புத்தளத்தை சுற்றியுள்ள அழகான பிரதேசங்கள்

 

விடுமுறை நாட்களில் செல்வதற்கென சில இடங்களை திட்டமிட்டு வைத்திருப்பீர்கள். அவ்வாறு செல்லவிருப்போர் இதனையும் சற்று பாருங்கள். குறிப்பாக புத்தளத்தை அண்டிய பகுதிகளுக்கு செல்லவிருப்போர் அல்லது ஆசைப்படுவோர் அங்குள்ளவற்றை தெரிந்துகொண்டு செல்லுங்கள். அப்போது திட்டமிடலுக்கு இலகுவாக இருக்கும்.

 

தளவில தேவாலயம்

புத்தளம் பாலாவி சந்தியை தாண்டி கற்பிட்டிக்கு செல்லும் வழியில் தளவில தேவாலயம் உள்ளது. இது இலங்கையில் கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் பெரும்பாலாக வாழும் பிரபலமான இடமாகும். இந்த ஆலயம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. இது கிறிஸ்தவர்களின் வருடாந்த வழிபாட்டுத் தலமாகும். இவ்விழாவில் இலங்கையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொள்கிறார்கள். விழாக்காலத்தில் அமைக்கப்படும் சிறிய கொட்டகைகளில் வாரக்கணக்கில் பக்தர்கள் தங்கியிருப்பர். மார்ச் மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடைபெறும் திருவிழா அப்பகுதி மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதாவது எல்லா இடங்களிலிருந்தும் வரும் மக்களை தங்கவைப்பதன் மூலமும், அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதிலிருந்தும் அவர்கள் நிறைய இலாபத்தை பெற முடியும். மேலும், தளவில தேவாலயத்தை ஒட்டியுள்ள அழகான கடற்கரை மிகவும் பிரபலமானது. கடற்கரையின் தொலைவில் ஒரு களங்கரை விளக்கமும் உள்ளது.

 

ற்பிட்டி களப்பு சவாரி

கற்பிட்டிக்குச் செல்வோர், குறிப்பாக அந்த பக்கத்தில் சவாரி செய்வோர், கருவாடு வாங்குவதற்காக செல்வார்கள் அல்லது களப்பு சவாரிக்காக செல்வார்கள். ஆனால் நீங்கள் சவாரிக்கு செல்லவில்லை என்றால், பயணம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. படகொன்றில் ஏறி தெரிந்த, தெரியாத மீன்களையும் பார்த்துவிட்டு வரும் வழியில் கற்பிட்டி கருவாட்டையும் எடுத்துக்கொண்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கென சில படகுகளும் அங்கிருக்கின்றன. பணம் கொடுத்து ஒரு படகையும் பெற்று அப்படியே ஒரு சவாரி செய்து கற்பிட்டி கருவாட்டு வாடிக்குச் செல்லமுடியும்.

 

ஆலங்குடா கடற்கரை

வடமேற்கு கடற்கரையில் உள்ள கற்பிட்டி தீபகற்பத்தில் காணப்படும் இந்த கடற்கரை சமீபத்தில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்களைப் பார்க்க பலர் இந்த கடற்கரைக்கு வருகிறார்கள். சர்ஃபிங், படகோட்டம், விண்ட்சர்ஃபிங், கேனோயிங் மற்றும் பல நீர் விளையாட்டுகளுக்கும் இந்த இடம் பிரபலமானது. ஆலங்குடாவுக்கு வருகை தரும் எவரும் இதுபோன்ற இன்னும் சில அழகான இடங்களை பார்வையிடலாம். வில்பத்து தேசிய பூங்காவும் அவற்றில் ஒன்று. ஆலங்குடாவிலிருந்து ஒரு மணிநேரத்தில் வில்பத்து தேசிய பூங்காவிற்குச் செல்ல முடியும்.

 

முன்னேஸ்வரம் கோயில் – சிலாபம்

சிலாபத்தில் உள்ள மிகவும் பிரபலமான இந்து கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கி.பி 1000 ஆம் நூற்றாண்டு முதல் இக்கோயில் ஒரு இந்து யாத்திரை மையமாக இருந்து வருகிறது. இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோயிலானது ஒரு பௌத்த கோயில் வளாகத்தையும் கொண்டுள்ளது. இங்கு பிள்ளையார், ஐயனார், காளி ஆகிய தெய்வ வழிபாடுகள் இடம்பெறுகின்றது. புத்தளத்தில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்கள் வசிக்கும் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் போர்த்துகீசர்களால் இரண்டு முறை அழிக்கப்பட்டாலும், பக்தர்களின் உதவியுடன் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.


 

ஆனைவிழுந்தான் பறவைகள் சரணாலயம்

புத்தளத்திற்கும் சிலாபத்திற்கும் இடையில் காணப்படும் ஆனைவிழுந்தான் பறவை சரணாலயம் மிகவும் அழகானது. மூன்று தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகள் சந்திக்கும் இடத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலங்கள் மற்றும் நன்னீர் நீர்த்தேக்கங்கள் இதனருகில் காணப்படுகின்றன. புலம்பெயர்ந்த பறவைகள், பூர்வீக பறவைகள் என 150க்கும் மேற்பட்ட பறவை இனங்களை இங்கு காணலாம்.  புலம்பெயர்ந்த பறவைகளைக் காண, நீங்கள் ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் அங்கு செல்லண்டும். இந்த சரணாலயத்தில் ஐந்து ஆபத்தான தாவரங்களும் சுமார் 74 பட்டாம்பூச்சி இனங்களும் உள்ளன. நீங்கள் ஒரு சவாரி போவதாக இருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்தலாம்.


 

ற்பிட்டி டச்சு கோட்டை

நீங்கள் கற்பிட்டிக்குப் போகிறீர்கள் என்றால் இங்கு செல்லாதவர்கள் யாரும் இல்லை. கடந்த காலங்களில் அரபு வர்த்தகர்களுக்கு இது ஒரு பிரபலமான இடம். 1667 இல் கட்டப்பட்ட இந்த கோட்டை டச்சு காலத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. புத்தளத்திற்கு அருகில்  இலவங்கப்பட்டை பயிர்ச்செய்யப்பட்டது. டச்சுக்காரர்கள் கற்பிட்டியிலிருந்து இலவங்கப்பட்டையை நீர்கொழும்பு வழியாக கொழும்புக்கு கொண்டு செல்ல ஒரு கால்வாயைக் கட்டியிருந்தனர். கற்பிட்டி கோட்டையின் நான்கு மூலைகளிலும் சோதனைச் சாவடிகள் இருந்தன என்பதற்கு இன்றும் சான்றுகள் உள்ளன. இந்த கோட்டையின் சிறப்பு என்னவென்றால், கோட்டையிலிருந்து வெளியேற இரண்டு சுரங்கங்கள் உள்ளன. அவற்றைக் காண இங்கே சென்று பாருங்கள்.

 

வில்பத்து தேசிய பூங்கா

இலங்கையின் இயற்கை வனங்களின் பட்டியலில் சிறப்பான இடத்தை பெற்ற வில்பத்து தேசிய பூங்கா மொத்தம் 1317 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இயற்கை ஏரிகள், காடுகள் மற்றும் சமவெளிகளைக் கொண்ட அழகான இடமாகும். வில்பத்து காட்டில் ஒரு சவாரிக்குச் செல்ல மறந்துவிடாதீர்கள். இந்த பூங்கா புத்தளத்தத்திற்கு வடக்கே 26 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தற்போது, ​​சில அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குடியேற்றங்களை நிறுவன காட்டை வெட்டுகிறார்கள். இதனால் ஏராளமான நீர்தேக்கங்கள் நீரை இழந்துள்ளன. பெரும்பாலான விலங்குகளும் இறந்துவிட்டன. வில்பத்து இலங்கையில் ஏராளமான அரிய விலங்குகளைக் கொண்டுள்ளது. 1988 முதல் 2003 வரை போருக்காக மூடப்பட்டிருந்த இந்த பூங்கா இப்போது பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எப்போது வேண்டுமானாலும் பூங்காவிற்குச் செல்லலாம். பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் காலகட்டத்தில் பூங்காவிற்கு ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.