இரசித்து ருசித்து உண்ண சுவையான சட்னி வகைகள்

 

மாங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

  • வெட்டிய பழுத்த மாம்பழங்கள் – 3 சிறிய வினாகிரி போத்தல்
  • சீனி – 500 கிராம்
  • இஞ்சி – 10 கிராம்
  • வெள்ளைப்பூண்டு – 20 கிராம்
  • மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி
  • ஏலக்காய் – 2 கிராம்
  • கராம்பு – சிறிதளவு
  • கறுவாப்பட்டை – சிறுதுண்டு
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • பிளம்ஸ் – 10 கிராம்

 

செய்முறை

வினாகிரி அரைக்கோப்பையில் வாசனை திரவியங்களை சேர்த்து ப்ளெண்ட செய்துகொள்ளுங்கள். இன்னொரு அரைக்கோப்பை வினாகிரியுடன்  சீனி சேர்த்து அடுப்பில் வையுங்கள். இளஞ்சூட்டில் வினாகிரி, சீனி கலவைக்கு மாம்பழத்துண்டுகளை சேர்த்து நன்கு கரண்டியால் கிளறவும். பின்பு இதற்கு ப்ளெண்ட் செய்த கலவையையும் பிளம்ஸ் ஐயும் சேருங்கள். நீர்த்தன்மையை இழக்கும் வரை நன்கு கலக்கவும். பின்னர் போத்தலில் போட்டு பாவிக்கவும்.

 

அன்னாசி சட்னி 

தேவையான பொருட்கள்

  • பெரிய அன்னாசிப்பழம் – 1
  • சீனி – 3/4 கோப்பை
  • வினாகிரி – அரைக்கோப்பை
  • கடுகு – ஒருதேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் – 3
  • கறுவாப்பட்டை – சிறிதளவு
  • உப்பு – சிறிதளவு
  • துண்டு மிளகாய் – 2 தேக்கரண்டி
  • ஏலக்காய் – 5
  • கராம்பு – 3

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை போடவும். அதில் ஏலம், கராம்பு, கறுவா, காய்ந்த மிளகாய் போன்றவற்றை போடவும். நெருப்பை குறைத்து வைத்து சிறிது நேரத்தில் துண்டு மிளகாயை போடவும். கலக்கும் போதே ஒரு கோப்பை தண்ணீருடன் சீனியையும் வினாகிரியையும் போடுங்கள். இதனுள் சீனி நன்றாக நீர்த்தன்மையை அடையும் போதும் அதில் அன்னாசி துண்டுகளை போட்டு நன்கு கிளறுங்கள்.

 

தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

  • அரைத்த தேங்காய் – ஒரு கோப்பை
  • சிறிய வெங்காயம் – 6
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பச்சை கொச்சிக்காய் – சிறிதளவு

செய்முறை

அனைத்து பொருட்களையும் போட்டு நீர் சேர்த்து நன்கு ப்ளெண்ட செய்து கொள்ள வேண்டும். பின்பு வெள்ளைப்பூண்டு மூன்று பல், கடுகு, வெட்டிய பாதி வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். ப்ளெண்ட செய்த கலவையுடன் தாளித்ததையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவைக்கு ஏற்ப எழுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும்.

 

நிலக்கடலை சட்னி

தேவையான பொருட்கள்

  • நிலக்கடலை – 3/4 கோப்பை
  • எண்ணெய் – சிறிதளவு
  • உளுந்து – ஒரு மேசைக்கரண்டி
  • கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
  • பச்சை மிளகாய் – மூன்று
  • வெள்ளைப்பூண்டு – மூன்று பல்
  • மஞ்சள் தூள் – அரைத்தேக்கரண்டி
  • கடுகு – ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் – மூன்று

 

செய்முறை

நிலக்கடலையை எண்ணெய் சேர்த்து ஒரு கடாயில் வைத்து கொள்ளவும். அது சூடாகும் போது உளுந்து சேர்க்கவும். பின்னர் அதில் கடலைப்பருப்பை சேர்த்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், நறுக்கிய வெள்ளைப்பூண்டு, தோல் நீக்கிய நிலக்கடலை போன்றவற்றை சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் அரைக்கோப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவற்றை நன்கு கட்டியான பதார்த்தமாக ஆக்கிக்கொள்ளுங்கள். பின்னர் கடுகு ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் மூன்று சேர்த்து தாளித்து, அவற்றுடன் ஏற்கனவே தயாரித்த கட்டியான கலவையை சேர்த்துக் கொள்ளுங்கள்.