ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமா? இந்த விடயங்களை கடைப்பிடியுங்கள்!

தினமும் முகத்தில் புன்னகையுடன் இருப்பவர்களை பார்த்து இவர்களைப் போல வாழவேண்டும் என்று கூறுவோமே தவிர, அதற்கான முயற்சியில் ஈடுபட மாட்டோம். இனி அப்படி இருக்கத் தேவையில்லை. இதோ, மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக்கு அவசியமானவற்றை உங்களுக்காக தேடிக் கண்டுபிடித்துக்கொண்டு வந்துவிட்டோம். இவற்றை கடைப்பிடித்து மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழுங்கள்.

 

1. ஒழுங்குமுறை

இப்படித்தான் வேலைசெய்ய வேண்டுமென ஒரு அடிப்படையை உருவாக்கிக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, இது உங்கள் வழக்கமான ஒரு பகுதியாக இருந்தால் காலை உணவாக புதிய பழங்களை சாப்பிடுவது சவாலான விடயமல்ல. இவை எளிமையான விடயங்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையில் யூகிக்கக்கூடிய, மகிழ்ச்சிகரமான பகுதிகளைக் கொண்டிருப்பதானது சவால்களை எதிர்கொள்ள சிறந்த முறையாகும். அத்தோடு, சுயமாக சிந்தித்து செயற்படவும் உங்களுக்கு வசதியாக இருக்கும்.

 

2. தினசரி உடற்பயிற்சி

நாம் தினமும் உடற்பயிற்சி செய்கிறோமா? அநேகமானோர் இல்லையென்றே கூறுவார்கள். ஆனால் மன நிம்மதியுடன் வாழ்பவர்கள், தினசரி உடற்பயிற்சியில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பர். இது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாகும். ஊரைச் சுற்றி நடந்தாலும் சரி பத்து நிமிட சூரிய வணக்கமாக இருந்தாலும் சரி ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் அதற்கென ஒதுக்குங்கள்.

 

3. வெளியில் செல்லுங்கள்

குளிர்ச்சி உறைய வைத்தாலும் வெயில் சுட்டெரித்தாலும் ஒரு நாளைக்கு பத்து நிமிடங்கள் வெளியே செல்வது உங்கள் மனச்சோர்வின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கின்றது. உங்கள் மன அழுத்த அளவைக் குறைக்கிறது. அதனால் உங்கள் முகத்தில் ஒரு தென்றலை உருவாக்க முனையுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வெளிப்புறங்களுக்குச் செல்வது சிறந்த மனநிலையை அதிகரிக்கும் .

 

4. நண்பர்களுடன் பேசுங்கள்

தனிமை என்பது ஒட்டுமொத்த மகிழ்ச்சியற்ற நிலைக்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். தனிமையானது உடல் பருமனைக் காட்டிலும் ஆபத்தானதென சமீபத்திய ஆய்வொன்று கூறுகின்றது. தனிமை உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமானது. அதனால் உங்கள் நண்பர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்துகொள்ளுங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் உங்கள் நண்பர்களுடன் பேசி தீர்மானிப்பது சிறந்தது.

 

5. ஆரோக்கியமான உணவு

உடலுக்கு தேவையான சக்தியை உணவே வழங்குகின்றது. ஒழுங்கற்ற உணவு எந்த வகையில் உங்களை சந்தோசத்தில் நிலைக்க வைக்குமென நம்புகின்றீர்கள்? அதனால் நல்ல உணவு நல்ல சிரிப்பிற்கு உந்துகோல் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கு ஏற்ற சிறந்த ஆரோக்கியமான உணவை தவறாது உட்கொள்ளுங்கள்.

 

6. நேரத்திற்கு தூங்குங்கள்

சோம்பலாக உள்ளதா? தூங்கவில்லையா?  அவ்வளவுதான்! இன்றுமுதல் உங்கள் மனநோய்க்கு குட்பை சொல்லுங்கள். தூக்கமின்மை பல புதிய நோய்களை உருவாக்குவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக கணினியை உபயோகிப்பவர்களே அதிகம் இதில் சிக்கித்தவிக்கின்றனர். முகத்திலுள்ள சிரிப்பைக்கூட இது அகற்றிவிடும். சிறந்த மன அமைதிக்கு நேரத்திற்கு தூங்குவது அவசியம்.