மூன்று மூலப்பொருட்களை கொண்டு செய்யப்பட்ட உணவுகள்

வாழைப்பழ பேன் கேக்

  • பழுத்த வாழைப்பழம் – 2
  • முட்டை – 2
  • கேக் மா – ஒரு கப்

எல்லாவற்றையும் போட்டு கலந்துகொள்ளவும். பேன் ஒன்றில் பட்டர் தேய்த்து அதில் கலவையை பூட்டு சுட்டு எடுக்கவும்.

 

ஸ்நேக் பார்

  • கஜூ அல்லது பாதாம் – ஒரு கப்
  • பிளம்ஸ் – ஒரு கப்
  • கொட்டை அகற்றிய ஈச்சம்பழம் – ஒரு கப்

கஜூவை எடுத்து பேனில் போட்டு நன்கு ரோஸ்ட் செய்து எடுத்து கொள்ளுங்கள். அனைத்து பொருட்களையும் போட்டு ப்ளெண்ட் செய்து கொள்ளுங்கள். லன்ச்ஷீட் ஒன்றில் போட்டு ஒரு தட்டில் வைத்து ஒரு இரவு பூராக வைத்து கொள்ளவும். அடுத்த நாள் காலையில் அதனை துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

 

சொக்லேட் பேஸ்ட்ரி

  • பேஸ்ட்ரி சீட்
  • மில்க் குக்கிங் சொக்லேட்
  • முட்டை – 1

பேஸ்ட்ரி சீட்டில் மில்க் குக்கிங் சொக்லேட்டை வைத்து மடித்து முட்டையினால் ஒட்டிய பின்னர்,  முட்டையின் வெள்ளைக் கருவை அதன்மேல் தேய்த்து 180 செல்சியசில் அவனில் வைத்து எடுக்கவும்.