20 வயதில் ஒரு பையனை தொந்தரவு செய்யும் 7 கேள்விகள்

 

20 வயதென்பது வாலிப பருவத்தின் முதற்கட்டம். இதனை நாம் எமது பாஷையில் இளந்தாரிகள் என்போம். இந்த வயதில்தான் ஆண்மகனிடத்தில் அதிகமான கேள்விகள் எழும். அந்த கேள்விகளை சரியாக கையாண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவை என்னவென இன்று பார்ப்போம்.

 

உயர்கல்வியை தொடர்வது எப்படி ?

20 வயது என்பது உயர்தர படிப்பில் இருக்கும் அல்லது உயர்தர படிப்பை முடித்த ஒரு வயதாகும். உயர்தர படிப்பு முடிந்தவுடன் என்ன செய்ய போகின்றேன் என்பது அடுத்த பிரச்சினையாக இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் உயர்கல்வியை தொடர்வது பற்றிய ஆலோசனைகள் தேவைப்படும். அதிக சந்தேகங்களும் ஏற்படும். அதனால் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் சரியான ஒரு முடிவையும் சரியான தொழில்முறை உயர்கல்வியையும் தொடராவிட்டால், மேலும் தவறான விரும்பாத உயர்கல்வியை தொடர்ந்தால் உங்கள் வாழ்க்கையை நீங்களே கெடுத்துக்கொள்வதற்கு சமம்.

 

இப்பொழுதே வேலைக்குச் செல்வோமா?

20 வயதிலேயே இன்று அதிகமானோர் வேலைக்கு செல்கின்றனர். தன் வயதுடையவர்கள் வேலை செய்யும்போது தனக்கு முடியாதா என எண்ணுகிறார்களோ தெரியவில்லை. இந்த நிலை இன்று அதிகரிக்கின்றது. இதன் பிறகே பலரும் வேலைக்கு செல்ல ஆயத்தமாகின்றனர்.  சிலர் வீட்டில் திட்டு வாங்கி படிக்கச் செல்வதை விட இது மேலானது என்று எண்ணி தனது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொள்கின்றனர்.

 

காதல் எல்லைக்குள் விழுந்தால்?

அதிகமானோர் காதலில் விழுவதும் மற்றும் காதலில் தோல்வியடைவதும் இந்த வயதில்தான். எடுக்கும் தீர்மானத்தை மிகவும் தொலைநோக்கு பார்வையில் யோசித்து எடுக்காத வயதும்கூட. ஆகவே காதலினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் அதிகம். ஆனால் சரியாக இதனை கட்டுப்பாட்டிலும் திட்டமாகவும் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள் தமது வாழ்க்கையில் அழகான சரித்திரத்தையே உருவாக்குகின்றனர்.

 

வருமானம்?

அடுத்த பிரச்சனையான கேள்வி பணம் அல்லது வருமானம். குறிப்பாக பெற்றோரிடம் பணம் பெறும் வயதாகும். தொடர்சிசியாக வாங்கும்போது, வீட்டை எதிர்பார்த்தது போதும் அல்லது அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாதென்ற எண்ணம் ஏற்படும்.  ஆகவே தமது தேவைக்கான பணத்தை தேடிக்கொள்ள பகுதிநேர வேலையைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

 

சேமிப்பது எப்படி?

பணம் கிடைத்து விட்டால் அவற்றை சேமிப்பது பற்றி ஆண்களை விட பெண்களுக்கே தெரியும். ஆண்கள் செலவுபற்றி மட்டுமே யோசிப்பர். அதனால் ஆண்களுக்கு சேமிப்பு  என்பது பிரச்சினையாக காணப்படும்.

 

பிரச்சினைகளை யாரிடம் சொல்வது?

20 வயதை தாண்டி செல்லும்போது ஆண்களுக்கு வரக்கூடிய இன்னொரு பிரச்னைதான் இது. அதாவது தமது பிரச்சினைகளை யாரிடம் பகிர்ந்துகொள்வதென்ற குழப்பம் ஏற்படும். வீட்டிலும் சொல்ல முடியாது ஏனென்றால், பெரியவனாயிற்றே. அதன் முடிவாக இந்த பருவத்தில் காதலை தேடுகின்றனர்.

 

வீட்டுப் பிரச்சினை

சிலருக்கு 20 வயதிலேயே வீட்டுப்பொறுப்புகள் வந்துவிடும். யாரும் பலவந்தமாக உங்கள் மீது பொறுப்பை தராவிட்டாலும், நீங்களாகவே பொறுப்பை எடுக்க முயல எண்ணும் ஒரு வயதாகும். பெற்றோரின் நோய்களை கவனித்தல், வீட்டிற்காக சேமித்தல், தம்பி தங்கையர் இருப்பின் அவர்களின் படிப்பு பற்றிய கரிசணை போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கும். இவ்வகையான பிரச்சினைகள் இந்த வயது ஆண்மகன்களுக்கு வரக்கூடும்.

 

இவைதான் இருபது வயதை அடைந்த ஒரு சாதாரண ஆண்மகனுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள். இம்மாதிரியான கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுப்பதால் மாத்திரமே வாழ்வில் சரியான இலக்கை அடைய முடியும்.