பாதுகாப்பிற்காக பல கோடிகளை கொட்டும் நபர்கள்

எந்தவொரு அரசாங்கமும் அதிகாரிகள் மற்றும் சில முக்கிய நபர்களின் பாதுகாப்புக்காக அதிகமாக செலவழிக்கும். தற்போது பல தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் சமூகத்தில் அந்தஸ்துடையவர்கள் அனைவரும் தமக்கென பாதுகாப்பான அம்சங்களை செய்து வைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சிலர் அசாதாரணமான முறையில் பல கோடிகளை செலவு செய்கின்றனர். அவ்வாறான ஐந்து நபர்களை பார்ப்போம்.

 

அதிக பாதுகாப்பு கொண்ட மனித உடல்

ரஷ்ய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் விளாடிமிர் லெனின். இவர் 1924 ஆம் ஆண்டு இறந்த போது இவரது உடலை மக்கள் பார்வைக்காக பலத்த பாதுகாப்புடன் ஓரிரு நாட்கள் வைக்கப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் வீரர்களின் துணையுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரஷ்யாவின் மாற்றத்திற்கும் பல முற்போக்கு சிந்தனைகளையும் தந்ததால் இவரது உடலை நாட்டின் முக்கிய சொத்துக்களில் ஒன்றாக கருதுகின்றனர். இவரது உடலை 95 ஆண்டுகள் கழித்து இன்றும் பலத்த பாதுகாப்புடன் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

 

அதிக பாதுகாப்புடைய நிறுவன தலைமை அதிகாரி

FACEBOOK நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சக்கர்பேர்க் பற்றி நம்மில் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் பாதுகாப்பு அம்சம் குறித்து அதிகமானோருக்கு தெரியாது. இவர் எங்கு வெளியே சென்றாலும் தனக்கென்ற பாதுகாப்பு அதிகாரிகளுடன்தான் செல்கிறார். இதற்கென மட்டும் கடந்த ஆண்டில் 100 கோடிக்கும் அதிகமான பணத்தை செலவு செய்துள்ளார். FACEBOOK மூலம் பலரின் தகவல்கள் கசிவதால் பலரும் தன் மீது கொலை வெறியுடன் இருக்கக்கூடும் என்று தெரிந்தேதான், இவர் தன் பாதுகாப்பு குறித்து இவ்வளவு கரிசனைக்காட்டி வருகிறார் என பல ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

 

அதிக பாதுகாப்புடைய மதத்தலைவர்

பாப்பரசர்தான் அனைத்து கத்தோலிக்க சபைகளினதும் தலைவர். இதனாலேயே உலகின் சில நாடுகளின் தலைவர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பை விட பாப்பரசர் பதவிக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அதிகம். பாப்பரசர் இருக்கும் இடத்தில் சுவிஸ் கார்ட் எனப்படும் கோமாளிகள் போன்ற பழங்கால சீருடைகள் அணிந்தவர்கள் இருப்பர். ஆனால் இவர்கள் உண்மையில் கோமாளிகளல்லர். இவர்கள் சுவிஸ் இராணுவத்தில் பல கடுமையான பயிற்சிகளை எடுத்துக்கொண்ட இராணுவ வீரர்கள் ஆவார்கள். இந்த பாதுகாப்பு படை 1504 இல் இரண்டாம் ஜூலியஸ் கோப் ஆல் உருவாக்கப்பட்டது. இவர்களின் கைகளில் பழங்கால ஆயுதங்களே இருந்தாலும் அருகிலேயே சேமிப்பு கிடங்குகளில் அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ளனர்.

 

அதிக பாதுகாப்பு கொண்ட தம்பதி

உலகின் அதிக பாதுகாப்பு நிறைந்த தம்பதிகளாக அமெரிக்க ராப் பாடகர்களான ஜெயசி JayZ மற்றும் அவரது மனைவி பியான்சி Beyonce தான் உள்ளனர். இவர்களின் இந்த பாதுகாப்புக்கு காரணம் இவர்கள்தான் உலகில் பில்லியன் டொலர்களுக்கு சொந்தமான பாடகர்கள். இவர்களின் சொத்தின் பெறுமதி இலங்கை நாணயப்படி கிட்டத்தட்ட 25000 கோடி ரூபாவாகும். இதனால் இவர்களை கடத்த பலமுறை பலரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனாலே இவர்கள் பாதுகாப்பிற்கு அளவுக்கதிகமான பணத்தை செலவு செய்கின்றனர். இவர்களது வீடும் மிகவும் பாதுகாப்பு நிறைந்தது. இவர்களது வீட்டின் சுற்றுச் சூழலை 88 பில்லியன் டொலர்களை செலவு செய்து கட்டியுள்ளனர்.