ஒவ்வொரு நாட்டிலும் சில சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன. அதைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். நீங்கள் சுற்றுலா பயணங்களை விரும்பும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு தாய்வானை பற்றிய சுவாரஷ்யமான சம்பவங்களை அறியவேண்டிய நேரம் வந்துவிட்டது. தாய்வானை பற்றிய 5 சுவாரஸ்யமான உண்மைகளில் சில ஆச்சரியமும் ஊக்கமும் அளிக்கும்.
பனீஸ் விற்கும் வண்டி
குப்பைகளை சேகரிக்க தாய்வான் ஒரு தனித்துவமான வழியை பின்பற்றுகிறது. நீங்கள் தாய்வானுக்குச் சென்றிருந்தால் அங்க வீதியில் ஒரு குப்பைத்தொட்டியையும் பார்த்திருக்க மாட்டீர்கள். அதற்கு பதிலாக குப்பை லொறிகள் உள்ளன. அவை நகரத்தைச் சுற்றி வந்து மக்களிடமிருந்து நேராக குப்பைகளை சேகரிக்கின்றன.
ஆனால் எப்போது தங்கள் குப்பைகளை வெளியே எடுக்க வேண்டும் என்று மக்களுக்கு எப்படி தெரியும்? இது சற்று அசாதாரணமானது. லொறி ஓட்டுனர்கள் தங்கள் குப்பைகளை லொறிக்கு கொண்டு வர மக்களைத் தூண்டுவதற்காக எமது நாட்டில் பனீஸ் கார மாமா போடும் அந்த மியூசிக்கைத்தான் ஒலிக்கவிட்டுக்கொண்டு வருவார்கள். கிறிஸ்மஸ் மாதத்தில் இந்த மியூசிக் கிறிஸ்மஸ் கரோல் ஆக மாறிவிடும்.
தாய்வான் ஸ்பெஷல் BUBBLE TEA
தாய்வானின் ஒவ்வொரு மூலையிலும் BUBBLE TEA விற்கப்படுகிறது. உண்மையில், BUBBLE TEA முதலில் 1980 களில் தாய்வானில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அது ஆசியா முழுவதிலும் மற்றும் மேற்கு நாடுகளிலும் பரவியுள்ளது. இது சில நாடுகளில் PEARL TEA மற்றும் BOBA TEA என்றும் கூறப்படுகிறது. BUBBLE TEA எல்லோருக்கும் பிடித்ததாக இல்லாவிட்டாலும் தாய்வான் ஸபெஷலான இந்த பானத்தை ருசித்து பார்க்க நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம். யாருக்கு தெரியும், உங்களுக்கு பிடித்த புதிய பானங்களையும் நீங்கள் கண்டுபிடிக்கக்கூடும்.
8 மணித்தியாலத்தில் நாட்டையே சுற்றிப் பார்க்கலாம்
நல்ல விடயங்கள் சில சந்தர்ப்பங்களில் மலிவாக கிடைக்கும். தாய்வானும் அப்படித்தான். தாய்வான் தீவு மிகவும் சிறியது. நீங்கள் 8 மணி நேரத்தில் பயணத்தை முடித்துக்கொள்ளலாம். அதிவேக ரயிலில் தாய்வான் தெற்கிற்கு 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும். இதன் அர்த்தம் நீங்கள் வீதியில் குறைந்த நேரத்தை மட்டுமே செலவிடுவீர்கள். அதனால் தாய்வானில் அதிக நேரம் உலாவ முடியும்.
PLASTIC FREE தாய்வான்
தாய்வான் 2030 க்குள் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாடாக மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் நட்பு நாடாக மாறுவதற்கான முதல் படிகளை அடுத்த சில ஆண்டுகளில் எடுக்கவுள்ளது. 2020 ல் முக்கிய உணவகங்களில் இருந்து பிளாஸ்டிக் ஸ்ட்ரோவ், பிளாஸ்டிக் பைகள் என்பன மறைந்துவிடும். மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கோப்பைகள் போன்றவற்றை 2025 இல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாய்வான் ஸ்பெஷல் கப்ஸி TOFU
இதனை நுகர்ந்து பார்க்க சிறிது கஷ்டம்தான். ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். இது எப்படி தாய்வானின் பிரபலமான சிற்றுண்டியாக மாறியதென யாராலும் சொல்ல முடியாது. ஆனால் இதை விற்கும் இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இதன் துர்நாற்றம் கலந்த மணம் அடிக்கும். இதை செய்வதற்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான ரெசிபி இருக்கும். ஆனால் பொதுவாக இதற்கு புளித்த பால், மரக்கறிகள், இறைச்சி, மீன் போன்றவற்றையே பயன்படுத்துகிறார்கள். இந்த TOFU வெள்ளரிக்காய், சோயா சோஸ் மற்றும் மிளகாய்களுடன் பரிமாறப்படுகிறது.