எதிர்காலத்தில் தோன்றவுள்ள இராட்சத கட்டிடங்கள்

டுபாய் நாட்டிலுள்ள புர்ஜ் கலீபா என்ற கட்டிடமே உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரை பெற்றுள்ளது. ஆனால் இன்னும் சில வருடங்களில் இந்த நிலையை மாற்ற சில நாடுகள் இராட்சத உயரமான கட்டிடங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதன்படி 2020 இல் திறக்கப்படவுள்ள சவூதி அரேபியா நாட்டின் ஜித்தாஹ் கோபுரம் உருவெடுத்து வருகின்றது. அதன் பின்னர் ஜித்தாஹ் கோபுரம் பூர்ஜ் கலீஃபாவை உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடம் என்ற நிலைக்கு தள்ளிவிடும். திட்டமிடல் மற்றும் கட்டுமானத்தின் அடிப்படையில் பல்வேறு கட்டங்கள் தற்போதுள்ள பல வானளாவிய கட்டிடங்களை பின் தள்ளியுள்ளன. எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள வானளாவிய கட்டிடங்கள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

JEDDAH TOWER

தற்போது பட்டத்தை வகிக்கும் துபாயில் 2,717 அடி உயரமுள்ள புர்ஜ் கலீஃபாவை மாற்றியமைத்து ஜித்தாஹ் கோபுரம் விரைவில் உலகின் மிக உயரமான கட்டிடமாக மாறும். ஜித்தாஹ் கோபுரம் சவுதி அரேபியாவின் ஜித்தாஹ்வில் அமைந்துள்ளது. கட்டுமான பணிகள் முடிந்ததும், 3,307 அடி உயரம் இருக்கும். இது 1 கி.மீ உயரத்திற்கு உலகின் ஒரே கட்டிடமாக மாறும். இது 167 தளங்களைக் கொண்டிருக்கும். இந்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க செலவு 1.23 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இது 2020 ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கோபுரம் ஜித்தாஹ் பொருளாதார நகரத்தின் ஒரு பகுதியாகவும், இப்பகுதியில் ஒரு முக்கிய ஈர்ப்பாகவும் இருக்கும். இந்த வளாகம் செங்கடலின் கடற்கரையில் அமைந்திருக்கும். மேலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரத்தின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஜித்தாஹ் கோபுரத்தை புர்ஜ் கலீஃபாவை வடிவமைத்த அதே கட்டிடக் கலைஞரான அட்ரியன் ஸ்மித் என்பவரே வடிவமைத்துள்ளார். அக்டோபர் 2017 நிலவரப்படி கட்டிடத்தின் 56 தளங்கள் நிறைவடைந்துள்ளன.

 

SUZHOU ZHONGNAN CENTER

கட்டுமான பணிகள் முடிந்ததும் SUZHOU ZHONGNAN CENTER உலகின் மூன்றாவது உயரமான கட்டிடமாக மாறும். 137 மாடிகள் மற்றும் 93 லிப்ட் கொண்ட இந்த கட்டிடம் 2,391.7 அடி உயரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் சனத்தொகை காரணமாக 93 லிப்ட்களை வைத்துள்ளனர்.  இந்த கட்டிடம் சீனாவின் SUZHOU நகரில் உள்ள SUZHOU INDUSTRIAL PARK இல் அமைக்கப்படும். SUZHOU ZHONGNAN CENTER ஐ நிர்மாணிப்பதற்கான மதிப்பீடு 4.46 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இருப்பினும், கட்டிடத்தின் கட்டுமானம் 2015 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

 

DUBAI ONE TOWER

துபாய் ONE TOWER எதிர்வரும் வருடத்தில் உலகிலுள்ள உயரமான குடியிருப்பு கட்டிடமாக உருவெடுக்கவுள்ளது. 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமான பணிகள் 2020 இல் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது UAE நாட்டின் துபாய் நகரில் அமைந்துள்ளது. இது 161 தளங்களை கொண்டு 2333 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

 

KLCC EAST GATE TOWER

KLCC EAST GATE TOWER எனும் மலேசிய நாட்டின் கோலாலம்பூர் நகரில் உள்ள இந்த டவரின் கட்டுமான பணிகள் 2017 இலே ஆரம்பிக்கப்பட்டது. இந்த TOWER 2297 அடி உயரத்தையும் அதனுள் 145 தளங்களையும் கொண்டு அமைக்கப்படவுள்ளது. அவற்றில் சில, கட்டிட அலுவலகங்களாக பயன்படுத்தப்படவுள்ளன.

 

TIANFU CENTER

சீன நாட்டின் அழகான நகரங்களில் ஒன்றான CHENGDU நகரில் TIANFU CENTER என்ற இந்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டிடம் 2023 களில் தனது கட்டுமான பணிகளை நிறைவுசெய்யுமென நம்பப்படுகின்றது. இதன் பணிகள் நிறைவுற்ற பிறகு 2218 அடி உயரத்தையும் 157 தளங்களையும் கொண்ட இராட்சத கட்டிடமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கட்டிடத்தின் மூலம் CHENGDU நகரத்தின் பொருளாதாரம் சற்று உயர்ந்து காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

BANGALORE TURF TOWER

இந்த கட்டிடம் பெயரில் உள்ளவாறே இந்தியாவின் பெங்களூர் நகரில் நிறுவப்படவுள்ளது. தற்போதைய, பெங்களூரின் உயரமான கட்டிடமாக இருக்கும் MANTRI PINNALCE, 502 அடி உயரத்தை மாத்திரமே கொண்டுள்ளது. ஆனால் இதன் கட்டுமான பணிகள் முடிந்த பின் இது 2000 அடி உயரத்தையும் விட உயர்ந்து நிற்கும் எனப்படுகின்றது. 2021 இல் நிறைவுற இருக்கும் இந்த கட்டிடம், நமது நாட்டின் தாமரை கோபுரத்தையும் விட உயர்ந்து நிற்கும் என நம்பப்படுகின்றது.

 

SIGNATURE TOWER

இந்த கோபுரம் இந்தோனேசிய நாட்டின் ஜகார்த்தா எனும் நகரில் அமையவுள்ளது. இது உலகின் 10 உயரமான கட்டிடங்களின் பட்டியலில் இணையவுள்ளது. இதன் உயரம் 2093 அடியாக நிறுவப்படவுள்ளது. 113 தளங்களை தரைமட்டத்தின் மேற்பரப்பில் நிறுவவும் 6 தளங்களை தரைமட்டத்தின் கீழ்ப்பரப்பில் நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தில் அலுவலகங்கள், குடியிருப்பு வசதிகள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றன நிறுவப்படவுள்ளன. கீழுள்ள 6 தளங்களும் PARKING வசதிகளுக்கு நிறுவப்படவுள்ளன.

 

என்னதான் இருந்தாலும் நம் நாட்டின் பெருமைக்கு உரித்தான தாமரைக் கோபுரம் தென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமாக தற்போது கருதப்படுகின்றதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.