காதலிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் தம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் காதலை சுவைத்திருப்பார்கள். காதல் இரண்டு பேருக்கிடையேயான புரிதலை இழக்கச்செய்கிறது என்பார்கள். உண்மையில் காதல் ஒருவரின் வாழ்வில் அவரது நடத்தை, உணர்வுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அவரது தகுதிகள் அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை சரியாக புரிந்து செயற்பட்டவர்களே வாழ்வில் வெற்றிபெறுவர். காதல் உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றம் நல்லதா அல்லது கெட்டதா என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் காதலனை அல்லது காதலியை பொறுத்தே உள்ளது. இந்த பதிவில் காதல் உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை பற்றி பார்ப்போம்.

 

சிறந்த நபராக மாறுவீர்கள்

மற்றவரின் பார்வையில் இருந்து, உங்களை நீங்களே பார்ப்பதற்கு காதல் உங்களுக்கு உதவும். இதன் மூலம் மற்றவரின் பார்வைக்கு உங்களை எவ்வாறு மேம்படுத்த முடியுமோ அவ்வாறு மேம்படுத்த உங்களுக்கு காதல் கற்றுக்கொடுக்கும். உங்கள் காதலி / காதலன் உங்களை மற்றவர் முன் மதிக்கத்தக்க ஒருவராக மாற்ற முயல்வார். இதன் மூலம் ஒரு சிறந்த நபராக உங்களால் உருவாக முடியும்.

 

நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்வீர்கள்

காதல் என்பது முதலில் நீங்கள் எப்படி மற்றவர்களை புரிந்து அவர்களுக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்கிறீர்களோ அதை பொறுத்துதான் அமையும். உங்கள் நேரம் எவ்வளவு உங்களுக்கு பெறுமதியோ அதைப்போல மற்றவர்களது நேரத்திற்கும் மதிப்பு கொடுக்கக் தூண்டக்கூடியது. இதன்மூலம் நேரத்தை பற்றிய மதிப்பை அதிகரிக்கக்கூடியது.

 

சகிப்புத்தன்மை ஏற்படும்

காதலிக்கும் இருவரது உள்ளங்கள் பெரும்பாலும் ஒன்றாக இருப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில் காதலிக்கும்போது மற்றவர்களின் எல்லைகளையும் குறைப்பாடுகளையும் எவ்வாறு பொறுத்துக்கொள்வது என்பதை பற்றி கற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் இருவருக்கு இடையிலான சகிப்புத்தன்மை அதிகரிக்கும். நாளடைவில் சகிப்புத்தன்மையும் பொறுமையும் கொண்ட ஒருவராக உங்களை மாற்றி விடும். விட்டுக்கொடுப்பதால் கிடைக்கும் பலனை நீங்கள் காதலில் முழுமையாக பெறுவீர்கள்.

 

உண்மை அழகை  உணர்வீர்கள்

நீங்கள் காதலில் மூழ்கி இருக்கும் போது வெளியழகை விட ஒருவரின் உள் மனதின் அழகு அதிகமானதென கற்றுக் கொள்ளலாம். வெளி அழகை கண்டு ஏமாறுவதை விட உள் அழகின் நிஜத்தன்மையை அறிய வாய்ப்புண்டாகும். பிறரது உண்மை உணர்வுகளை புரிந்து கொள்ளலாம்.

 

கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவீர்கள்

இவ்வுலகில் நீங்கள் அனைத்தையும் விட காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது உங்களிடமுள்ள கெட்ட பழக்கவழக்கங்களை விட்டுவிட தோன்றும். இது உங்கள் விருப்பத்திற்கமைய இல்லாவிட்டாலும் உங்கள் காதலியின் விருப்பத்திற்கிணங்க நடைபெறும். ஏனென்றால் காதல் அவ்வளவு பலமாயிற்றே. இதுவும் மேற்குறிப்பிட்ட சகிப்புத்தன்மையில் சேரும்.

 

உண்மை காதலை உணர்வீர்கள்

ஒருவருடனான ஈர்ப்பையும் காதலையும் பிரித்து அடையாளம் காண்பீர்கள். ஒருவர் மீது மாத்திரமே ஈர்ப்பு ஏற்படும். ஆனால் பலருக்கும் அப்படி அமைவதில்லை. இது காதல் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் உண்மையான காதலின் உணர்வை பெற முடியும்.

 

கற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள்

காதலிக்கும் போது பலரும் பலவிதமான அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். காதலிக்கும் போது உங்கள் மூளையால் பன்மடங்கு அதிகமாக யோசிக்கவும் வேலை செய்யவும் முடியும். புதிய மொழி, உணவு, இசை, எழுத்து போன்ற பலவிடயங்களை நீங்கள் விரும்பாவிட்டாலும் காதலனின் /  காதலியின் விருப்பத்தினால் செய்வீர்கள். அதன்மூலம் உங்கள் மீது மதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவீர்கள்.