சிலர் போனில் நன்கு பேசி மயக்கக்கூடிய திறன் கொண்டவர்கள். ஆனால் ஒரு பெண்ணுடன் ஒரு நாள் டேட்டிங் செல்லத் தெரியாதவர்கள். அவ்வாறானவர்கள் இந்த கட்டுரையை கட்டாயம் படிக்க வேண்டும். எவ்வாறு ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்வது பற்றிய சில டிப்ஸ்களை நாம் இன்று உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம்.
டேட்டிங் செல்வோமா?
உங்களுக்கு உண்மையில் டேட்டிங் செல்ல வேண்டுமென்றால், அவர்களிடம் நேரடியாக சென்று கேட்பதே நல்லது. அதுவரை உங்கள் நட்பு மிகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் திறந்ததாகவும் இருந்திருந்தால், அது தொடரும் என்று எதிர்பார்க்கலாம். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். பின்னர் திகதியை ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்திருப்பதால் இது எளிதாக இருக்க வேண்டும். விஷயங்களை அவர்கள் பயன்படுத்திய வழியில் வைத்திருங்கள். மேலும் டேட்டிங் திகதி வரை உங்கள் உறவில் சிரிப்பை வைக்க முயற்சி செய்யுங்கள்.
எங்கு போகலாம்?
இலங்கையில் டேட்டிங் செல்ல விரும்பும் அனைவரும் தேர்ந்தெடுப்பது விக்டோரியா பார்க்தான். அந்த இடம் டேட்டிங்கு உகந்த இடம்தான். ஆனால் நீங்கள் டேட்டிங் செல்ல இருக்கும் நாள் விடுமுறை நாளாக இருப்பதை விட வேலை நாட்களாக இருந்தால் மிகவும் சிறந்தது. அந்த நாளில்தான் அதிக கூட்டம் இருக்காது. மேலும் உங்கள் பார்ட்னருடன் நீண்ட நேரம் சுதந்திரமாக செலவழிக்க முடியும். அப்படி இல்லை நான் எனது காதலியை பெரிய இடமொன்றிற்குத்தான் கூட்டிச்செல்வேன் என்றாலும் பரவாயில்லை. ஆனால் பெரிய இடங்களுக்கு கூட்டிச்சென்றால் சற்று அதிக பணம் எடுத்துச் செல்வது சிறந்தது.
நண்பர்களிடம் உளறி விடாதீர்கள்!
நம்மில் பலரும் நமது நண்பர்களுடனே அதிக நேரத்தை செலவிடுகின்றோம். ஆனால் வித்தியாசமாக ஒரு நாள் நாம் எமது நண்பர்களின்றி வெளியே செல்வோமாயின், அதனை அவர்களிடம் சொல்வதைவிட மறைப்பது சிறந்தது. சில சந்தர்ப்பங்களில் உங்கள் காதலியுடன் பிற்காலத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு நீங்கள் இருவரும் பிரிந்துவிட்டால் அவர்களுக்கு அது தெரிந்தால் கிண்டல்கூட செய்ய வாய்ப்புண்டு. அடுத்து டேட்டிங் செல்வது உங்கள் தனிப்பட்ட விடயம். அதனை அவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்பதை தெரிந்து வைத்திருங்கள். மேலும் எதை சொல்ல வேண்டும் எதை சொல்லக்கூடாது என்று தெரிந்து வைத்திருங்கள்.
ஆடை தெரிவு
டேட்டிங் செல்லவுள்ள நாளுக்காக முன்னாயத்தமாக செய்ய வேண்டிய விடயங்களில் உங்களது பார்ட்னருக்கு பிடித்த நிறத்தில் பிடித்த வடிவத்தில் ஒரு ஆடையை அணிவதாகும். சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு பச்சை நிற நீளமான சட்டை பிடிக்காது என்றால் அந்த இடத்தில் நீங்கள் பச்சை நிற நீளமான சட்டையை ஆடையாக அணிந்து வந்திருந்தால் அது சற்று அவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அதனால் ஆடைத்தெரிவு அவர்களுக்கு பிடித்ததுபோல இருப்பது நல்லது.
தொடுதல்
டேட்டிங் செய்யும் அன்று நீங்கள் நடந்துகொள்ள வேண்டிய விடயங்களில் சற்று அதிகம் கவனமாக இருங்கள். அவர்களை முன்பு நட்பு நோக்கத்தில் தொட்டு கதைத்திருந்தால் இன்று அவர்களை உங்கள் காதலியாக பார்த்து தொடவேண்டும். அந்த தொடுதல் உணர்வு சற்று கூச்சத்தை உணர்த்தினாலும் அது ஒரு ஆத்மார்த்தமான உணர்வை பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு அது காம உணர்வு கொண்ட தொடுதலாக விளங்கிவிடக்கூடாது. அதனால் தொடும் இடங்கள் கையின் மணிக்கட்டிற்கு மேல் பகுதி, தோற்பட்டை, கன்னங்களாக இருந்தால் நன்று. அதுவும் எந்த நேரமும் அல்லாமல் உணர்வு பூர்வமான விடயங்கள் ஏதாவது கூறும்போது மட்டுமே தொடுங்கள். அதனால் தொடும்போது பார்த்து பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்களது கட்டுப்பாட்டினை கருத்திற்கொள்ளுங்கள்.
முதல் முத்தம்
ஆஹ். எதிர்பார்த்தது வந்து விட்டது. அப்படி நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான நேரம் இதுதான். இந்த நேரத்தில் அதிகமானோர் சரியாக நடந்து கொள்ளாததால் அதிகமான காதல் கதையும் இங்கேயே முடிந்தும் உள்ளன. முதல் முத்தம் எனும்போது அதை மிகவும் கரடு முரடாக செய்யக்கூடாது அல்லவா?
அதனால் முத்தமிடும் முன் உங்கள் வாயையும் உதடுகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து அவர்களை ஒரு காதல் உணர்வுடன் கூடிய ஒரு பார்வையுடன் பார்க்கவும். மேலும் நெருங்கி வரும்போது தடங்கலாக இருக்கும் விடயங்களை சற்று தள்ளி வைத்துக்கொள்ளுங்கள். முத்தமிடும் நேரம் அதிக பட்சம் 10 முதல் 20 செக்கன்களாக இருந்தால் நல்லது. முதல் முத்தத்தில் நாக்கை கொண்டு உபயோகிக்க வேண்டாம். முத்தத்தின் போது உங்கள் மூச்சு விடும் வேகத்தை மெதுவாக கொள்ளுங்கள். உங்கள் முத்தத்தின் போது அவர்கள் உங்களை மட்டும் பார்க்குமாறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
அவர்களுக்கு நீங்கள் முத்தமிடும் முறை பிடித்திருந்தால் அல்லது உங்களுடன் மீண்டும் முத்தமிட ஆசைப்பட்டாலும் சொல்ல மாட்டார்கள். நீங்களே “இன்னுமொருமுறை ட்ரை பண்ணுவோமா?” என்று கேளுங்கள். அனுமதி கிடைத்தால் மட்டுமே இரண்டாவது முத்தத்திற்குச் செல்லுங்கள்.
நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை சொல்லுங்கள்
அவர்கள் உங்களை நம்பி டேட்டிங்கு வந்தார்கள் என்பதால், நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கைக்கு உரிய வார்த்தைகளை சொல்வது உகந்தது. உதாரணமாக “ஒன்றும் பயப்படத்தேவையில்லை. நான் இருக்கிறேன்” போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த தடவை நீங்கள் செய்யும் அனைத்தும் உங்கள் அடுத்த தடவை டேட்டிங்கு நல்ல ஆரம்பத்தைக் கொடுக்கும்.