காதலை சொல்லாமல் சொல்வது எப்படி??

காதல் பலவகை. ஆண்களிடம் ஈர்க்கப்படும் ஒரு பெண் மாத்திரம் இருக்கலாம். சில நேரங்களில் இரண்டு மூன்று பேரும் ஈர்க்கப்பட்டிருப்பார்கள்.  அவர்களின் காதலை மனதிலே வைத்திருப்பது சற்று கடினமான ஒன்றுதான். பெண்கள் முதலில் காதலை சொல்லத் தயங்குவார்கள். இதனை அறிந்த ஆண்கள் தமது விருப்பத்தையும் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக வெளிப்படுத்த கையாளக்கூடிய முறைகளும் சில டிப்ஸ்களையும் கீழே தந்துள்ளோம். கீழே என்றவுடன் உங்கள் கால்களின் கீழே பார்க்க வேண்டாம்.

 

நிர்வாணமாக இருங்கள்!

தலைப்பை பார்த்தவுடனேயே உடைகளை கழற்ற வேண்டாம்.  இங்கு நிர்வாணமாக இருப்பது என்பது, உடல் ரீதியாக அல்ல உளரீதியாகத்தான். உங்களது அனைத்து இரகசியங்கள்,  நீங்கள் செய்த குற்றம் குறைகள், உங்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் சொல்லுங்கள். இது அனைத்தையும் கேட்டுவிட்டு, ஏன் இவைகளை என்னிடம் பகிர்கிறான் என்று அவர்கள் யோசித்தாலும் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள் என்று உங்களிடம் கேட்கமாட்டார்கள். ஏனென்றால் அந்த கேள்வி உங்களை புண்படுத்துமென அவர்களுக்குத் தெரியும். நீங்கள் அவர்களிடம் பழகும் விதத்தில் அவர்களுடனான ஆண் பெண் என்ற நட்பு வரையறை உடைந்துவிட்டது போல சொல்லாமல் சொல்ல முயற்சியுங்கள்.

 

ஒரு கதை சொல்லட்டுமா?

உங்கள் இருவரினதும் பேச்சுவார்த்தை  தடையின்றி இடைவிடாத பேச்சாக இருக்க வேண்டும். பேச்சின் ஜாடை, அளவு எல்லாமே நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் எதிர்பாராத விஷயங்களைச் சொல்ல வேண்டாம். பின்னணி தேடலுக்குப் பிறகு சொல்லுங்கள். பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக இருக்க வேண்டும். கேள்வியிலிருந்து கேள்விக்குச் செல்லுங்கள். சலிப்படைய வேண்டாம், கேள்விகளைக் கேளுங்கள். நகைச்சுவையாக விளையாடுங்கள். இந்த வழியில், நீங்கள் பேச்சை மிகவும் சுவாரஸ்யமான இடத்தில் முடிக்கலாம். இது தொலைபேசியுடனானதா அல்லது நேருக்கு நேரானதா என்பது முக்கியமல்ல. உங்கள் பேச்சிலிருந்து அவரை விலக்கக் கூடாது.

 

நீ ஏன் கேரக்டரையே புரிஞ்சிக்கல கண்ணு!

இந்த ஒரு விடயத்ததை சரியாக செய்தால் அனைத்துவம் வெற்றிதான். அதாவது அவர்களுக்கு பிடித்த விடயங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடிக்கும் என்பதை காட்டுங்கள். சில விடயங்கள் இருவருக்கும் பிடித்தவாறு அமைவதில்லை என்று தெரியும். ஆனால் தேன் வேண்டுமென்றால் மலை ஏறத்தானே வேண்டும்! அதுபோல அவருக்குப் பிடித்த விடயங்கள் பற்றி தேடி அறிந்துகொள்ள முயற்சியுங்கள். பொதுவாக இன்று ஒருவரை பற்றி அறியவேண்டுமென்றால் பேஸ்புக் போதும். அநேகமாக தமக்குப் பிடித்த விடயங்களை அதில் பதிவேற்றியிருப்பார்கள். அதன்மூலம், அவர்கள் பேய் படம் தனியாக பார்க்கும் தைரியசாலியா அல்லது விஞ்ஞான படம் பார்க்கும் அறிவாளியா என்பது உங்களுக்கு தெரியவரும். அதற்கேற்ப உங்களை அவர்களுக்குப் பிடித்த ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்துக்கொள்ளுங்கள்.

 

ஜோக்ஸ்

அவர்களை சிரிக்க வையுங்கள். சிரிப்பூட்டுகிறேன் என்று கூறி அவர்களிடம் உங்களையே தாழ்வாக காட்டிக்கொள்ளாதீர்கள். பொதுவாக ஜோக் சொல்கிறேன் என்று பலர் செய்யும் மடத்தனம்தான் தம்மையே அங்கு தாழ்வாக காட்டுதல், மொக்கை ஜோக் செய்தல், மோட்டுத்தனமான ஜோக்ஸ், சிரிப்பே வராத ஜோக்ஸ், இப்படி அவர்களிடம் மொக்கை செய்து நீங்களே கேலிக்கு ஆளாகாதீர்கள். அதற்கு பதிலாக இலகுவாக டபுள் மீனிங் ஜோக்ஸ் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஜோக்ஸ் பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி. மொக்கையாக இல்லாமல் இருப்பதே நல்லது.

 

அனுமதி!

பெண்ணொருவரிடம் விருப்பத்தைக் கேட்க முயற்சிக்கும் ஒரு முறைதான் இது. உதாரணமாக இப்பொழுது நீங்கள் இருவரும் நண்பர்கள் ஆயிற்றே. அதனால் நீங்கள் அவரது தோளில் கை போட்டு சரளமாக நண்பன் என்ற முறையில் சென்றால் அது பின்னால் பிரச்சினைக்கு வழிவகுக்கும். அதனால் தனியாக மனம் விட்டு பேசக்கூடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள். அப்படி பேசும்போது ஒன்றும் கூறவில்லை என்றால் உங்களுக்கு அந்த இடத்தில் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள் என்று அர்த்தம். இப்பொழுது நீங்கள் நேரடியாக உங்கள் காதலை வெளிப்படுத்தலாம்.

 

சந்தோஷத்தை கொடுங்கள்

பொதுவாக ஆணொருவன் பெண்ணொருத்தியையை உண்மையாக காதலிக்காதவரை அதனை வெளியில் சொல்லமாட்டான். தனது உண்மைக்காதலை மாத்திரமே உலகிற்கு சொல்வான். அப்படியிருக்கும்போது அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியையை கொடுக்க விரும்புபவன் அவளது உற்றாரிடமும் அவளது நண்பர்களிடமும் கூறி காதலுக்கான அனுமதியையை வாங்கினால் அது அவளுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும். அதன்மூலம் உங்கள் காதலை அவர் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கும்.

 

போதும் கண்ணாம்மூச்சி

சரி நண்பா… இதுதான் உலகில் உள்ள வெற்றிகரமான வழி. அதாவது மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் காதலை தைரியமாக போய் சொல்வதுதான் அந்த வழி. இதனை அதிகமானவர்கள் சொல்லத் தயங்கினாலும் இது உண்மையில் வெற்றிகரமான வழிதான். சில பெண்கள் தன்னிடம் நேரடியாக பேசும் ஆண்களை விரும்புவார்கள். உங்கள் காதலி அப்படிப்பட்ட ஒருவராக இருப்பின் நீங்கள் பயமின்றி சென்று உங்கள் காதலை சொல்ல முடியும். காதலை இப்படி கூறுங்கள், “எனக்கு உங்களை பிடித்துள்ளது. உங்களுக்கு பிடித்திருந்தால் விருப்பம் தெரிவியுங்கள். உங்களுக்கு காதலன் யாராவது இருந்தால் அல்லது விருப்பமில்லையாயின் விட்டுவிடுங்கள்” வற்புறுத்தாமல் இப்படிச் சொல்லிப் பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் காதல் ஜெயிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

                     BEST OF LUCK FOR SUCCESS YOUR LOVE PROPOSAL