண்டு வகை ஜப்பான் நாட்டு மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும்.

https://www.aquarium.co.za/blog/entry/kreature-feature-giant-spider-crab