உணவை அனுபவிக்க இனிப்பு ஒரு சிறந்த வழியாகும். ஒரு கெண்டி, பழ சாலட், ஐஸ்கிரீம் ஒரு ஸ்பூன் ஆகியவற்றைக் கொண்டு சாப்பிட்ட காலம் முடிந்துவிட்டது. இப்போது நாக்கு இன்னும் நன்றாக சாப்பிட தேடுகிறது. பொதுவாக மேற்கத்திய உணவு கலாசாரத்தில் இனிப்புகள் ஒரு முக்கிய பகுதியாகும். அங்கு பல்வேறு வகையான உணவு வகைகள் உள்ளன. அத்தகைய சில உணவை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி இன்று பார்ப்போம்.
PANNA COTTA
தேவையான பொருட்கள்
- பால் -1 லீட்டர்
- சீனி – 250 கிராம்
- வணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி
- ஜெலட்டின் – 50 கிராம்
- விரும்பிய பழம்
- ஒரு கடாயில் சீனியை போட்டு சூடாக்கவும். அதில் வணிலா எசன்ஸ் இரண்டு துளிகள் சேர்க்கவும். பின்பு ஆறவிட்டு ஜெலட்டின் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிரூட்டவும்.
- ஸ்ட்ரோபெரி அல்லது மாம்பழம் போன்ற ஒரு பழத்தை எடுத்து, அதை துண்டுகளாக வெட்டி சிறிது சர்க்கரையுடன் சேர்த்து சூடாக்கி SCULP போன்று எடுக்கவும்.
- பின்னர் ஒரு ப்ளெண்டர் கொண்டு நசுக்கவும். பால் கலந்து ப்ரிட்ஜில் மீண்டும் வைக்கவும். பழங்கள் சேர்ப்பது சற்று கடினம் என்றால் சொக்கலேட் மற்றும் எசன்ஸ் சேர்த்தாலும் பரவாயில்லை.
LEMON MOUSSE
தேவையான பொருட்கள்
- விபிங் கிரீம் – 200 மில்லி
- ஜெலட்டின் -1 1/2 தேக்கரண்டி
- சர்க்கரை – 100 கிராம்
- முட்டை – 3
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
- பிரித்தெடுக்கப்பட்ட எலுமிச்சை பட்டை
- முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை இரண்டு கிண்ணங்களாக பிரிக்கவும். அதில் ஒன்றிற்கு 50 கிராம் வீதம் இரண்டிற்கும் சர்க்கரை சேர்க்கவும். மூன்று தேக்கரண்டி ஜெலட்டினில் தண்ணீரை சேர்த்து ஊறவைக்கவும். விபிங் கிரீமை நன்கு பீட் செய்யவும். ஊறவைத்த ஜெலட்டின் உருகும்போது, அதை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- மஞ்சள் கருவை நன்கு பீட் செய்து அதனுள் ஜெலட்டின் கலவையை சேர்க்கவும். பின்னர் வெள்ளைக்கரு மற்றும் விபிங் க்ரீம் சேர்த்து தட்டையான கரண்டியால் கலக்கவும். இறுதியில் பரிமாறும் கிண்ணங்களில் போட்டு 3-4 மணி நேரம் குளிரூட்டியில் வைக்கவும்.
CHOCOLATE TART
தேவையான பொருட்கள்
- மாரி பிஸ்கட் – 200 கிராம்
- குக்கிங் சொக்கலேட் – 200 கிராம்
- உருக்கிய வெண்ணெய் – 100 கிராம்
- பிரெஷ் பால் – 100 மில்லிலீட்டர்
- சர்க்கரை – 50 கிராம்
- முட்டை – 2
- பிஸ்கட்டில் ஒரு சிறிய பகுதியை தனித்தனியாக வைத்து, மீதமுள்ளவற்றை கலக்கவும். அதை வெண்ணெய்யில் போட்டு மீண்டும் கலக்கவும். ஒரு கிண்ணத்தை எடுத்து, ஒரு கரண்டியால் கலவையின் அடிப்பகுதி மூடப்படும் வரை நிரப்பி, சுமார் 10 நிமிடங்கள் குளிரூட்டவும்.
- பின்னர் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் பால் சேர்த்து குமிழ்கள் வரும் வரை சூடாக்கவும். அடுப்பில் இருந்து எடுத்து சொக்கலேட் சேர்க்கவும். அதில் சர்க்கரையைச் சேர்த்து, சர்க்கரை உருகும் வரை நன்கு கலக்கவும்.
- இரண்டு முட்டைகளையும் ஒரு தனி கிண்ணத்தில் அடித்து பால் கலவையில் சேர்க்கவும். இந்த கலவையை குளிரூட்டியில் வைக்கவும்.
- மீதமுள்ள பிஸ்கட்டுகளை பெரிய துண்டுகளாக உடைத்து இதில் சேர்க்கவும். 180 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
COFFEE GRANITA
தேவையான பொருட்கள்
- கோப்பி தூள் – 3/4 கப்
- விபிங் கிரீம் – ½ தேக்கரண்டி
- வணிலா அசன்ஸ் – 1 தேக்கரண்டி
- சர்க்கரை – 1 கப்
- தண்ணீர் – 1 1/2 கப்
- கோப்பி தூள், வணிலா அசன்ஸ், சர்க்கரை சேர்த்து சூடான நீரில் கலக்கவும்.
- குளிர்ந்ததும் ஒரு தட்டையான கிண்ணத்தில் போட்டு உறைய வைக்கவும்.
- பின்பு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை எடுத்து நன்கு கலக்கி விட்டு வைக்கவும்.
- இப்படி மூன்று முறை செய்யவும். இறுதியில் விபிங் க்ரீம் மேலே சேர்த்து பரிமாறவும்.
TRIFFEL
தேவையான பொருட்கள்
- வெண்ணெய் கேக் – 300 கிராம்
- விருப்பமான ஜெலி – 250 மில்லிலீட்டர்
- கஸ்டார்ட் பவுடர் – 250 மில்லிலீட்டர்
- கேக்கை துண்டுகளாக வெட்டி அவற்றை ஒரு கோப்பையில் தட்டையாக வரிசையாக அடுக்கவும்.
- அதன்மீது கஸ்டர்ட் திரவத்தை ஊற்றி அரைமணிநேரம் வரை குளிரூட்டியில் இல் வைக்கவும்.
- அதன் மீது ஜெலி திரவத்தை ஊற்றவும். பின்பு அதனை மீண்டும் ஒரு மணி நேரம் குளிரூட்டியில் வைக்கவும். பின்னர் அதனை எடுத்து பரிமாறவும்.