DREAMWORKS SKG/ DREAMWORKS PICTURES
1994 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த DREAMWORKS அதிகமான ஹொலிவுட் அனிமேஷன் திரைப்படங்களை தயாரித்த கம்பனியாகும். இதனை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜெப்ரி கட்சன்பேர்க் மற்றும் டேவிட் ஜெபன் ஆகியோர் ஆரம்பித்தனர். DREAMWORKS சின்னத்தில், ஒரு சிறுவன் மீன் பிடிக்கும் போது பிறை நிலவில் அமர்ந்திருப்பதைக் கொண்டுள்ளது. LOGO வுக்கான யோசனை நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கினால் வழங்கப்பட்டது. அவர் கணினி மூலம் உருவாக்கிய படத்தை விரும்பினார். ஆனால், வரைதல் நிபுணர் ரொபர்ட் ஹன்ட் இந்த யோசனையை ஒரு ஓவியமாக செயற்படுத்த நியமிக்கப்பட்டார். மேலும் அவர் தனது மகனை மாதிரியாகப் பயன்படுத்தினார்.
PARAMOUNT PICTURES
உலகின் மிகவும் பழைமை வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றெனவும் இதனை கருதலாம். 1914 ஆம் ஆண்டு வில்லியம் வாட்ஸ்வார்த் ஹோட்கின்ஸன் என்பவரால் நியமிக்கப்பட்ட இந்த நிறுவனம்தான் உலகின் இரண்டாவது பழைமையான FILM STUDIO ஆகும். மேகக்கூட்டத்திற்கு நடுவிலுள்ள ஒரு மலை அதை சுற்றிலும் பல நட்சத்திரங்கள். இதுதான் இந்த நிறுவனத்தின் LOGO ஆகும். இந்த LOGO விலுள்ள மலை அமெரிக்காவிலுள்ள பென்லோமோன்ட் மலையாகும். மேலும் அதை சுற்றியுள்ள நட்சத்திரங்கள் ஆரம்பத்தில் 24 ஆக இருந்தன. இதன் அர்த்தம் இந்த PARAMOUNT நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துக்கொண்ட 24 நடிகர்களை குறிப்பதாகவே இருந்தன. 1987 ஆம் ஆண்டு இந்த LOGOவை ANIMATION GRAPHIC செய்து அங்கிருந்த நட்சத்திரங்களையும் குறைத்தனர். அதன் காரணம் அவர்களின் நடிகர்களின் எண்ணிக்கை குறைய குறைய நட்சத்திரங்களும் குறைந்தன.
WALT DISNEY PICTURES
இந்த நிறுவனத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. WALT DISNEY நிறுவனத்தை 1932 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி மற்றும் ரோய் டிஸ்னி எனும் இரு சகோதரர்கள் உருவாக்கினர். ஆரம்பத்தில் சிறிய STUDIOவை கொண்டிருந்த இந்த WALT DISNEY இன்றளவில் ஹோலிவுட்டில் உள்ள மிகப்பெரிய STUDIO க்களில் ஒன்றாக உள்ளது. 11 THEME PARK , 2 WATER PARK மற்றும் 2 BROADCAST NETWORK என்பனவற்றைக் கொண்டுள்ளது. இந்த WALT DISNEY யின் ஆரம்ப காலத்து LOGO என்பது MICKY MOUSE ஐ அடிப்படையாகவே கொண்டிருந்தது. பின்னர் இவர்கள் நீல நிற பின்னணியைக் கொண்ட ஒரு LOGOவை அமைத்தார்கள். இந்த LOGO விலுள்ள கோட்டை ஜெர்மனியிலுள்ள 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கோட்டையாகும். பிற்காலத்தில் அவர்கள் அந்த கோட்டையை நீக்கிவிட்டு தமது ANIMATION திரைப்படமான SLEEPING CINDRELLA திரைப்படத்தில் வரும் கோட்டையை LOGOவில் வைத்துக்கொண்டனர். இந்த மாதிரியான கோட்டையை அவர்களது PARIS THEME PARK இல் நேரடியாக காணலாம். இந்த LOGO வில் இருக்கும் இன்னொரு சுவாரஷ்யமான விடயம், இந்த LOGO விலுள்ள WALT DISNEY எனும் வடிவமானது இந்த நிறுவனத்தின் நிறுவனர் WALT DISNEY அவரது உண்மையான கையெழுத்தாகும்.
GOLDWYN PICTURES
1924 ஆம் ஆண்டு அமெரிக்க பாடலாசிரியரான ஹூபெட் டான்ஸ் என்பவரால் GOLDWYN PICTURES இற்காக தயாரிக்கப்பட்ட LOGOதான் இது. ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இந்த LOGO விற்காக 6 சிங்கங்களை பயன்படுத்தியுள்ளனர். முதலில் உபயோகித்த அனைத்து சிங்கங்களை காட்டிலும் இறுதியாக 1957 இல் உபயோகித்த சிங்கமான LEO சிங்கம்தான் இன்றளவிலும் இந்த LOGO வில் இருக்கின்றது. இந்த LOGO விலுள்ள சுவாரஷ்யமான ஒரு விடயம்தான் இந்த கர்ச்சிக்கும் சிங்கமான LOGO ஒரு கணினிமயமான ஒரு GRAPHIC பதிவாக இல்லாமல் உண்மையாகவே வீடியோ செய்யப்பட்டதாம். வீடியோ பதிவிடும்போது சிங்கங்கள் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என வதந்திகள் கிளம்பின. இதற்கு முகங்கொடுக்கும் விதமாக LOGO வுக்கான பதிவுகளின்போது பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் பதிவிட்டன.