அதிக வேலைப்பழுவிற்கு மத்தியிலும் குழந்தைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்வரும் பெற்றோர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். உண்மையில் தமக்கு தேவையான விடயங்களை, குழந்தைகள் உறங்கிய பின்னரே பல பெற்றோர்கள் செய்வார்கள். இது பல கஷ்டங்களிலும் தம் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு சென்ற பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்.
வாய்க்கு ருசியான சாப்பாடு
தினமும் விரும்பிய உணவை சாப்பிடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. பொதுவாக குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது பெற்றோருக்கு சவாலான விடயம். குழந்தைக்கு உணவூட்ட, குடிக்க வைக்க, குளிப்பாட்ட, துணிமணிகளை கழுவ மேலும் குழந்தையுடன் விளையாட போன்ற வேலைகளை செய்து முடிக்கும் போதே ஒருநாளின் நான்கில் மூன்று பங்கு முடிந்து விடும். இதில் எங்கிருந்து நல்ல உணவை சாப்பிட முடியும். இருவரும் வந்து வேலை செய்தால் சிறந்தது என்று நீங்கள் இந்த நேரத்தில் நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இருவரும் குழந்தையை பராமரிக்க அமர்ந்தால் வேலைக்குச் செல்ல வேண்டுமே. அதனால் பொதுவாக ஒருவரிடமே அதிகம் குழந்தை பராமரிப்பு சுமையும் ஏறுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் குழந்தைகள் தூங்கிய பின்னரே நல்லதொரு உணவிற்கான திட்டமிடலை மேற்கொள்ள முடியும். பொதுவாக நேரஞ்சென்று தூங்கும் சிறார்கள் மாதத்திற்கு ஒருமுறையாவது குறைந்தது விரைவாக தூங்கிவிடுவார்கள். அந்த நாளிலே பெற்றோர் நிம்மதியாக தமக்கு விருப்பமான உணவை செய்து சாப்பிடுவார்கள்.
சொகுசான குளியல்
வீட்டு வேலைகளையும் வெளி வேலைகளையும் செய்து முடித்து விட்டு வந்து அமரும்போது குழந்தைகள் தமது வேலையை தொடங்கிவிடுவார்கள். ஆம், அவர்கள் வீட்டிலுள்ளவற்றை வீசியெறிந்து விளையாடி அமர்க்களப்படுத்தி விடுவார்கள். அப்போது பெற்றோர் எல்லாவற்றையும் சீர்படுத்திவிட்டு, பொதுவாக இரவிலேயே பெற்றோர்கள் குளிப்பர்.
சினிமா பார்க்கலாம்
பெண்கள்தான் அதிகமாக டிவி பார்ப்பார்கள். ஆனால் பொறுப்பான, தம் பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீது அதிகம் கவனம் செலுத்தும் பெற்றோர், வளரும் அல்லது படிக்கும் குழந்தைகளின் முன் டிவி பார்ப்பதை தவிர்த்துக்கொள்வார்கள். அதுவும் படம் பார்ப்பதை பொதுவாக தவிர்த்து விடுவார்கள். இதனால் குழந்தைகள் தூங்கிய பின்னர் சற்று பொறுமையாக இருந்து சத்தத்தை குறைத்து வைத்து, அதிக நாளாக பார்க்காமல் இருந்த படத்தை ஆசையாக பார்ப்பார்கள்.
சிறிய ஷொட்!
இந்த விடயத்தை அதிகமான பெற்றோர் செய்வதில்லை. ஆனாலும், சிலர் செய்வதுண்டு. வீட்டு, வெளி வேலைகளை முடித்து விட்டு சற்று ரிலாக்ஸ் எடுக்க நினைப்பவர்கள் குழந்தைகள் தூங்கிய பின்னர் சற்று மது குடிப்பார்கள். அதிகம் போதை ஏறாதவாறும் இருக்கும்.
நாளைய திட்டங்கள்
எல்லாவற்றிற்கும் நடுவில் குழந்தை தூங்கினாலும், நாளைய நாளுக்கான சாப்பாடு தயாரிக்க, உடைகளை தயார்செய்ய, துணிகளை கழுவ என எல்லாவற்றிற்கும் பெற்றோர் தயார்செய்து விடுவார்கள். இதனால் சிரமமின்றி வேலைக்குச் செல்ல முடியும். ஏனென்றால், இன்று சந்தோஷமாக இருந்துவிட்டு, நாளை சிரமப்பட முடியாதல்லவா?
நாட்குறிப்புக்கள்
உண்மையில், திருமணத்தின் பின்பு குழந்தைகளை பற்றியே அதிகம் பேசப்படும். எந்தளவு வேலையாக இருந்தாலும் கணவன் மனைவிக்கு இடையில் அதிகமாக குழந்தையின் நலன்பற்றியே கலந்தாலோசிக்கப்படும். குழந்தை விழுந்துவிட்டால், நோய்வாய்ப்பட்டால் அதுபற்றியே கதைப்பார்கள். அத்தோடு, குழந்தை தூங்கிய பின்னர் இருவரும் தத்தமது நாட்குறிப்புகளை பகிர்ந்துகொள்வார்கள்.
லாஸ்ட் டச்!
“லாஸ்ட் டச்” என்றதும் நாம் ADULTS ONLY விடயங்களை சொல்ல வருகிறோம் என்று நினைக்க வேண்டாம். சுகமான உறக்கத்தை விட வேறு என்ன வேண்டும்? நாளின் இறுதியில் எமக்கு கிடைக்கும் நிம்மதி இதுதான். இந்த உறக்கத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். தாம்பத்திய உறவை விட இந்த தூக்கம் மிகவும் முக்கியம்.