திடீரென காணாமல் போன 5 நபர்கள்!

பல புதுப்புது விடயங்களை கண்டுபிடித்த மனிதனால் இன்று வரை தலையிடியாக இன்னும் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்திய விடயமாக பல மர்மமான சம்பவங்கள் இருக்கின்றன. அவ்வாறு கடந்த காலங்களில் திடீரென கண்ணெதிரே இருந்து காணாமல் போன மனிதர்களை பற்றிய சம்பவங்களை இன்று பார்ப்போம்.

 

மர்மமாய் மறைந்த மனைவி

1975 இல் ஜாக்சன் மற்றும் மார்தா எனும் தம்பதியினர் தமது காரில் நியூ ஜெர்சியில் இருந்து நியூயோர்க் நகரிற்கு லிங்கன் சுரங்கப்பாதை வழியாக சென்றனர். செல்லும் போது காரின் முன்னாலும் பின்னாலும் கண்ணாடியினூடாக பார்க்க முடியாமல் இருந்தது. கண்ணாடியை துடைப்பதற்காக, முன் கண்ணாடியருகில் கணவனும் பின் கண்ணாடியருகில் மனைவியும் சென்றுள்ளனர். முன் கண்ணாடியை துடைக்கச் சென்ற ஜாக்சன் திரும்பிவர, பின் கண்ணாடியை துடைக்கச் சென்ற மார்தாவை காணவில்லை. இந்த சம்பவத்தின் பின்னர் பல கட்டுக்கதைகள் தோன்றினாலும் இதுவரை அந்த சம்பவத்தில் காணாமல் போன மார்தா பற்றி எந்த தகவலும் இல்லை.

 

மர்மமாய் மறைந்த கணவன்

1959 இல் ஏப்ரல் மாதத்தில் CAMPBELL எனும் தம்பதியினர், அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் நகரில் இருக்கும் தம் மகனை பார்க்க இங்கிலாந்திலுள்ள நோர்தம்ப்டன் நகரிலிருந்து வடக்குப் புறமாக காரில் பயணம் செய்தனர். 1600 கிலோமீற்றர் தூரம் கார் பயணத்தில் களைப்படைந்த MR. CAMPBELL க்கு சற்று தூக்க கலக்கமாக இருந்ததால் வழியில் இருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கிச்செல்ல முடிவு செய்தனர். அன்றிரவு தூக்கத்தில் இருந்து எதேச்சையாக விழித்துப் பார்த்த MRS. CAMPBELL க்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அருகில் இருந்த இருந்த கணவனை காணவில்லை. எங்கேயாவது வெளியே சென்றிருப்பார் என்று பார்த்தாலும் அப்படி எங்கும் சென்ற அறிகுறி இல்லை. ஏனெனின், போட்டு வந்திருந்த SHOES , கண்ணாடி, WALLET , கார் சாவி அனைத்தும் வைத்தபடியே இருக்க அவர் மட்டும் காணாமல் போய்விட்டார். இந்த சம்பவம் நடந்து 60 வருடங்கள் ஆகியும் இதுவரை அவர் பற்றி ஒரு தகவலும் இல்லை.

 

பல்கலைக்ழக மாணவி

இந்தியானா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த LAUREN SPIERER எனும் அமெரிக்க மாணவி 2011 இல் ஜூன் 3 இல் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தான் வசிக்கும் குடியிருப்புக்குச் சென்றுள்ளார். செல்லும் வழியில் வடக்கு புறமாக ஒரு வீதியில் அவரை அவரது நண்பர்கள் இறுதியாக கண்டுள்ளனர். அதன் பின்னர் அவர் பற்றிய எவ்வித தகவலும் இல்லை. சிலரின் கூற்றுப்படி அவர் அவரது நண்பர்களுடன் சென்றபோது ஏதாவது ஒரு இடத்தில வைத்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் எனவும், அதனை மறுப்பதாகவும் கதைகள் நிலவி வருகின்றன.

 

ஹைக்கிங் நண்பர்

நண்பர்களான பார்பரா போலிக் மற்றும் ஜிம் ரமேகர், 2007 இல் மொன்டானாவில் உள்ள பிட்டர்ரூட் மலையில் ஏறச்சென்றனர். மலையில் ஏறும்போது ஜிம் ஒரு அழகான காட்சியை கண்டு அதை தனது சக நண்பருக்கும் காட்ட முடிவு செய்து திரும்பிப் பார்த்த போது அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு தூரம் மலையேறி வந்த நண்பர் திடீரென காணாமல் போனதை பார்த்தவுடன் பயந்த ஜிம், வனவிலங்குகளால தாக்கப்பட்டிருப்பாரா என்று சுற்றிலும் பார்த்தார். எனினும், அவரை எங்கும் காணவில்லை.

 

ANTIQUE கடைக்காரி

1990 ஜூன் 16 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் ட்ரவலன் எவன்ஸ் எனும் பெண்மணி, தனது ATTIC ANTIQUES எனும் பழம்பொருட்களை விற்கும் கடையை வாடிக்கையாளர்களுக்காக திறந்தார். மக்கள் நன்கறிந்த ஒருவரே எவன்ஸ். அன்று பகல் 12 மணியளவில் வாட்டசாட்டமான ஒருவர் வந்துசென்றதை அங்குள்ள மக்கள் கண்டுள்ளனர். அதன் பிறகு 12.40 அளவில் அவர் கடை கதவில் “BACK IN 2 MINUTES” என்று எழுதி விட்டும் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சலசலப்பான தெருவில் மாயமாய் மறைந்துபோன ட்ரவலின் எவன்ஸ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.