சிறியளவிலான சிறந்த Android அப்ளிகேஷன்கள்

தினசரி பயன்பாட்டிற்கு உதவும் சிறந்த APPகள் பற்றி இன்று நாம் கதைக்கவுள்ளோம்.

 

VIDEO COMPRESSOR

உங்கள் போனில் இருக்கும் காணொளிகளால் உங்கள் ஸ்டோரேஜ் நிறைந்துவிட்டதா? அதற்காக வந்துள்ளதே வீடியோ கம்ப்ரெஸர். இந்த கம்ப்ரெஸர் மூலம் உங்கள் போனில் இருக்கும் எல்லா காணொளிகளதும் தரம் குறையாமல் SIZE ஐ மட்டும் குறைத்து எடுத்துக்கொள்ளலாம்.

 

UC BROWSER MINI

ANDROID க்கான UC BROWSER MINI ஒரு எளிய தேடல் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. இது குறைந்த PROGRAM மற்றும் குறைந்த STORAGE ROOM கொண்ட அண்ட்ராய்ட் தொலைபேசிகளின் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக மதிப்புமிக்க ஒரு EASY METHOD திட்டமாகும். மேலும் இது குறிப்பிடத்தக்க கூறுகளுடன் நிரப்பப்பட்டுள்ளது.

 

CHARGER TESTER

நாம் வாங்கும் மொபைல் சார்ஜர் தரமானதா, உங்கள் மொபைலுக்கு பொருந்துமா என்பதை பார்த்து வாங்க வேண்டும். இவ்வளவும் பார்த்து வாங்க முடிந்தாலும் சில காலத்தில் சரியான மின் அழுத்தத்தை வழங்குவதும் இல்லை. இனிமேல் வாங்கும் சார்ஜ்ர் ஐ இந்த ஆப் இல் மூலம் பரிசோதித்து பார்ப்பது நல்லது. இதன் மூலம் உங்கள் மொபைலுக்கு எவ்வளவு வீதத்தில் மின்னழுத்தம் வழங்கப்படுகிறது. மொபைல் எவ்வளவு நேரத்தில் சார்ஜ் ஆகும் என்றெல்லாம் மதிப்பிடலாம்.

 

NIGHT MODE

எமது கண்ணுக்கு நல்லதொரு தெரப்பியை நாங்கள் கொண்டுவரவில்லை. ஆனால் இது கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கும். இந்த NIGHT MODE பற்றி நாங்கள் உங்களுக்கு விளக்கத் தேவையில்லையே. இதைப்பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறீர்கள் தானே? ஆனால் இது கொஞ்சம் ஸ்பெஷல் தான். 500KB லேயே ஒரு சூப்பர் NIGHT MODE ஆப். முயற்சித்துப் பாருங்கள்.