Laptop என்பது 5 ஆம் தரம் படிக்கும் சிறுவர்கள் முதல் அலுவலக வேலை செய்யும் பெரியவர்கள் வரை உபயோகிக்கக்கூடியது. இது மிகவும் இலகுவானதும்கூட. கணினியை போல இல்லாமல் தேவையான இடத்திற்கு எடுத்துச்செல்லவும் முடியும். இதன் பேட்டரி பேக்கப் இருப்பதால் மின் இணைப்புடன்தான் வேலை செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி பல திறன்களை கொண்டுள்ள Laptop ஒன்றின் பேட்டரி ஆயுட்காலம் அதிகமாக இருப்பதில்லை. சில காலங்களின் பின்னர் வேறு ஒரு புதிய பேட்டரியை உபயோகிக்க வேண்டியுள்ளது. அதனால் இன்று நாம் உங்களுக்கு laptop பேட்டரியை நீண்ட காலம் பாவிக்க சில டிப்ஸ்களை கொண்டு வந்துளோம்.
DIM YOUR BRIGHTNESS
Laptop இன் திரை பேட்டரியின் திறனை அதிகமாக எடுத்துக்கொள்கிறது. ஏனென்றால் வர்ணமயமான படங்கள், வீடியோக்கள் மற்றும் இன்னும் பல விடயங்களை உங்களுக்கு காட்டுவதற்கு இது பயன்படுகின்றது. இதன்மூலம் செலவாகும் பேட்டரி சக்தியை சேமிப்பதற்கு சிறந்த மற்றும் இலகுவான வழி உங்கள் திரையின் வெளிச்சத்தை குறைத்து வைப்பதே. இப்படி திரை வெளிச்சத்தை குறைத்து வைக்க இலகுவான வழிமுறையாக KEYBOARD இலுள்ள F2 பட்டனை அழுத்தவும்.
POWER SETTINGS ஐ மாற்றவும்
WINDOWS 10 இன் மூலம் நமது லேப்டாப்களுக்கு சிறந்த பேட்டரி திறனை வழங்க முடியுமாக உள்ளது. முக்கியமாக POWER SAVER எனும் ஒரு OPTION. மற்றைய WINDOWS VERSION களிலும் இது இருக்கும் என்பதனால் உங்களுக்கு அந்த OPTION ஐ ENABLE செய்து கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் வழமையாக பாவிக்கும் கால அளவினைவிட சற்று அதிகமாகவே laptop களை உபயோகிக்க முடியும்.
SWITCH OFF WIFI
WIFI என்பதும் ஒரு பேட்டரி சக்தியை குறைக்கக்கூடிய ஒரு விடியம்தான். WIFI NETWORK இல்லாத சந்தர்ப்பத்தில் நாம் இதனை ON செய்து வைத்திருந்தால் இது எமது laptop பேட்டரியின் ஆயுளை குறைக்கவல்லது. அதனால் நாம் எப்பொழுதெல்லாம் INTERNET உபயோகிக்க எண்ணுகிறோமோ அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் இதனை ON செய்து விட்டு இதர சந்தர்ப்பங்களில் இதனை OFF செய்து வைப்பது வரவேற்கத்தக்கது.
USB சேர்க்கைகள்
அதிகமானவர்கள் இன்று laptop எனும் போது அது ஒரு MULTI TALENTED மனிதன் என்று நினைத்துக்கொண்டு, PETTAH வில் 1ST CROSS STREET இல் இருக்கும் அனைத்து வகையான உதிரிப்பாகங்களையும் laptop இற்கு சேர்க்கின்றனர். உண்மையில் அவை உங்கள் laptop இற்கு உகந்ததா மேலும் பாதுகாப்பானதா என்பதை அறிந்து தெரிந்து வாங்குங்கள்.
DIABLE FEATURES
நமது laptop களில் பொதுவாக நிறைய தொழிநுட்ப சேர்க்கைகள் இருக்கும். அது உங்கள் லேப்டாப் பாவனையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதே. ஆனால் அவற்றில் சிலவற்றின் பாவனை காரணமாக உமது லேப்டாப் பேட்டரியின் செயற்திறனும் குறைந்து கொண்டு போகும் என்பதே ஆத்மார்த்தமான உண்மை. ஆம் நமது லேப்டாப்களில் காணக்கூடிய ஒன்றுதான் GRAPHICAL EFFECTS. அவற்றை குறைத்து அல்லது OFF செய்து வைப்பதன் மூலம் நீண்ட காலம் பேட்டரியை பாவிக்கலாம்.
பேட்டரி CARE
நீண்ட காலம் பேட்டரியை பாவிக்க இதுவும் சிறந்த வழி. அதாவது நீண்ட நேரம் சார்ஜ் ஆக விடாமல், உங்கள் லேப்டாப் 100 சதவீதத்தை அடைந்தவுடன் சார்ஜ் இலிருந்து கழற்றி விடவும். இது லேப்டாப் இற்கு மட்டுமல்ல. அனைத்து இலத்திரனியல் பொருட்களுக்கும்தான். இவ்வாறு செய்வதன் மூலமும் நீண்ட காலம் பாவிக்கலாம்.