விரல் சைகைகளின் மூலம் குறிப்புகளை உணர்த்தும் பலர் நம்மில் உள்ளனர். வெற்றி, தோல்வி, நட்பு, கோபம் என பல உணர்வுகளை வெளிப்படுத்த சில சமிக்ஞைகளை பயன்படுத்துவோம். சிலர் இவற்றிற்கான அர்த்தம் தெரியாமல் இருப்பர். இந்த ஆக்கத்தை படித்து அறிந்துகொள்ளுங்கள்.
V SYMBOL
ஆள்காட்டி விரலும் நடுவிரலும் சேர்த்து காட்டப்படும் V போன்ற சைகையை, நண்பர்களுடன் இருக்கும்போதும் புகைப்படம் பிடிக்கும்போதும் நாம் பயன்படுத்துவோம். ஆனால் வெற்றியை பிரதிபலிக்கவே இந்த சைகை தோன்றியது. 1941 ஜனவரி 14 இல் பிபிசி ரேடியோவில் உரையாற்றிய பெல்ஜியம் நாட்டு அரசியல்வாதியான விக்டர் டி ரேவேலி, 2 ஆம் உலகப்போருக்கு அணிதிரண்டு கொண்டிருந்த தன் நாட்டு மக்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும் வெற்றியை பிரதிபலிக்கவும் இந்த சைகையை காட்டினார். இதன் மூலமே V FOR VICTORY என்ற அர்த்தம் உருவாகியது.
MID FINGER SYMBOL
தெரிந்தவர் நண்பர்களுக்கிடையில் நடுவிரலை மாத்திரம் காட்டினால் வேடிக்கையான ஒன்றாக இருக்கும். இதையே மற்றவர்கள் முன்னால் காட்டினால் தர்ம அடி வாங்க வேண்டிவரும். ஏனென்றால் இது அதிகமாக ஒருவரை திட்டுவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு ஆபாச செய்கையாக கருதப்படுகிறது. இந்த சைகை பண்டைய ரோம் காலத்தில் தீய சக்திகளை விரட்ட பயன்படுத்தப்பட்டது.
HANG LOOSE/ SHAKA SIGN
இதுவும் V SYMBOL போல ஒரு சைகையாகும். இதனையும் புகைப்படம் பிடிக்கும்போது நண்பர்கள் பயன்படுத்துவர். இந்த விரல் செய்கை AWESOME மற்றும் FRIENDSHIP ஐ பிரதிபலிக்கின்றது. ஹவாய் மாகாணத்தில் வாழ்ந்த ஹமான கலிலி எனும் ஒருவர் சர்க்கரை தொழிற்சாலையில் தனது கட்டை விரலையும் சுட்டுவிரலையும் தவிர்த்து மற்றைய வலது கை விரலைகளை இழந்து விட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு சர்க்கரை ஏற்றிச்செல்லும் ரயிலில் காவலராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு சமிக்ஞைக்காக தனது கட்டை விரலையும் சுட்டு விரலையும் உயர்த்தி அசைப்பார். இது நாளடைவில் நாடுபூராகவும் பரவி இன்று பிரபலமாகிவிட்டது.
HAND SHAKE
கைகுலுக்கும் வழக்கம் எம்மில் பலரிடம் உண்டு. இதனை பண்டைய காலத்து கிரேக்க மக்கள் பயன்படுத்தினர். இதனை பாதுகாப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தினார்களாம். அதாவது முன்பெல்லாம் மக்கள் தமது சட்டையின் கை பகுதிக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்து தாக்கக்கூடும் என்பதனால் கைக்குலுக்கல் மூலம் ஆயுதம் இல்லை என்பதனை உறுதிசெய்து கொள்ளவே அவ்வாறு செய்தார்கள்.
FIST BUMP
1800 களில் குத்துசண்டை வீரர்கள் தமக்குள் வணக்கம் செலுத்திக்கொள்ள இதனை பயன்படுத்தினார்கள். ஆனால், கையில் போட்டிருக்கும் GLOVES உடன் அதனை செய்ய முடியாது. ஆகையால் GLOVES உடன் கைவிரல்களை மடக்கியவாறே தொட்டுக்கொள்வார்கள். இது இப்போது பொதுமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ஹாய் கூறும் ஒரு செய்கையாக பயன்படுத்துகின்றனர். விளையாட்டு வீரர்கள் விளையாட்டின் நடுவில் இதனை செய்வதையும் பார்க்கலாம்.
HORN SIGN
இந்த ஹார்ன் SIGN ஒரு காலத்தில் தீய சக்திகளை விரட்ட பயன்படுத்தப்பட்ட ஒருவகை மூடநம்பிக்கையாகும். ரோனி ஜேம்ஸ் டியோ எனும் ராப் இசைப்பாடகர் தனது இசை கச்சேரிகளில் இந்த செய்கையை காட்டி மக்களை ஆரவாரப்படுத்தினார். இது நாளடைவில் ஒரு குறியீடாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
THUMBS UP
நாம் நாளாந்தம் பயன்படுத்தும் பேஸ்புக்கில் இந்த அடையாளம் பிரபலமானது. LIKE பட்டனைத்தான் குறிப்பிடுகின்றோம். இது முன்னைய காலத்தில் இரு வீரர்கள் போட்டியில் சண்டையிட்டுக் கொள்ளும்போதும் ஒருவரை ஒருவர் வீழ்த்தும் போதும் வீழ்த்துபவரை பார்த்து பொதுமக்கள் THUMBSUP காட்டினால் வீழ்த்தப்பட்டவரை உயிருடன் விட்டுவிடுவார். அதுவே THUMBSDOWN காட்டப்பட்டால் வீழ்த்தப்பட்டவர் பரலோகம் செல்ல வேண்டியதுதான். இப்படி உருவான இந்த THUMBS UP சைகையை நாம் சிறு வயதிலும் பயன்படுத்தியிருப்போம்.