பணக்கார நிறுவனங்களின் பகுதி நேர வேலைகள்!

 

பணக்கார நிறுவனங்களுக்கு பகுதிநேர வேலை என்றதும் ஆச்சரியப்படுகின்றீர்களா? ஆம், பணக்கார நிறுவனங்களாக இருந்தாலும் அவர்களுக்கு வேறு சிறிய வியாபார நடவடிக்கைகளும் உண்டு. அவ்வாறு உலகின் பிரசித்திபெற்ற தயாரிப்புகளை வழங்கும் நிறுவனங்களின் இதர தயாரிப்புகள் பற்றியே நாம் இன்று தகவல் வழங்கவுள்ளோம்.

 

SONY இன்சூரன்ஸ்

SONY என்பது ELECTRONIC பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்றே அனைவரும் நினைப்பார்கள்.. ஆனால் அதுவல்ல உண்மை. ஆம், சோனி உண்மையில் ஒரு ELECTRONIC பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் அல்ல. அது ஒரு INSURANCE நிறுவனம் என்றால் நம்புவீர்களா? SONY LIFE எனும் INSURANCE  நிறுவனம் தனது உப வியாபாரமாகவே SONY ELECTRONICS பொருட்களை தயாரித்தது. SONY நிறுவனம் இசை, பொழுதுபோக்கு, விளம்பரங்கள், வங்கிச் சேவை, இன்சூரன்ஸ் போன்றவற்றை கொண்டிருந்தாலும், இதன் வருடாந்த இலாபத்தில் 65 % இன்சூரன்ஸ் நிறுவனத்தினாலேயே பெறப்படுகின்றது. SONY பல நாடுகளில் இருந்தாலும், இன்று பல புதிய வகைகள் (Brand) வந்துவிட்டதால் சோனி தயாரிப்புகள் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளன.

 

SAMSUNG மெஷின் GUN

இவ்வளவு காலமாக SAMSUNG என்ற நிறுவனத்தின் தயாரிப்பாக மொபைல்கள், டிவி, வொஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி என்பவற்றையே நாம் நினைத்திருப்போம். ஆனால் நாம் சற்றும் எதிர்பாராத அளவிற்கு இந்த SAMSUNG நிறுவனம், இராணுவத்திற்கு இலத்திரனியல் துப்பாக்கிகளை தயாரித்து கொடுக்கிறது. ஆம் தென்கொரிய இராணுவத்திற்கு தென்கொரிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து ARTIFICIAL INTELLIGENCE AUTOMATIC MACHINE GUN எனும் GUN களை உருவாக்கி வருகின்றது. இதுமாத்திரமின்றி REAL ESTATE , ஆடம்பர ஹோட்டல்கள், மருத்துவமனைகள், ஹெலிகொப்டர் என்ஜின்கள் போன்றவற்றையும் தயாரித்து வருகின்றது.

 

PORSCHE தேன்

SPORTS கார்களையே அதிகம் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் தனது இதர தயாரிப்பாக தேன் உற்பத்தியை வைத்துள்ளது. 2017 இல் ஜேர்மனியின் இந்த நிறுவனம் ஒரு பண்ணையை அமைத்தது. இங்கு வகைவகையான தேனீக்கள் உள்ளன. டிசம்பர் மாத இறுதியில் சுமார் 40 கிலோகிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது தனது தேன் உற்பத்தியை TURBIENCHEN எனும் பெயரில் தனது CUSTOMER CARE களிலேயே விற்பனை செய்கின்றது. மேலும் தூய தேன் என்பதால் ஜெர்மனியில் இதற்கு மதிப்பும் அதிகம். இது இலாப நோக்கு மட்டுமின்றி தேனீக்களை பாதுகாக்கும் பொருட்டும் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

 

TOYOTA READYMADE வீடு

TOYOTA  நிறுவனம் என்றாலே மலிவான விலையிலும் பிரசித்தி பெற்ற TOYOTA வாகனங்கள்தான் நினைவிற்கு வரும். ஆனால் இவர்களது இன்னொரு இலாபமீட்டும் முறைதான் வீடு கட்டுமானமாகும். ஜப்பான் நாட்டில் INSTANT அல்லது READYMADE வீடுகளை கட்டிக்கொடுக்கும் நிறுவனமாகவும் இது பிரபலமாகியுள்ளது. PRE FABRICATED வீடுகளை இந்நிறுவனம் கட்டிக்கொடுக்கின்றது. இவ்வாறான வீடுகளை கட்டுவதால் நேரமும் செலவும் குறைகின்றது.

 

LAMBORGHINI TRACTOR

எம்மில் பலருக்கும் LAMBORGHINI கார் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் இவர்களின் வரலாறு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இந்த LAMBORGHINI நிறுவனருக்கும் FERRARI நிறுவனருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் பின்னர், FERRARI SPORTS கார்களுக்கு எதிராக உருவானதே LAMBORGHINI கார்கள் ஆகும். அதற்கு முன்னர் LAMBORGHINI நிறுவனம் TRACTOR களையே தயாரித்தது. இன்று SPORTS கார்களை உருவாக்கும் நிறுவனமாக இருந்தாலும், ஆரம்பகால உற்பத்தியை இன்னும் இந்நிறுவனம் தொடர்கின்றது.